பெங்களுரூவில் கொடிக்கட்டி பறக்கும் ஜூம்கார்.. அமெரிக்கர்களின் ஐடியா சூப்பர்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பெங்களுரை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஜூம்கார் நிறுவனம் இந்தியாவில் சுமார் 5 வருடமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ் தற்போது 3000க்கும் அதிகமான கார்களைச் சுமார் 26 நகரங்களில் வெற்றிகரமாக இயங்கி வகுகிறது.

அனைத்தையும் தாண்டி இந்நிறுவனத்தை உருவாக்கியது இரு வெளிநாட்டவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்நிறுவனத்தை உருவாக்கிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

கல்லூரி படிப்பு

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த கிரெக் மோர்கன் மற்றும் டேவிட் பேக் ஆகியோர் எந்த விதமான ஐடியாவும் இல்லாமல் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவில் பிஸ்னஸ் செய்வதற்காக வந்தனர்.

இந்தியா அல்லது சீனா

கிரெக் மோர்கன் கல்லூரி படிப்படை முடித்த பின்பு வங்கித்துறையில் பணியாற்ற துவங்கினார், அதே நிறுவனம் இந்தியாவில் வர்த்தகம் செய்து வந்ததால், இந்தியா மற்றும் அதன் வர்த்தகச் சந்தை குறித்து முழுமையாகப் புரிதலை கொண்டு இருந்தார் கிரெக்.

இந்தியா பயணம்

இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் சில நண்பர்களுடன் துணையுடன் அமெரிக்காவில் வேலையை விடுத்து இந்தியாவை வெறும் மேம்ப்பில் மட்டும் பார்க்காமல் நேரடியாகப் பார்க்க இந்தியா வந்தார்.

டேவிட் பேக்

கிரெக் இந்தியா வரும்போது டேவிட் பேக் தன்னுடன் அழைத்து வந்தார், இந்தியா வந்த சில நாட்களிலேயே இங்கு வாடகை கார்களுக்குப் பெரிய அளவிலான தேவையும் வரவேற்பு உள்ளதை இருவரும் உணர்ந்தனர்.

திடீர் மாற்றம்

கிரெக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு ஆரம்பம் முதலே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் வர்த்தகம் மற்றும் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆனால் இந்தியா வந்த பின்னர் இவர்கள் தங்களது முடிவை மாற்றிப் போக்குவரத்துத் துறையில் இறங்கினர்.

2011இல் துவக்கம்..

பலகட்ட முயற்சிகள், ஆய்வுகள், வடிவமைப்புகளுக்குப் பின்பு கிரேக் மற்றும் டேவிட் ஆகியோர் மணிநேரக் கணக்கீட்டில் கார் வாடகை தளத்தை உருவாக்கினர்.

முதல் பிரச்சனை

இந்தியாவில் வாடகை கார் வர்த்தகத்தைத் துவங்க கார்கள் தேவைப்பட்டது அதுவும், மஞ்சள் நிற எண் பலகைகள் கொண்ட கார்கள். ஏற்கனவே கிரெக் தன்னிடம் இருக்கும் பணத்தை முழுவதையும் ஜூம்கார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது நிலையில், நிறுவனமே கார்களை வாங்க முடியாது.

ஆன்லைன் டாக்ஸி

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவைகள் பிரபலம் அடைந்தது. இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான ஓலா கேப்ஸ் ஒட்டுநர்களிடம் ஒப்பந்த முறையில் கார்களை இணைத்து டாக்ஸி சேவை அனைத்து வந்தது.

முன்மாதிரியாக

இதனை ஜூம்கார் முன்மாதிரியாகக் கொண்டு இயங்க பெங்களூரில் இருக்கும் முக்கியமான வாடகை கார் நிறுவனங்களின் உதவியை நாடினோம், நாங்கள் தேர்வு செய்த 5 பேரில் எங்கள் திட்டம் பிடிக்காமல் 4 பேர் ரத்துச் செய்து விட்டார்கள் எனக் கிரெக் கூறினார்.

எஞ்சியிருந்த ஒரு நிறுவனம் ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்.

 

கிரிஸ்துமஸ் விடுமுறை

அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் சலிப்படைந்த கிரெக், கிரிஸ்துமஸ் விடுமுறைக்காக விமான டிக்கெட் புக் செய்தார், ஆனால் மீண்டும் இந்தியா திரும்ப வருவதற்காக ரிட்டன் டிக்கெட் தான் பதிவு செய்யவில்லை எனவும் கூறினார் கிரெக்.

மீண்டும் இந்தியா

ஆனால் ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் எங்களது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து. இதுவே எங்களது முதல் வெற்றி, இதனால் கிரிஸ்துமஸ் விடுமுறைக்காக டிசம்பர் 23ஆம் தேதி சென்று மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியதாகக் கிரெக் கூறினார்.

நம்பிக்கை

வர்த்தக முன்மாதிரி மற்றும் வர்த்தகத் துவக்கத்தில் மக்கள் மத்தியில் எங்கள் நிறுவனம் மீதான நம்பிக்கை சற்று குறைவாகவே இருந்தது.

ஜூம்கார் துவக்கம்

ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கிரெக் மற்றும் டேவிட் தங்களது ஜூம்கார் வர்த்தகத்தை 2013ஆம் ஆண்டில் துவங்கினர். இதனுடன் மஹிந்திரா நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் சில கார்களையும் தளத்தில் இணைத்து வெற்றிகரமாக வர்த்தகம் துவங்கியது ஜூம்கார்.

முதலீடும் தொழில்நுட்பமும்

2015ஆம் ஆண்டு வரை ஜூம்கார் தளம் மனிதர்கள் வாயிலாகவே இயங்கி வந்தது. இதுவே வர்த்தக விரிவாக்கத்திற்குப் பெரிய தடையாக அமைந்தது.

இதன் பின் 2013ஆம் ஆண்டில் 7,00,000 டாலர் வரையிலான முதலீட்டை ஈர்த்துத் தளத்தை மேம்படுத்தினோம். மேலும் விரிவாக்கத்திற்காகச் சிகோயாகக் கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து முதலீட்டைப் பெற்றோம்.

 

வலிமையான அணி

இந்த முதலீட்டின் வாயிலாக ஜூம்கார் வலிமையான அணி மற்றும் போர்டு உடன் கூட்டணி ஆகியவை கிடைத்தது என ஜூம்கார் தலைவர்கள் கூறினர்.

5 வருடம்..

கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் வர்த்தகம் விரிவாக்கம் செய்து பல மாற்றங்களுடன் தற்போது வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே காரை டெலிவரி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். அதுமட்டும் அல்லாமல் அனைத்து விமான நிலையங்களிலும் எங்களது கார்கள் கிடைக்கும் வகையில் அனைத்துத் தர வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளோம்.

ZAP சேவை

இந்த வருடம் கூடப் புதிதாக ZAP என்னும் சேவையை ஜூம்கார் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூம்கார்களில் இருக்கும் கார்களைப் பயன்படுத்தும் போது, அதில் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தைக் கமிஷனாக ஜூம்கார் பெற்றுக்கொள்கிறது.

 

3000 கார்கள்

இந்தியாவில் தற்போது ஜூம்கார் பெங்களூர், புனே, டெல்லி, மும்பை, சென்னை, ஹைதெராபாத், சண்டிகர், கொல்கத்தா, அகமதாபாத், கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், லூதியானா, மங்களூர்-மணிப்பால், மைசூர், வைசாக், நாக்பூர், கொச்சி, உதய்பூர், விஜயவாடா, சூரத், சிலிகுரி,
லக்னோ, குவஹாத்தி ஆகிய பகுதிகளில் சுமார் 3000 கார்களை வைத்து சேவை அளித்து வருகிறது.

வாடிக்கையாளர்

தற்போதைய நிலையில் ஜூம்கார் நிறுவனத்தில் சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஜூம்கார் மாடலை முன்மாதிரியாக வைத்து இந்தியாவின் பெரு நகரங்களில் தற்போது பல நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.

45 மில்லியன் டாலர் முதலீடு

இன்று மிகப்பெரிய அளவில் ஒரு வெற்றி மாடலாக உருவாகியுள்ள இந்த வாடகை கார் பிளாட்பாரம் நிறுவனமான ஜூம்கார் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, போர்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

இதுவரை இந்நிறுவனம் 45 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்த்துள்ளது. இதில் அதிகமான முதலீடு செய்துள்ளது சிகோயா கேப்பிடல்.

 

டாப் 10

இன்றளவில் ஜூம்கார் இந்தியாவின் டாப் 10 இன்னோவேஷன் நிறுவனங்களில் பட்டியலில் இடம்பெற்று மக்கள் மத்தியிலும், அதன் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This is how Zoomcar started and reached success point

This is how Zoomcar started and reached success point
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns