6வது முறையாக ஏலம் விடப்படும் கிங்பிஷர் ஹவுஸ்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு வங்கிகளில் பல மோசடிகளைச் செய்து பல ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு நாட்டை விட்டு எஸ்கேப் ஆகியுள்ள விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஹவுஸ் எஸ்பிஐ தலைமையிலான வங்கி அமைப்புகள் கைப்பற்றியது.

இதனை விற்று வங்கிகள் தங்களது கடன் நிலுவையைக் குறைக்க முடிவுசெய்திருக்கும் நிலையில், கிங்பிஷர் ஹவுஸ்-ஐ விற்பனை செய்யச் சுமார் முறை ஏலம் விடப்பட்டது. ஆனால் இதனை யாரும் வாங்க முன்வரவில்லை.

இந்நிலையில் 6வது முறையாக மீண்டும் ஏலம் விடப்படுகிறது.

விலை குறைப்பு

மல்லையாவின் கிங்பிஷர் வில்லா 5 முறை விற்பனை ஆகாமல் இருந்த நிலையில் 6வது முறையாக இதனை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விடவும் குறைவான அளவிற்கே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 19

கடன் தீர்ப்பு ஆணையம் மற்றும் நிதியியல் சேவைத் துறை ஆகிவை அனைத்து மும்பையில் இருக்கும் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் அலுவலகமான கிங்பிஷர் ஹவுஸ் 6வது முறையாக வருகிற டிசம்பர் 19, காலை 11 முதல் மதியம் 12 மணியளவிலான நேரத்தில் மின்னணு முறையில் ஏலம் விட உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளசு.

முன்தொகை

இதனை வாங்க விரும்புவார்கள் முன்தொகையாக 50 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் எனவும் அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை விபரம்

மே மாத நடந்த ஏலத்தில் கிங்பிஷர் ஹவுஸ் 93.50 கோடி ரூபாய் என்ற விலையில் அறிவிக்கப்பட்ட போது யாரும் வாங்க முன்வராத நிலையில், தற்போது இதன் விலையை 82 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் சுமார் 2401.70சதுரடி பரப்பளவு கொண்டுள்ளது.

 

வாகனங்கள்

இதனுடன் கிங்பிஷர் ஹவுஸ்-க்கு சொந்தமான 9 வாகனங்களை 4,90,000 ரூபாய்க்கு நவம்பர் 11ஆம் தேதி நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vijay Mallya's Kingfisher House to be auctioned for the 6th time

Vijay Mallya's Kingfisher House to be auctioned for the 6th time
Story first published: Tuesday, November 14, 2017, 13:20 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC