ஒரு ஊசிக்கு 525% லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனை.. அதிர்ச்சியில் மக்கள்..!

By கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி, பட்பர்கஞ் பகுதியில் இருக்கும் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் நிர்வாகம் தனது மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகளை மருத்துவமனையில் இருக்கும் மருந்தகத்திலேயே மருந்துகள் மற்றும் இதர பொருட்களை வாங்க நிர்பந்தம் செய்து, நிர்வாகம் விற்கும் ஒவ்வொரு ஊசிகளுக்கு (disposable syringes) 275% முதல் 525% வரையிலான லாபத்தைச் சம்பாதிக்கிறது எனச் சிசிஐ அமைப்பின் துணை பொது இயக்குனர் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாகக் கார்பரேட் நிறுவனங்களில் மருத்துவச் சேவைகளுக்கு அதிகளவில் செலவு ஆகிறது என்ற கருத்து வலிமையாக இருக்கும் நிலையில் சிசிஐ அமைப்பின் இந்த ஆய்வறிக்கை மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

 14 மருத்துவமனை..

14 மருத்துவமனை..

மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் பெயரில் இருக்கும் மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையில் மற்றும் மருத்து விற்பனையில் அதிகளவிலான லாபத்தைச் சம்பாதித்துள்ளதாகச் சிசிஐ அமைப்பின் (Competition Commission of India) அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையில் மூலம் காப்பரேட் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து அதிகளவிலான லாபத்தைப் பெற்று வருவது உறுதியாகியுள்ளது.

 

விஜய் சர்மா

விஜய் சர்மா

விஜய் சர்மா என்பவரால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிசிஐ அமைப்பு இதன் ஆய்வை நடத்தியது. விஜய், பெக்டன் டிக்சென் இந்தியா லிமிடெட் நிறுவனம் தயாரித்த ஊசியை மருத்துவமனை அலுவலகத்தில் 19.50 ரூபாய் என்ற எம்ஆர்பி விலையில் வாங்கியுள்ளார். ஆனால் அதே ஊசிய, அதே நிறுவனத்துடைய ஊசி வெளிச் சந்தையில் 11.50 ரூபாய்க்குக் கிடைக்கிறது எனக் கூறியுள்ளார்.

குற்றம்
 

குற்றம்

இந்நிலையில் மருத்துவமனை மற்றும் பிடி நிறுவனத்தின் மீதான குற்றம் உறுதியான நிலையில் சிசிஐ அமைப்பு 60 நாட்களில் இதுகுறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் படி துணை பொது இயக்குனருக்கு உத்தரவிட்டது.

2 வருடம் பின்..

2 வருடம் பின்..

விஜய் சர்மா அளிக்கப்பட்ட புகார் ஜனவரி 2016இல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பின் இந்தப் புகாருக்கான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேக பேக்கிங்

பிரத்தியேக பேக்கிங்

இதுகுறித்த விசாரணையில் மருத்துவமனை விற்பனைக்கு அளிக்கப்படும் பொட்ருகளுக்கான நிலையான நடைமுறை பேக்கிங் மற்றும் எம்ஆர்பி விலை நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதாகப் பிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதன் விலை "super-normal profits" நிலையில் வந்துள்ளது. அதேபோல் மேக்ஸ் நிறுவனமும் சந்தையில் இருக்கும் மருத்துவமனைகள் விற்பனை செய்யும் எம்ஆர்பி விலை அடிப்படையிலான விற்பனையே செய்தோம் எனத் தெரிவித்துள்ளது.

உள்நோயாளிகள்

உள்நோயாளிகள்

இருதரப்பினரும் சந்தையில் நிலையான நடைமுறை விதிகளைப் பின்பற்றியதாகக் கூறப்புடம் நிலையில், இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் உள்நோயாளிகளுக்கு விற்கப்படும் மருத்துவ உபகரணங்கள், ஊசி ஆகியவற்றை 5 மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்கிறது.

இதன் மூலம் உள்நோயாளிகளின் மருத்துவச் செலவுகள் உச்சத்தை அடைகிறது.

 

விற்பனையாளர்

விற்பனையாளர்

இதுகுறித்து மேக்ஸ் குரூப் நிர்வாகி ஒருவர் கூறுகையில், மருத்துவமனையில் இருக்கும் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் எம்ஆர்பி விலையில் மட்டுமே விற்கப்படுகிறது. அதில் எவ்விதமான சலுகையும் அளிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

லாபம்

லாபம்

சிசிஐ அமைப்பின் அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் தான் வாங்கும் பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க அளவிலான லாப அளவுகளை வைத்து எம்ஆர்பி விலையில் விற்பனை செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மருத்துவமனை ஒரு வர்த்தகராக இயங்கி வெளிச் சந்தையில் இருந்து ஊசி மற்றும் இதர பொருட்களை வாங்கு தனது மருந்தகத்தின் வாயிலாக உள்நோயாளிகளுக்கு முறையற்ற வகையிலும், அதிக லாபத்துடனும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சிசிஐ ஆய்வறிக்கையில் தெரிவி

 

 வித்தியாசம்

வித்தியாசம்

மேலும் பிடி நிறுவனத்தின் ஊசிகளின் விலை வித்தியாசம் குறித்து விவரிக்கும்போது, மருத்துவமனையில் விற்கப்படும் ஊசி பிலிஸ்டர் பேக்கிங் உடனும், வெளிச் சந்தையில் விற்கப்படும் ஊசிகள் ப்லோ விராப் கொண்டது. இரண்டுக்கும் இதுவே வித்தியாசம்.

பொதுவாக மருத்துவமனைகளின் ஆர்டர், அளவு மற்றும் பேக்கிங் முறை கொண்டு அவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படும். மேக்ஸ் மருத்துவமனை அதிகளவில் வாங்கும் காரணத்தில் சந்தையில் இருக்கும் பிற மருத்துவமனைகளை விடவும் கூடுதலான தள்ளுபடி வெறும். இதன் மூலம் மலிவான விலையில் பொருட்களை மேக்ஸ் மருத்துவமனை பெறும் எனப் பிடி நிறுவனம் தெரிவித்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 

உறுதி..

உறுதி..

மருத்துவமனை அதிக லாபத்திற்கு மருத்துப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது உறுதியாகிய நிலையில், மருத்துவமனை மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

 40-50 சதவீதம்

40-50 சதவீதம்

தனியார் சுகாதாரச் சந்தையில், மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லுபவர்கள் தாங்கள் செய்யும் செலவுகளில் 40-50 சதவீதம் வரையிலான தொகை மருத்து மற்றும் இதர உபகரணங்களுக்காகச் செலவிடப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Max Hospital makes profit of up to 525% on syringes: CCI

Max Hospital makes profit of up to 525% on syringes: CCI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X