விரைவில் கேஷ்லெஸாக ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு சலுகை வழங்கும் ரயில்வேஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் விரைவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்குபவர்களுக்குச் சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளது.

 

இதேப்போன்று பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கும் போது ஐஆர்சிடிசி டிக்கெட் புக் செய்பவர்களுக்கு இலவச பயணக் காப்பீடும் அளிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சேவை கட்டணத்தினை ரத்துச் செய்து ஐஆர்சிடிசி என்பது மட்டும் இல்லாமல் இனி ஆப்லைன் டிக்கெட் வாங்குபவர்களுக்குச் சலுகைகள் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீசன் டிக்கெட்

சீசன் டிக்கெட்

தேசிய போக்குவரத்து நிறுவனமான ரயில்வேஸ் மாதாந்திர பயண டிக்கெட் வாங்குபவர்கள் டெபிட் அல்லது கிரெடிட் மூலம் கட்டணம் செலுத்தும் போது 0.5% வரை சலுகைகள் பெறலாம்.

முன்பதிவு இல்லாத டிக்கெட்

முன்பதிவு இல்லாத டிக்கெட்

சீசன் டிக்கெட் போன்று முன்பதிவு இல்லாத டிக்கெட்களை வாங்குபவர்களுக்கும் சலுகைகள் கிடைக்க உள்ளது. மேலும் இலவச பயணிகள் இன்சூரன்ஸ் போன்றவையும் கேச்லெசாக டிக்கெட் புக் செய்யும் போது கிடைக்க உள்ளது.

ஊக்கத்தொகை
 

ஊக்கத்தொகை

ரயில் பயணிகளை ரொக்க பணம் இல்லாமல் பயணம் செய்ய ஊக்குவிக்கப் பல விதமான சலுகைகளை ரயிவே நிர்வாகம் வழங்க இருப்பதாக முக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஊக்கத்தொகைக்கான நிதி சுமையினை மொத்தமாக ரயில்வே நிர்வாகம் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

நட்டம்

நட்டம்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு நீக்கப்பட்டுள்ள சேவை கட்டணத்தினால் மட்டும் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் நட்டம் ஆகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனை

பயணிகள் தற்போது 60 சதவீதம் வரை டிஜிட்டல் முறையில் தான் டிக்கெட்களை வாங்கி வருகின்றனர். இது பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 20 சதவீத உயர்வு ஆகும்.

2016-ம் ஆண்டுப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்ததற்கு முன்பு இருந்தே ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ரயில் டிக்கெட் புக் செய்து வந்த நிலையில் அதற்குப் பிறகு ரயில் டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர்களிலும் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலமாகவும் டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளது. மேலும் டிஜிட்டல் வாலெட் மூலம் டிக்கெட் வாங்குவதும் அதிகரித்துள்ளது. ரயில்வேஸ் நிர்வாகமும் 15,000 டிக்கெட் கவுண்ட்டர்களுக்குப் பிஓஎஸ் இயந்திரங்களை வழங்கியுள்ளது.

 

வருவாய்

வருவாய்

தற்போது இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 85 முதல் 95 சதவீதம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகத்திற்குப் பயணிகள் பிரிவில் இருந்து 48,000 கொடி ரூபாய் ஆண்டுக்கு வருவாய்க் கிடைக்கிறது, மீதம் 95 சதவீதம் வருவாய் சரக்கு போக்குவரத்துப் பிரிவில் இருந்து கேஷ்லெஸ் ஆகக் கிடைக்கிறது.

பிம் செயலி

பிம் செயலி

அதிகப்படியான கேஷ்லெஸ் பரிவர்த்தனைகள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ஆப்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்கில் பிம் பரிவர்த்தனைக்கு அனுமதி போன்றவையால் அதிகப்படியான ரயில் டிக்கெட் புக்கிங் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில்வே நிர்வாகம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக வங்கிகளிடம் பரிவர்த்தனை கட்டணத்தினைக் குறைக்குமாறும் கேட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Soon, you will be rewarded for cashless booking of railway tickets

Soon, you will be rewarded for cashless booking of railway tickets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X