குஜராத் தேர்தலையொட்டி 20 வருட கொள்கையை மாற்றும் மோடி அரசு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், 20 வருடமாக நடைமுறையில் இருந்து வரும் கொள்கைகளை மாற்றும் பணியில் மோடி அரசு மிகவும் மும்மரமாகச் செயல்பட்டு வருகிறது.

20 வருட கொள்கைள்

இந்தியாவில் தொழிற்துறையைக் கட்டமைத்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு சென்ற தொழிற்துறை கொள்கை 1991 மற்றும் யுபிஏ ஆட்சியில் 2011ஆம் ஆண்டுக் கொண்டு வரப்பட்ட புதிய உற்பத்தி கொள்கைகளை மாற்றும் பணியில் காமர்ஸ் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இறங்கியுள்ளார்.

எல்லாம் ரெடி..

புதிய கொள்கைக்கான அறிக்கை முழுமையாகத் தயாராக உள்ளது. ஆகஸ்ட் மாதமே தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பு புதிய கொள்கையை வடிவமைப்பதற்காக ஆலோசனை அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது.

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கொள்கைகள் 1991ஆம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட தொடர் மாற்றங்கள் கருத்தில் இருந்து சர்வதேச சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமையான பொருளாதாரத்தை அடையும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பியூச்சர் ரெடி..

எதிர்கால இந்தியாவைச் சிறப்பான முறையில் உருவாக்குவதற்காகப் பியூச்சர் ரெடி என்ற கண்ணோட்டத்தில், மோடி அரசு இப்புதிய தொழிற்துறை கொள்கைகளை வடிவமைத்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

முதலீடும் வேலைவாய்ப்பும்

இப்புதிய கொள்கையின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் 100 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடும், நீண்ட கால நோக்கில் அதிகளவிலான பல மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இப்புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

20-25 வருடம்

தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கும் தொய்வுக்கும் மத்தியிலான இடத்தில் இருக்கும் காரணத்தால், அடுத்த 20-25 வருடங்களுக்கு உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு அனைத்து விதமான காரணிகளையும் கணக்கிட்டு கொள்கைகளை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது வேலைவாய்ப்பு சந்தையும் பெரிய அளவிலான வளர்ச்சியைக் காணும் எனத் தெரிகிறது.

சிறப்புப் பிரிவு

மத்திய அரசு இந்தியா பொளாதார வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு எனச் சிறப்புப் பிரிவை உருவாக்கிய அதன் மூலம் தகவல்கள் பெற்று கொள்கைகளை வடிவமைத்துள்ளது.

சவால்

மோடி அரசுக்குத் தற்போது இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையில் தொடர் சரிவுதான். இதற்கு முக்கியக் காரணமாக வளரும் தொழில்நுட்பமான ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளது எனவும் நம்புகிறது. இதற்காகவே இந்தத் தனிப்பிரிவை அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆய்வு

ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உலகளவில் 800 மில்லியன் அதாவது 80 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள் என மெக்கென்சி அண்ட் கோ ஆய்வுகள் கூறுகிறது.

இந்த 80 கோடி வேலைவாய்ப்புகள் இழப்புப் பாதிப்புகள் 2030ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்படப்போகும் அளவீடுகள்

 

இந்திய உற்பத்தித் துறை

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் 30-40 சதவீதம் வரையில் குறைவான வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளது என டீம்லீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்னிய முதலீடு

மோடியின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறையில் அன்னிய முதலீட்டு அளவுகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக டெலிகாம், மீடியா, பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் எனத் துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டு அளவைத் தளர்த்தப்பட்டது.

நம்பிக்கை

மோடி தலைமையிலான அரசு அறிவித்த சவரன் பத்திர திட்டம், பணமதிப்பிழப்பு, மேக் இன் இந்தியா, ஜிஎஸ்டி என அனைத்து திட்டங்களும் அறிவிக்கும் போது மக்களுக்கு அதன் மீது அதிகளவிலான நம்பிக்கை இருந்தாலும், சந்தையில் இதன் வெளிப்பாடு மற்றும் வளர்ச்சி என்ற காரணியில் பெரிய அளவிலான தாக்கம் எதுவுமில்லை.

புதிய கொள்கை

இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைமுறையில் இருக்கும் தொழிற்துறை கொள்கைகளைச் சுரேஷ் பிரபு மாற்றி அமைக்க உள்ளார். இந்த மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், சர்வதேச சந்தையில் முக்கியமான இடத்தைக் குறுகிய காலத்தில் பிடிக்கும் என நம்பப்படுகிறது.

இந்தத் திடீர் மாற்றம் யாருக்காக..? குஜராத் தேர்தலை வெல்வதற்காகவா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் அழுத்தமாக எழுகிறது என்றே சொல்ல வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi government changing two decade old policy

Modi government changing two decade old policy - Tamil Goodreturns | குஜராத் தேர்தலையெட்டி 20 வருட கொள்கையை மாற்றும் மோடி அரசு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns