இன்போசிஸ் பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனாயா நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் உள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்குத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை மற்றும் முந்தைய கண்டுபிடிப்புகளின் வெளி விசாரணையை மறுபரிசீலனை செய்வது என்று பிரகடனம் செய்ததன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்-பங்குதாரர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் கூற்று தவறானது.

இன்போசிஸின் ஏழு நிறுவனர்களில் ஒருவரான மூர்த்தி, தான் தொடங்கிய கம்பெனி பற்றித் தெரிந்து கொள்வதற்கான காரணங்களைக் கொண்டிருக்கிறார். நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த பொறியாளர்களின் ஒரு கூட்டம் உருவாக்கியது, அதுவே இன்போசிஸ் பாரம்பரியம் என அழைக்கப்படுகிறது.

மனைவி சுதாவிடம் இருந்து மூர்த்திக் கடன் வாங்கியது
 

மனைவி சுதாவிடம் இருந்து மூர்த்திக் கடன் வாங்கியது

பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் இன் முன்னாள் ஊழியர்களான நாராயண மூர்த்தி, நந்தன் நீல்கனி, என் எஸ். ராகவன், எஸ். கோபால கிருஷ்ணன், எஸ்.டி. ஷிபுலால், கே. தினேஷ் மற்றும் அஷோக் அரோரா, ஆகியோரால் 1981 ஆம் ஆண்டில் இன்போசிஸ் உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனம் 10,000 ரூபாய் என்ற ஆரம்ப மூலதனத்துடன் தொடங்கப்பட்டு இன்போசிஸ் கன்சல்டன்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டது. மூர்த்தி வீட்டின் முன் அறையில் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இருந்தபோதிலும் ராகவனின் வீடு பதிவு செய்யப்பட்ட அலுவலகமாக இருந்தது.

இன்போசிஸ் முதல் ஊழியர்

இன்போசிஸ் முதல் ஊழியர்

இன்போசிஸ் முதல் ஊழியர் நாராயண மூர்த்தி என்று நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அது என் எஸ். ராகவன். அவர் பாட்னி நிறுவனத்திற்குத் தனது பணியை முடிக்கக் கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டு பிறகு தனது நிறுவனத்தில் சேர்ந்தார், மூர்த்தியின் பணியாளர் எண் 4.

1983 வரை இன்போசிஸ் ஒரு கணினியைக் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் மூர்த்தி விரும்பிய வெளிநாட்டுக் கணினியை வாங்க முடியவில்லை. தங்கள் சொந்த கணினியைப் பெறுவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. அது ஒரு டேட்டா ஜெனரல் 32 பிட் MV8000 கணினி ஆகும்.

நீலகனியின் வருகை

நீலகனியின் வருகை

1978 ஆம் ஆண்டில், 23 வயதான நந்தன் நீலகனி ஒரு வேலை தேடி, பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் இன் புனே அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவர் நாராயண மூர்த்தியைக் கண்டார். 2008 ஆம் ஆண்டில், இமாஜினிங் இந்தியாவில் அவர் எழுதியது: "குடும்ப நிறுவனங்கள், பிரமாண்டமான செயல்பாட்டுக்கு உதவியது மற்றும் நிதி கட்டுப்பாட்டுக்கு உதவியது, மாறுபாடான சலுகைகள் இருந்தபோதிலும் அத்தகைய அதிகாரத்தில் சிலர் திறமையுடன் இருந்தனர், சிலர் தன்னிச்சையாகச் செயல்பட்டனர் மற்றும் சிலர் சிறிய பங்குதாரர்களுக்கு அரிதாக லாபம் ஈட்டினர்." மூர்த்தி மற்றும் ஐந்து பேரை ஊக்கப்படுத்தி இந்தியாவில் ஒரு சிறந்த நிறுவனமாக இன்போசிஸை உருவாக்கினர், இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 10.2 பில்லியன் டாலர்.

இன்போசிஸ் முதல் பின்னடைவு
 

இன்போசிஸ் முதல் பின்னடைவு

1989 ல் கேஎஸ்ஏ இன் சரிவு இன்போசிஸை ஒரு நெருக்கடியில் தள்ளியது. நிறுவனர்களில் ஒருவரான அசோக் அரோரா விலகினார்.

மற்றவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அப்பொழுது மூர்த்தி மற்றவர்களிடம், " நீங்கள் அனைவரும் வெளியேற விரும்பினால், வெளியேறலாம். ஆனால் நான் விலகப்போவதாக இல்லை மற்றும் நான் இங்கு இருந்து இதை உருவாக்குவேன்." எனக் கூறினார். நீலகனி, கோபால கிருஷ்ணன், ஷிபுலால், தினேஷ் மற்றும் ராகவன் ஆகியோர் இங்கயே செயல்படப்போவதாகத் தீர்மானித்தனர்.

மூர்த்தி எப்போதுமே மனவருத்தத்துடன் இருந்தார்

மூர்த்தி எப்போதுமே மனவருத்தத்துடன் இருந்தார்

மனைவி சுதாவின் கூற்றுப்படி, அவர் எப்போதும் தனது பணத்தைக் திரும்பி கொடுப்பது பற்றிய மனவருத்தத்துடன் இருந்தார். நான் மூன்று வருடங்களாக மூர்த்தியின் கடன் புத்தகத்தை நிர்வகித்தேன். அவர் பணத்தைக் திரும்பக் கொடுக்கவில்லை, நான் இறுதியாகத் திருமணத்திற்குப் பிறகு அதைக் கிழித்தெறிந்தேன். அந்தத் தொகை ரூ. 4,000 க்கும் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

நாஸ்டாக் பட்டியல்

நாஸ்டாக் பட்டியல்

இன்போசிஸ் 1999 ஆம் ஆண்டில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது. இது நாஸ்டாக் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் முதல் ஐடி நிறுவனமாகவும் இருந்தது. 1999 ஆம் ஆண்டுக் கணக்கின்படி நிறுவனத்தின் பங்கு விலை 8,100 ரூபாயாக அதிகரித்தது, அது அப்பொழுது விலையுயர்ந்த பங்கு ஆகும். அந்த நேரத்தில், இன்போசிஸ் நாஸ்டாக் இல் சந்தை மூலதனத்தின் 20 பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facts about Infosys you probably had no idea about

Facts about Infosys you probably had no idea about
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X