உங்கள் வீட்டில் கார் இருக்கிறதா? அப்படியானால் சிலிண்டர் மானியம் ரத்து..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உங்கள் வீட்டில் கார் இருந்தால், விரைவில் நீங்கள் சமையல் எரிவாயுவிற்குப் பெற்று வரும் மானியம் ரத்துச் செய்யப்படும்.

நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்தும் 3.6 கோடி நபர்கள் போலியாகச் சமையல் எரிவாயு மானியத்தினைப் பெற்று வந்தது கண்டறியப்பட்டு ரத்து செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு 30,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. தற்போது இதுவே கார் வைத்திருப்பவர்கள் மீது திரும்பியுள்ளது.

ஆரம்பக் கட்டம்

மத்திய அரசிடம் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி இதற்கான பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசு சில மாவட்டங்களில் இருந்து கார் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்கள் ஆர்டிஓ உதவியுடன் பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறினால் மிகப் பெரிய அளவில் மானியம் சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சிலரது வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட கார்கள் இருந்து மானியம் பெற்று வருவது தெரியவந்துள்ளது.

 

10 லட்சம் வருவாய்

சென்ற ஆண்டு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக யாருக்கெல்லாம் ஆண்டு வருவாய் உள்ளதோ அவர்களுக்கு எல்லாம் எரிவாயு மானியத்தினை ரத்து செய்தது.

இதற்காக மத்திய பெட்ரோல் அமைச்சகம் வருமான வரித் துறை மூலம் பான், வீட்டு முகவரிகள் மற்றும் மொபைல் என்ன விவரங்களைப் பெற்று சமையல் எரிவாயுவிற்குப் பெற்று வந்த மானியத்தினை ரத்து செய்தது.

 

எளிதல்ல

எனினும் துறை சார்ந்த வல்லுநர்கள் இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் வாகன பதிவு விவரங்கள் மட்டும் இல்லாமல் சம்மந்தப்பட்ட முகவரியிலும் இது குறித்து ஆய்வு நடத்த வேண்டி வரும் என்று கூறுகின்றனர்.

மானியத்தினை விட்டு தர கோரிக்கை

எல்பிஜி இணைப்புகளுடன் ஆதார் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் மட்டும் இல்லாமல் மானியத்தினை விட்டுத் தாருங்கள் என்ற கோரிக்கை மூலமாக மத்திய அரசு பல்வேறு விதமாக எரிவாயு மீதான மானியத்தினைத் திரும்பப்பெற கோரிக்கை வைத்து வருகிறது.

இந்த வழிமுறைகள் மூலம் 75 மில்லியன் போலி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எல்பிஜி இணைப்பு வைத்துள்ளவர்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை

நவம்பர் மாதம் வரை இந்தியாவில் மொத்தமாக 251.1 மில்லியன் சமையல் எரிவாயு இணைப்பு பயன்படுத்துபவர்கள் உள்ளதாகவும், அதில் 121. மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் கீழும், 64 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாரத் பெட்ரோலியம் கீழும், 65.9 மில்லியன் நபர்கள் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கீழும் எரிவாயு இணைப்புகளை வைத்துள்ளனர்.

பிரதான மந்திரி உஜாவ்லா யோஜனா திட்டம்

பிரதான மந்திரி உஜாவ்லா யோஜனா திட்டம் கீழ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள 31.6 மில்லியன் ஏழைகளுக்கு இலவசமாக எரிவாயு இணைப்பினை கொடுக்கத் திட்டம் ஏற்றி நிறைவேற்றி வருகிறது.

உலகின் மிகப் பெரிய பணப் பரிமாற்ற திட்டம்

நேரடி மானிய திட்டமானது உலகின் மிகப் பெரிய பணப் பரிமாற்ற திட்டமாக உள்ளது. இத் திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டில் மட்டும் 57,029 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஆகியுள்ளதாகவும், பஹல் திட்டம் மூலமாக 29,769 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்துள்ளதாகும் தரவுகள் கூறுகின்றன.

உணவு மற்றும் பொது விநியோக திட்ட மானியம் சேமிப்பு

உணவு மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் மட்டும் மத்திய அரசுக்கு 14,000 கோடியும், வேலை வாய்ப்பு உறுதி அளிக்கும் திட்டத்தின் கீழ் 11,741 கோடியும் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு மிச்சம் ஆகியுள்ளது. தற்போது 17 அமைச்சகங்களில் இருந்து 80 பல்வேறு திட்டங்கள் நேரடி மானியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவு

கடந்த சில மாதங்களாகச் சர்வதேச விலை குறியீடு அதிகரித்து வந்ததால் அரசு எதிர்பார்த்த 13,000 கோடி ரூபாய் என்பது 15,000 கோடியாக மானியம் அளித்துள்ளது.

குறைக்கப்பட்டு வரும் மானியம்

அதே நேரம் மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்த சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இது 200 ரூபாய் வரை அதிகரிக்கவும் உள்ளது. எனவே தான் மத்திய அரசு கார் வைத்துள்ளவர்களின் மானியத்தினை நீக்கிக் குறைந்த வருவாய் உள்ள பிரிவினருக்கு அளிக்க உள்ளதாகக் கூறுகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் சமையல் எரிவாயுவிற்கு ஏப்ரல் 1 முதல் மானியம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் கூரப்படுகிறது.

 

பஹல் திட்டம் (Pahal)

முதன் முதலாக 2014-ம் ஆண்டு நேரடி மானியம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னார் தர்மேந்திர பிதான் அவர்கள் எண்ணெய் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பஹல் எனப்படும் தனி விருப்பத்துடன் மானியத்தினை விட்டுத் தரும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் மாத விலை நிலவரம்

சென்னையில் மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர் ஒன்றின் விலை 756 ரூபாய் எனவும், டெல்லியில் 747 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 766 ரூபாய் எனவும், மும்பையில் 719 ரூபாய் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் 14.2 கிலோ சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.

டிசம்பர் 1 முதல் மானிய விலை எல்பிஜி சிலிண்டர்கள் சென்னையில் 483.69 எனவும், டெல்லியில் 495.69 எனவும், கொல்கத்தாவில் 498.43 எனவும், மும்பையில் 493.38 எனவும் விற்பனை செய்து வரப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If you own a car soon going to pay more for your cooking gas

If you own a car soon going to pay more for your cooking gas
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns