இனி விமானப் பயணிகள் நேரடியாகப் போர்டிங் செல்லலாம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுபவர்கள் விமான டிக்கெட் எடுக்கும்போதே ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் நேரடியாகப் போர்டிங் செல்லலாம் என இந்திய விமானநிலைய கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்தப் புதிய திட்டம் வருகிற 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

டிஜி யாத்ரா

மத்திய அரசின் கனவு திட்டமான டிஜி யாத்ராவ-வை சோதனை திட்டமாக வருகிற 2018ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடா விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது வெற்றிகரமான இயக்கிய பின் இத்திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

 

ஆதார்

டிஜி யாத்ரா திட்டம் முழுவதும் ஆதார் தரவுகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஒன்று. இதனால் உள்நாட்டு விமானப் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்லும்போதே பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அவர்கள் புக் செய்த விமானத்தையும் வழித்தடத்தையும் காட்டும்.

அதன் பின் சோதனை செய்யப்பட்டு நேரடியாகப் போர்டிங் செய்யப்படும் கேட்டிக்குச் செல்ல அனுமதிக்கப்படும்.

 

இனி தேவையில்லை..

மத்திய அரசின் இப்புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் அடையாள அட்டை, டிக்கெட், போர்டிங் கார்டுகள் ஆகியவற்றைக் காட்டவேண்டிய அவசியம் இருக்காது.

வாயில்..

இதற்காக அனைத்து விமானநிலையத்திலும் பிரத்தியேகமாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, ஆதார் தரவுகளைச் சரிபார்க்கும் சாதனங்கள் அமைக்கப்பட்டும் சோதனை செய்யப்படும்.

போர்டிங்

மேலும் போர்டிங்-ம் QR கோடு அல்லது பயோமெட்ரிக் கொண்டு சரிபார்க்கப்பட்டும் அனுப்பப்படும் என AAI தலைவர் குருபிரசாத் தெரிவித்துள்ளார்.

இப்புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் விரைவாக விமானத்தை அடைவது மட்டும் அல்லாமல் புதிய பயணிகளையும் கவர இது முக்கியக் காரணமாக இருக்கும். எவ்வித பிரச்சனை குழப்பங்கள் இல்லாமல் பயணம் செய்ய இது அடிப்படையாக அமையும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air passengers Can Directly Go To Boarding Gate At Airports

Air passengers Can Directly Go To Boarding Gate At Airports
Story first published: Wednesday, November 22, 2017, 17:35 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns