7,000 கோடியை நன்கொடையாகக் கொடுத்த ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஜியோவின் அறிமுகத்திற்குப் பின்னும் நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாகத் திகழும் பார்தி ஏர்டெல்-இன் தலைவர் சுனில் மிட்டல் தனது 10 சதவீத சொத்து அதாவது சுமார் 7,000 கோடி ரூபாயை நல திட்டங்களுக்காகப்பயன்படுத்த நன்கொடை அளித்துள்ளார்.

இவர் இன்போசிஸ் நந்தனை போல அல்ல..

பார்தி பவுண்டேஷன்

பார்தி ஏர்டெல் நிறுவனம் நல திட்டங்களைச் செயல்படுத்தவதற்காகப் பார்தி பவுண்டேஷன் என்ற அமைப்பைவைத்துள்ளது.

இதனால் வாயிலாகப் பல்வேறு உதவிகளை ஏர்டெல் நிறுவனம் செய்து வருகிறது.

 

7,000 கோடி ரூபாய்

இந்நிலையில் சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பை இணைந்து சுமார் 7,000 கோடி ரூபாய் அல்லது தனது மொத்தசொத்து மதிப்பில் 10 சதவீத சதவீத தொகை மற்றும் நிறுவனத்தின் 3 சதவீத சொத்தை நன்கொடையாகப் பார்திபவுண்டேஷன் அமைப்பிற்கு அளித்துள்ளார்.

முக்கியப் பணி

2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பார்தி பவுண்டேஷன் அமைப்பு ஆரம்பம் முதலே சீஇஓ, சீஓஓ எனத் தலைவர்களுடன்இணைந்து உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் 200க்கும் அதிகமான தொழில்முறையாளர்கள், 8000 ஆசிரியர்கள் இணைந்து வசதி வாய்ப்புகள் இல்லாத கிராமங்களில் வாழும் சுமார் 2,40,000 குழந்தைகளுக்குக் கல்வியைவழங்கி வருகிறது.

இதுவே இந்த அமைப்பின் முக்கியமான பணியாகக் கொண்டு இயங்கிவருகிறது.

 

ஐஐடி டெல்லி

அதேபோல் ஐஐடி டெல்லியின் பார்தி ஸ்கூல் ஆப் டெலிகம்யூனிகேஷன் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட் அமைக்கப்பார்தி பவுண்டேஷன் நிதியுதவி அளித்துள்ளது. அதேபோல் ஐஐடி மும்பையில் பார்தி சென்டர் பார் கம்யூனிகேஷன், ஐஎஸ்பி மொஹாலியில் பார்தி இன்ஸ்டியூட் ஆ பப்ளிக் பாலிஸி ஆகியவற்றை அமைக்கவும் நிதியுதவி செய்துள்ளது.

நந்தன் நிலகேனி

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில்ஒருவரான நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோர் தங்களது சொத்தில் பாதியை அதாவது 1.7 பில்லியன் டாலரை கிவிங் பிலெட்ஜ் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக அளித்தனர்.

கிவிங் பிலெட்ஜ்

பில் கேட்ஸின் மனைவியான மெலின்டா கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் இணைந்து 7 வருடத்திற்கு முன்புஉலகப் பணக்காரர்களைச் சமுக நலத் திட்டத்திற்காக நன்கொடை அளிக்கக் கிவிங் பிலெட்ஜ் என்ற அமைப்பைஉருவாக்கினர்.

இந்தியர்கள்

இந்த அமைப்பில் தற்போது 21 நாடுகளைச் சேர்ந்த 171பேர் உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4 பேர் இந்தஅமைப்பிற்கு நன்கொடை அளித்துள்ளனர். இதில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம்பிரேம்ஜி, பயோடெக்நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தார் ஷா, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமான பிஎன்சி மேனன்ஆகியோர் இதுவரை நன்கொடை அளித்துள்ளது.

தற்போது இவர்களுடன் நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

 

சுனில் மிட்டல்

இந்நிலையில் சுனில் மிட்டல், நந்தன் போல் அல்லாமல் இந்தியர்களுக்காகவும், தானே முன்வந்து ஒரு அமைப்பைஉருவாக்கி அதன் மூலம் சேவைகளைச் செய்து வருகிறார். தற்போது மிட்டல் குடும்பம் செய்துள்ள நன்கொடையும் நாட்டுமக்களுக்குச் சிறப்பாகப் பயன்படும் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bharti family pledges Rs 7,000 crore towards philanthropy

Bharti family pledges Rs 7,000 crore towards philanthropy
Story first published: Thursday, November 23, 2017, 15:57 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns