பிரதமர் மோடி அறிமுகம் படுத்திய இ கவர்னஸ் ‘உமங்’ செயலி பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்வதேச சைபர் ஸ்பேஸ் மாநாட்டைத் துவக்கி வைத்து புது டெல்லியில் இன்று உரையாற்றினார். கூட்டத்தினைத் துவக்கி வைத்த மோடி உலகின் மிகப் பெரிய திட்டமாக டிஜிட்டல் இந்தியா இருக்கும் என்றும் இதனால் குடிமக்கள் பல வகையில் பயன்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தின் ஒரு பணியாகவே உமங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் 100 மத்திய மற்றும் மாநில அரசு சேவைகளை இந்த ஒரே செயலி அளிக்கும் என்றார்.

 மொபைல் தளங்கள்

மொபைல் தளங்கள்

புதிய ஆளுமைக்கு ஒருங்கிணைந்த மொபைல் செயலி என்பதே உமங் ஆகும். ஏற்கனவே இந்தச் செயலி கூகுள் பிளே ஸ்டோர், விண்டோஸ் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

உருவாக்கம்

உருவாக்கம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த உமங் செயலியினை மத்திய எலக்டிரானிக்ஸ் மற்றும் ஐடி துறை மற்றும் தேசிய இ-கவர்னனஸ் பிரிவும் சேர்ந்து உருவாக்கியுள்ளன.

சேவைகள்
 

சேவைகள்

உமங் செயலியில் இந்த மாநில மற்றும் மத்திய அரசு மின்னணு சேவைகள் , ஆதார், டிஜி லாக்கர் போன்ற பல தரப்பட்ட செயைகளை ஒரே தளத்தில் இந்த மொபைல் செயலி மூலம் பெற முடியும்.

உங்களது அரசு நிறுவன சேவை கட்டணங்கள், வருமான வை தாக்கல், சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங், பிஎ போன்ற சேவைகள் எல்லாம் கிடைக்கும்.

 

கணினி மற்றும் இணையதளம்

கணினி மற்றும் இணையதளம்

உமங் செயலி மொபைல் மட்டும் இல்லாமல் கணினி, இணையதளம், ஐவிஆர், எஸ்எம்எஸ் போன்றவற்றிலும் பெற முடியும். மேலும் இந்தச் செயலி பயன்படுத்துபவர்களுக்குக் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வாடிக்கையாளர் செவை உதவிக் கிடைக்கும்.

உமங் செயலி எப்படி வேலை செய்கிறது?

உமங் செயலி எப்படி வேலை செய்கிறது?

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றுக்குச் சென்று உமங் செயலியினைப் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது 97183-97183 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் அளிப்பதன் மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்யும் இணைப்பினை பெற முடியும்.

இணைப்புகள்

இணைப்புகள்

உமங் செயலியில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் உங்களது சமுக வலைத்தளக் கணக்கு விவரங்களை இங்கு அளிக்க முடியும். உமங் செயலியில் கணக்கு துவங்கிய பிறகு சேவைகள் பிரிவுக்குச் சென்று பலதரப்பட்ட அரசு சேவைகளைப் பயன்படுத்த முடியும். எந்தப் பிரிவு சேவைகள் வேண்டும் என்பதை ஃபில்ட்டர் செய்து பயன்படுத்தலாம்.

தற்போதைய செயலி

தற்போதைய செயலி

மத்திய அரசு 150 சேவைகள் அளிக்க உள்ள நிலையில் தற்போது அதில் 45 சேவைகள் மட்டும் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிற சேவைகளுக்கு விரைவில் புதுப்பிப்புகள் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi launches e governance app Umang for Android, iOS

PM Modi launches e governance app Umang for Android, iOS
Story first published: Thursday, November 23, 2017, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X