சென்னைக்கு வந்த புதிய பிரச்சனை.. தமிழக அரசு இதற்கு என்ன செய்யபோகிறது..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை இந்தியாவில் ஆட்டோமொபைல், ஐடி, ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வோர் சந்தை, உற்பத்தி என இந்தியாவின் எந்த ஒரு முக்கிய நகரத்திலும் இல்லாத கலவையான வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது சென்னை.

ஆனால் இப்போது அனைத்துத் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கத்தில் உள்ளது, ஸ்டீல், எஃகு பொருட்களை நம்பியிருக்கும் சென்னையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் வர்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவு அடைந்துள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

எந்த வேலையுமில்லை..

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு சென்னையில் இருக்கும் நிறுவனங்களுக்கு எந்தவிதமானப் புதிய வர்த்தகமும் கிடைக்கவில்லை, இருக்கும் வர்த்தகத்தைத் தக்க வைத்துக்கொள்ளவே பெரிய போராட்டமாக மாறிவிட்டது.

மேலும் புதிய மாநிலங்கள் முதலீட்டைப் பெரிய அளவில் ஈர்க்க முனைந்துள்ளது, இதனால் சென்னை தனது சிறப்பை வேகமாக இழந்து வருகிறது.

 

குஜராத்

குறிப்பாகப் பல முன்னணி நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் அதிகளவிலான முதலீட்டை செய்யத் துவங்கியுள்ளனர், ஏற்கனவே பல வர்த்தக வாய்ப்புகள் சென்னையை விட்டு வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டது என ரூசக் கன்தர் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு இல்லை..

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், 130 கோடி மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்று 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார் பிரதமர் மோடி. ஆனால் இப்போது வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

மேலும் அனைவருக்கும் வாய்ப்பு என்பதை நிறைவேற்ற வேண்மென்றே ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவுகிறது.

 

உற்பத்தி தளம்..

இந்தியாவின் உற்பத்தி சந்தைக்கு அடித்தளமாக விளங்கிய தமிழ்நாட்டின் சென்னை நகரம், தற்போது அமெரிக்காவில் இருக்கும் முக்கியமான மாநிலங்கள் சந்திக்கும் அதே பிரச்சனையை சந்திக்கத் துவங்கியுள்ளது.

வளர்ச்சியில் குறைந்த மாநிலங்கள்

இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சியில் குறைவாக இருக்கும் மாநிலங்களுக்குப் புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஈர்ப்பது மிகவும் எளிது.

மேலும் இத்தகைய மாநிலங்களின் வளர்ச்சி  அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இணையாக வளர வாய்ப்புகள் உண்டு.

சுதந்திரத்திற்குப் பின்..

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, தென் மாநிலங்கள் வட மாநிலங்களைக் காட்டிலும் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தப் போக்குத் தற்போது மத்திய அரசின் திட்டங்களால் முழுமையாகக் களைய உள்ளது என்ற சொல்ல வேண்டும். இதன் மூலம் இந்திய மாநிலங்கள் அனைத்துத் தனக்கான வாய்ப்புகளைப் பெற இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தெலுங்கானா

இன்றைய சூழ்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்த தெலுங்கானா மாநிலத்திற்கே தற்போது அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது, காரணம் இப்புதிய மாநிலத்தில் கிராமப்புற நிலங்கள் எக்கசகமாக உள்ளது.

இதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சிக்காக இந்த மாநிலங்கள் அதிகளவிலான நிலங்களை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வர முடியும்.

 

ஆந்திர பிரதேசம்

அதேபோல் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி பகுதியை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய நகரத்தை சிங்கப்பூர் போன்று இந்தியாவின் பின்டெக் சென்டராக மாற்ற இம்மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயடு திட்டமிட்டு வருகிறார்.

அதிகளவிலான முதலீடு..

இப்புதிய மாநிலத்தைச் சிங்கப்பூருக்கு இணையாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள அரசு, உள்கட்டமைப்பிற்குப் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது, இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

ஆக ஆந்திர பிரதேசம் தற்போது முதலீட்டாளர்களுக்கு முக்கிய இலக்காக மாறியுள்ளது.

 

தென் மாநிலங்கள்

இந்தியாவின் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகியவை வடக்கில் இருக்கும் பீகார், உத்திரபிரதேச மாநிலங்களை விடவும் சுகாதாரத்திலும், பொருளாதாரத்தில் முன்னோடியாக உள்ளது.

உதாரணமாக ஆந்திரபிரதேசத்தில் 5 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், உத்திர பிரதேசத்தை விடவும் அதிகளவிலான தொழிற்சாலைகள் உள்ளது.

 

இழந்து வரும் சிறப்பு..

இந்தியாவின் தொழிற்துறை நகரமாகவும், சர்வதேச உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த இடமாக இருக்கும் சென்னை. அரசு மாற்றம், ஜிஎஸ்டி அரசு திட்டங்களால் நீண்டகால நோக்கில் பெரிய அளவிலான சரிவை மட்டுமே சந்திக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது.

ஐடி

சென்னை ஆட்டோமொபைல் உற்பத்திக்கு முன்னோடியாக இருப்பதைப்போல தென்னிந்திய மாநிலங்கள் ஐடி துறைக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

ஆனால் 154 பில்லியன் டாலர் வர்த்தகத்தைக் கொண்டுள்ள இந்தத் துறை தற்போது வேலை வாய்ப்பு இழப்பு, வர்த்தகக் குறைபாடு, விசா பிரச்சனைகளின் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

திட்டமிடப்பட்ட முதலீடு

தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்ட முதலீடு மட்டும் 5.7 பில்லியன் டாலர், ஆனால் இந்த அளவு 2015ஆம் ஆண்டில் இருந்து மாறாமல் இருப்பது, பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் ஆதிக்கம் தொடர்ந்து சரிந்து வருவதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு

தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசின் போக்கு ஜெ. மரணத்திற்குப் பின்பு பெரிய அளவிலான பிளவும் மாற்றமும் கண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவே அனைத்துத் தலைவர்களும் போராடி வரும் நிலையில் மாநிலத்தின் தலையெழுத்தே மாற்றப்போகும் இந்தப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறதா என்பது தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது

மக்களின் கருத்து..

தமிழக அரசு இப்போது என்ன செய்யவேண்டும், எப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மக்களாகிய நீங்கள் கூற விரும்பும் யோசனைகளையும் கருத்துக்களையும் பதிவிடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

chennai going to face big trouble..! Does TN govt know this

chennai going to face big trouble..! Does TN govt know this
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns