செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப் புதிய சேவை அறிமுகம்.. இது ரொம்ப ஈசி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அனைத்து சேவைகளிலும், மானிய திட்டத்திலும் ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தி வரும் மத்திய அரசு, செல்போன் எண் உடனுடம் கட்டாயமாக ஆதாரை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்காகச் செல்போன் பயன்படுத்தும் அனைவரும் செல்போன் ஆப்ரேட்டர்களின் கடைக்குச் சென்று இதனை இணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இது மக்களுக்கும் மிகவும் கடுமையாக இருக்கும் காரணத்தால் இணைப்பத்தில் மக்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனை எளிமைப்படுத்தவே புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அமைப்பு

ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி கொண்டு செல்போன் எண்ணை இணைக்கும் ஒரு திட்டத்தை ஆதார் அமைப்பான UIDAI-யிடம் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்கள் சமர்ப்பித்தது .

ஒப்புதல்

இதற்கு ஆதார் அமைப்பு, டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை மற்றும் முழுமையான விளக்கம் கேட்டு, பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் எளிமையான முறையான முறையில் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என UIDAI அமைப்பின் தலைவரான அஜய் பூஷன் பான்டே கூறியுள்ளார்.

எளிமையான வழக்கம்..

ஆதார் தளத்தில் இருக்கும் மொபைல் எண்கள் அனைத்தையும் இப்புதிய சேவையின் மூலம் இணைத்துக்கொள்ள முடியும். இதனால் மக்கள் செல்போன் ஆப்ரேட்டர்கள் கடைக்குச் செல் வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 முறைகள்

அதேபோல் டெலிகாம் துறை, டெலிகாம் நிறுவனங்களின் வாயிலாக மொபைல் எண் மற்றும் ஆதார் இணைப்பை எளிமைப்படுத்த, 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

1. எஸ்எம்எஸ் வாயிலான ஓடிபி
2. ஐவிஆர்எஸ் முறை
3. டெலிகாம் சேவை நிறுவனங்களின் செயலிகள், வாயிலாக வெரிபிகேஷன் செய்துகொள்ளலாம்.

 

டிசம்பர் 1

ஓடிபி மற்றும் ஐவிஆர்எஸ் வாயிலான வசதிகள் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 6, 2018

மொபைல் எண் உடன் ஆதார் இணைக்க 2018ஆம் ஆண்டுப் பிப்ரவரியே கடைசித் தேதி. ஆகவே செல்போன் பயன்படுத்தும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை மறக்காமல் இணைத்துவிடுங்கள்.

கடைசித் தேதி

அதேபோல் வங்கி கணக்கு, பான் எண், இன்சூரன்ஸ், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு, ஆகியவற்றுடன் டிசம்பர் 31க்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்.

அடுத்த அதிரிபுதிரி..!

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!

இவர்களுக்கு மட்டும் விலக்கு

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதில் இவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது!

ஆதார் கட்டாயம்!

இனி இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யவும் பான், ஆதார் கட்டாயம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Now Link your mobile number to Aadhaar in simple way

Now Link your mobile number to Aadhaar in simple way
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns