நேர்முக தேர்வில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்? (பகுதி 2)

Written By:
Subscribe to GoodReturns Tamil

பணிக்கு விண்ணப்பிக்கும் எந்தவொரு வேலை தேடுபவருக்கும் நேர்முகத் தேர்வு மிகவும் முக்கியமான கட்டமாகும். நேர்காணல் செய்பவர்கள் பல கேள்விகளுடன் தயாராக இருப்பர். வேலைத் தேர்வுக்குரியவர் திறமையான பதில்களுடன் அவர்களைச் சமாளிக்க வேண்டும். நேர்காணல் என்பது நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வேலைச் சம்பந்தமான கேள்விகளையும், வேலை தேடுபவரைப் பற்றிய விவரங்களையும் கேட்பதன் மூலம் திறமையான ஊழியர்களை அடையாளம் காண்பிக்கும் ஒரு தளமாகும். நிறைய நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் பெரும்பாலும் வேலை தேடுபவரைப் பற்றியும், அவரது / அவளது கல்வி, முன் பணி அனுபவம் பற்றி மட்டுமே இருக்கும். எனினும், வேலை தேடுபவர் பற்றிய அறிமுகம் முடிந்தவுடன், நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் தொழில்நுட்பமாக அதாவது வேலைக்கு மிகவும் பொருத்தமான, தேவைப்படும் திறன் குறித்த கலந்துரையாடலாக மாறும். இந்த நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள் மாணவர்களுக்கு, அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்கு, புதியதாக வேலை தேடுபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக நேர்முக தேர்வில் கேட்கப்படும் இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்? (பகுதி1)

9. "நீங்கள் முந்தைய வேலையை விட்டு விட்டதற்கான காரணங்கள் என்ன?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்.

இது நேர்காணலில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வியாகும். நீங்கள் மிகவும் சவாலான பாத்திரத்திற்காக, சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளுக்காக, தொழில் வேடங்களில் வேறுபாடு மற்றும் பொறுப்புகள் முதலியவற்றைத் தேடுகிறீர்கள் என் நேர்மையாகப் பதிலளித்தல் வேண்டும். மேலும், சில நேரங்களில் முந்தைய வேலைச் சலிப்பான மற்றும் குறைவான சவாலாக மாறியுள்ளன. முந்தைய வேலையை விட்டு வெளியேறுவதற்கான முடிவை எடுத்ததன் காரணம் இதுவே ஆகும் என்ற உண்மையை ஒருவர் நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். நேர்மையாக இருப்பது ஒரு நேர்காணலில் மிகவும் மதிக்கப்படும். இந்தக் கேள்விக்குப் பதில் ஒரு நல்ல சம்பள தொகுப்பு வளர்ச்சி எதிர்பார்ப்பு என்பது ஒரு வேலை மாற்றத்திற்கான காரணம் என்பதையும் உள்ளடக்கியது. ஊழியர்கள் பெரும்பாலும் வேலைகளை மாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக நேர்காணலில் கேட்கப்படும் கேள்வி.

நேர்முக தேர்வில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்? (பகுதி 2)

10. "எந்த அழுத்தத்தையும் நீங்கள் கையாண்டீர்களா?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

இந்த நேர்காணல் கேள்வி குறைவான நேரம், குறைந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான திறன் மற்றும் மோசமான சூழ்நிலைகளைக் கையாளுதல் ஆகியவற்றில் வேலை தேடுபவரின் திறன்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பதில் முன்பே தயாரிக்கப்பட வேண்டும் மற்றும் வேலை தேடுபவர் சௌகரிய நிலையில் இல்லாதபோதும், நல்ல முடிவுகளை வழங்கிய சில உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நேர்காணலில் விடையளிக்கும் கேள்வி தெரிவிப்பது என்னவென்றால், எதிர்கால வேலை தேடுபவரின் தொழில்முறை செயல்முறைகளில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் புரிந்து கொள்ளப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மேலும் ஒரு குறுகிய அறிவிப்பில் கூட, உண்மையான வாழ்க்கை வேலை சூழ்நிலைகளைக் கையாள தயாராக உள்ளார் என்பதைக் காட்டுகிறது. எனவே, ஒவ்வொரு வேலை தேடுபவரும் நேர்காணலின் போது இந்தக் கேள்விக்கு நன்கு தயாராக வேண்டும்.

11. "நீங்கள் அணி வீரரா?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலை விண்ணப்பதாரர்களுக்கு இந்தக் கேள்வியைக் கேட்கின்றன. ஒரு பெரிய நிறுவனத்தில் பலவிதமான பணியிடங்கள், துறைகள், திட்டமிட்ட செயல்முறைகள் ஆகியவை இருப்பதால், சக ஊழியர்களுடன் அன்றைய நிகழ்வுகளைத் தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, நேர்காணலின் போது கருணை, பொறுமை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவுக் காட்டிய ஒரு வேலை தேடுபவர், அணியின் பகுதியாகச் செயல்பட முடியும். குழுவில் பணிபுரியும் எடுத்துக்காட்டுகள் தொழில்முறை அனுபவத்தை அடிப்படையாகக் கொள்ளலாம். அல்லது அங்கு நீங்கள் முக்கிய அங்கமாக இருந்த குழு அல்லது வேறு சில செயல்களுக்கு முக்கியப் பங்கு வகித்தீர்கள் என்பதைக் காட்டும். விளையாட்டுகளில் ஒரு அணி வீரராக உங்கள் பங்களிப்பு, கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள் முதலியவையும் நேர்காணலின் போது ஏற்றுக்கொள்ளப்படும்.

12. "உங்கள் பொழுதுபோக்கு மற்றும் விருப்பங்கள் என்ன?"என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

வேலை விண்ணப்பதாரர்கள் பெரும்பாலும் இந்தக் கேள்வியை அலட்சியமாக எடுத்துக்கொண்டு நேர்காணலில் மிகவும் சாதாரணப் பதில்களை அளிக்கிறார்கள். இருப்பினும், இந்தக் கேள்வியின் பதில் மிகவும் துல்லியமானதாக இருக்க வேண்டும், ஏனெனில் நேர்காணலில் ஒட்டுமொத்த ஆளுமை, கற்றல் திறன் மற்றும் ஒரு நபரின் திறமை ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுகிறது. வேலை தேடுபவர்கள் வெறுமனே தங்கள் பொழுதுபோக்குப் படிப்பது, பயணம் செய்வது மற்றும் சமையல் முதலியன எனப் பதில் அளிப்பர். ஆனால் இந்தப் பதில்கள் மிகவும் தெளிவற்றவை மற்றும் மோசமான தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே சுருக்கமான பதில்கள் அழிக்கப்பட வேண்டும். நாவல்கள், சுயசரிதைகள், இலக்கியம் முதலியவற்றை வாசித்தல் அல்லது மலையேற்றம், நதி மிதிவண்டி அல்லது சமையல் உணவுகள், சுவையான உணவு முதலியவற்றைப் பற்றிக் கலந்துரையாடல் பதில்கள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் குறிப்பிட்ட மற்றும் முழுமையான பதிலில் வேலை விண்ணப்பதாரர்கள் அவரின் ஆர்வத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் அவருக்கு அதில் நல்ல அறிவு உள்ளது என்பதையும் காட்டும்.

நேர்முக தேர்வில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்? (பகுதி 2)

13. "நீங்கள் பயணத்திற்கோ அல்லது இடமாற்றத்திற்கோ தயாராக இருக்கிறீர்களா?"என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

பயணத்தை உள்ளடக்கிய வேலை சுயவிவரங்கள் எப்போதும் இந்தக் கேள்வியைச் சுற்றியே இருக்கும். வேலை விண்ணப்பதாரர்கள் வணிக நோக்கத்திற்காகப் பயணிப்பதில் விருப்பமா என்று கேட்கப்படுவார்கள். பயணம் என்பது குறுகிய இரண்டு நாளில் இருந்து நீண்ட ஒரு மாதம் நீடிக்கும் பயணமாக இருக்கலாம். அது அவரவர் வேலையைப் பொறுத்தது. நேர்காணலின் போது வேலை தேடுபவர் பயணத்திற்குத் தயாராக உள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில் பதிலளிக்க வேண்டும். எனினும், குடும்பப் பிரச்சினைகள், உடல்நல கவலைகள், பயண நோய்கள் போன்ற குறிப்பிட்ட வரம்புகள் அல்லது கட்டுப்பாடுகள் இருந்தால், அவை நேர்காணல் செய்பவருடன் பகிரப்பட வேண்டும். மேலும், சில வேலை சுயவிவரங்கள் பணியாளர்களை ஒரு புதிய நகரத்திற்கு மாறுவதற்கு இடப்பெயர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாகத் தேவைப்படுகிறது. வேலை தேடுபவர் இந்தக் கேள்விக்கு நம்பிக்கையுடன் பதில் சொல்ல வேண்டும். ஏதேனும் கட்டுப்பாடுகள் இருந்தால் அதை நேர்மையாகத் தெரிவிக்க வேண்டும்.

14. "உங்களுடைய உத்வேக மனிதர் அல்லது முன்மாதிரி மனிதர் யார்?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

போட்டியாளர் வேலை தேடுபவரின் ஆளுமையை மதிப்பீடு செய்ய முயற்சிப்பார். மேலும் அவர் விரும்பும் ஆளுமை எந்த வகையானவர் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். இந்த நேர்காணல் கேள்விக்கான பதிலாக முன்மாதிரியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். அவரின் என்ன குணங்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு முன்மாதிரியாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் பெற்றோரோ, ஒரு விளையாட்டு வீரரோ, ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தொழிலதிபரோ எவரேனும் முன்மாதிரியாக இருக்க முடியும். பதிலானது அவரின் தலைமைப் பண்பு, பொறுமை, வியாபாரபுத்திசாலித்தனம், நிர்வாகி, கடின உழைப்பாளி, தொலைநோக்கு பார்வை போன்ற பண்புகளை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த நேர்முகத் தேர்வு கேள்வி மூலம் விண்ணப்பதாரரின் நடத்தை மற்றும் ஆளுமை பண்புகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

15. "உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

கிட்டத்தட்ட ஒவ்வொரு நேர்காணலும் ஒரு முடிவுக்கு வரும் போது இந்தக் கேள்வி கேட்கப்படும். இந்தக் கேள்விக்கான பதில் வேலை தேடுபவரால் முன் தயாரிக்கப்பட்டு, பொருத்தமானதாக இருக்க வேண்டும். நேர்காணல் செய்தவரைக் கேட்கும் கேள்விகள், நேர்காணலுடன் தொடர்புடைய, தர்க்கரீதியான மற்றும் கலந்துரையாடல் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். பதிலானது வேலை தேடுபவர் எவ்வளவு கவனமாக நேர்காணலைக் கையாண்டார் என்பதைக் காட்டும். கேட்கப்படும் கேள்விகள் வேலை நேரங்கள், தன் மீதான எதிர்பார்ப்புகள், வேலைப் பொறுப்புகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கேள்விகள் வணிகம் சம்பந்தமாக இருக்க வேண்டும். அற்பமான கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது.

16. "உங்கள் சம்பள எதிர்பார்ப்புகள் என்ன?" என்ற நேர்காணல் கேள்விக்குச் சிறந்த பதில்

வேலை தேடுபவருக்கு நேர்காணலில் இது மிக முக்கியமான கேள்வி ஆகும். சம்பளம் அல்லது ஊதியம் என்பதே மக்கள் ஒரு வேலையை ஒத்துக்கொள்ள மிகவும் முக்கியமான காரணம் என்று நிறுவனம் அறியும். இந்தக் கேள்விக்குப் பதில் நேர்மையாகவும் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். புதியதாக வேலை தேடும் மக்கள், அதேபோன்ற வேலை விவரங்கள் பெறும் தற்போதைய சம்பளங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், சம்பளமானது "தொழில் தரநிலைகளின்" படி இருந்தால் வேலைக்குத் தயாராக இருப்பதாகச் சொல்ல வேண்டும். எனினும், ஒரு அனுபவம் வாய்ந்த தொழில்முறையாளர் "பேச்சுவார்த்தைக்குட்பட்டது" என்று சொல்லலாம். மேலும் அவரது கடந்த கால வேலை அனுபவம், முந்தைய சிடிசி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தலாம். பொதுவாக, முந்தைய சம்பளத்தில் 30-40% உயர்த்தி நேர்காணலில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

மேலே உள்ள கேள்விகளும் பதில்களும் ஒரு வழக்கமான வேலை நேர்காணலில் விவாதிக்கப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளை விளக்குவதற்கு முயற்சி செய்கின்றன. உங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் அல்லது உங்களை 5 வருடங்களில் எப்படிப் பார்ப்பீர்கள் அல்லது சம்பளத்தை அல்லது நிறுவனத்தைப் பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு பற்றிய கேள்விகள் மிகவும் தந்திரமானதாக இருக்கலாம். இந்தக் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கான அடிப்படை பதில்களை உள்ளடக்கியது. உங்கள் தனிப்பட்ட உதாரணங்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் இந்தப் பதில்கள் மேலும் மேம்படுத்தப்படலாம்.

ஒரு வேலை நேர்காணலில் வெற்றி பெற குறுக்கு வழி நிச்சயமாக இல்லை. எவ்வாறாயினும், ஒரு வேலை நேர்காணலுக்கு விழிப்புணர்வுடன் திட்டமிட்டு தயார் செய்யக்கூடிய பல்வேறு வழிகள் உள்ளன. நேர்காணல் கேள்விகளைப் புரிந்துகொண்டு அதன்படி பதில்களைத் தயாரிப்பது மிகவும் முக்கியம். பதில்களைச் சிறப்பாகப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு நேர்காணலில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே நேர்காணலில் கேள்விகள் மற்றும் பதில்களை எதிர்கொள்ள ஒரு முழுமையான திட்டம் மற்றும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HR Interview Questions and Answers for Freshers & Experienced Professionals (part 2)

HR Interview Questions and Answers for Freshers & Experienced Professionals (part-2) - Tamil Goodreturns | நேர்முக தேர்வில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்? (பகுதி 2) - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, November 19, 2017, 18:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns