ஒவ்வொரு வீட்டிலும் மாதம் 45,000 ரூபாய் சம்பளம் வாங்கும் பெண்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

நாள் முழுவதும் வேலை, லீவ் கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு, அதுவும் பண்டிகைன்னு வந்துட்டா டபுல் ஷிப்டில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், சம்பள உயர்வு, ப்ரோமோஷன் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. இப்படிப்பட்ட வேலைக்கு செல்ல யாருக்காவது விருப்பமா..? கண்டிப்பாக இருக்காது.

ஆனால் இதையே தான் வீட்டில் இருக்கும் அம்மாக்கள், மனைவிகள், சில இடங்களில் மகள்கள் முகம் சுளிக்காமல் காலம் முழுவதும் செய்துவருகின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும் தெரியுமா..? கேட்டா ஆடிப்போயிருவிங்க..

ஆய்வு

2011ஆம் ஆண்டின் இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சியை மையமாக வைத்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) செய்த ஆய்வில், இந்திய பெண்கள் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 6 மணிநேரம் சம்பளம் வாங்காமல் வேலை செய்கின்றதாக கணித்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி

எவ்விதமான ஊதியமும் வாங்காமல் அவர்கள் செய்யும் பணிகள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்து வருகிறார்கள்.

இதை ஒத்துக்கொள்ளாதவர்கள் ஒரு வாரம் வீட்டில் இருக்கும் பெண்களின் உதவில் இல்லாமல் உங்களின் தினசரி வேலையை சிறப்பாக செய்ய முடியுமா என்று சந்தித்து பாருங்கள், இல்லையெனில் முயற்சி செய்துப்பாருங்கள். விடை உங்களுக்கு கிடைத்துவிடும்.

 

எவ்வளவு சம்பளம்..?

இப்படிப்பட்டவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்ற சின்ன கணக்கைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

2 குழந்தைகள்

ஒரு நாளுக்கு 12-14 மணிநேரம் வரையில் 2 குழந்தைகளை கவனித்துக்கொள்ள சராசரியாக 12,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

நம்ம ஊர்களில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் வாங்கப்படும் தொகை ஒரு குழந்தைக்கு கிட்டத்தட்ட 8,000 ரூபாய் என்பது குறிப்பிட்டத்தக்கது.

 

சமையல்

வீட்டில் இருக்கும் 3-4 பேருக்கு தனித்தனியார் சமைக்க மாதம் 6,000 ரூபாய்

வீட்டி வேலைகள்

வீட்டை சுத்தம் செய்தல், துணி துவத்தல் போன்ற பணிகளுக்காக மாதம் 3,000 ரூபாய்.

நிதி கணக்கீடுகள்

ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்யவேண்டும், எந்த விஷயத்தில் செலவை குறைக்கலாம், அவரச செலவுகளை சமாளிப்பது போன்ற முக்கியமான நிதியியல் பணிகளை மேற்கொள்ள மாதம் 4,000 ரூபாய்.

பெரியவர்கள் கவனிப்பு

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்ப்பட்டால் அவர்களை கவணித்துக்கொள்வதற்காக மாதம் 6,000 ரூபாய்

கல்வி

இன்றைய பள்ளி பாடத்திட்டங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வேலைகள், குழந்தைகளை விடவும் அவர்களின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பணிகள் விட அவர் பெற்றோர்கள் தான் அதிகமாக செய்யவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாய்மார்களே அவர்களுக்கு அதிகளவில் உதவி செய்கிறார்கள் இதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை மாதம் 6,000 ரூபாய்

டிரைவர்

இன்று பெரும்பாலான பெண்கள் வாகனங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர், இல்லையெனில் இந்த பணிக்காக ஒரு நபரை நியமித்தால் கணிசம் மாதம் 10,000 ரூபாய் அளிக்க வேண்டி வரும்.

இதனை நம் வீட்டு பெண்களே செய்வதால் மாதம் 8,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.

 

மொத்த தொகை

தற்போது செய்த குறைந்தப்பட்ச தொகையின் மொத்த அளவு 45,000 ரூபாய். ஆதாவது மாதம் 45,000 ரூபாய்க்கு செய்யப்படும் வேலைகள் அனைத்தும் ஹோம்மேக்கர், ஹவுஸ்வைப் என்று எளிய சொற்களால் சொல்லப்படும் நம்ம வீட்டு பெண்கள் மாதம் முழுவதும், வரும் முழுவதும் செய்கின்றனர்.

இதில் சொல்லாத பிற வேலைகளும் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

இந்திரா நூயி

தமிழ்நாட்டு பெண்ணான இந்திரா நூயி தற்போது பெப்சி கோ என்னும் உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். இன்றளவும் அலுவலக பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றால் ஒரு சராசரி தாய் வீட்டில் என்னென்ன பணிகளை செய்வார்களோ அனைத்தும் அவர் செய்கிறார்.

இதனை அவர் பெருமையாக பல மேடைகளில் கூறியுள்ளார்.

 

மனுஷி சில்லார்

சமீபத்தில் உலக அழகி போட்டியில் வெற்றிப்பெற்ற இந்திய பெண் மனுஷி சில்லார் அவர்களிடம் உலகிலேயே யாருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என கேட்டப்போது அவர் கூறிய பதில் அம்மா.

வீடியோ

மனுஷி சில்லார் அழகை விட அவர் கூறிய அழகான பதிலை பாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know How much salary a homemaker should get?

Do you know How much salary a homemaker should get?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns