அடியாட்களை வைத்து ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கும் வெரிசான்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இரண்டு நாட்களுக்கு முன்பு வெரிசான் நிறுவனம் 200 ஐடி ஊழியர்களைச் செக்யூரிட்டி கார்டுகள் வைத்துத் தடுத்து நிறுத்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது. முடியாது என்று கூறுபவர்களை அடியாட்களை வைத்து மிரட்டியும் ராஜினாமா செய்ய வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் 700 ஊழியர்களை வெரிசான் நிறுவனம் துரத்தி அடிக்க இருப்பதாகத் தனியார் நிறுவன ஊழியர்கள் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய வெரிசான் அலுவலகங்கள்

இந்தியாவில் வெரிசான் நிறுவனம் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இயங்கி வருகிறது. இதில் எத்தனை ஊழியர்களுக்குப் பின்க் ஸ்லிப் அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஊழியர்கள் எண்ணிக்கை

வெரிசான் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் மட்டும் 7,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் திறன் குறைந்த ஊழியர்கள் என்று பிரித்து அவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் வெரிசான் நிறுவனம் மிரட்டியதாகத் தெரிகிறது.

என்ன நடந்தது?

தங்களது ஷிப்டிற்கு வேலைக்கு வரும் ஊழியர்களை நிறுவனத்தின் உள்ள நுழைய விடமான பாதுகாவலர்களை வைத்துத் தடுத்து ராஜிமானச் செய்ய அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் ஊழியர்களிடம் எந்தப் பேச்சு வார்த்தையும் செய்யாமல் ஊழியர்களைக் குண்டர்கள் வைத்து மிரட்டப்பட்டுக் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடிதத்தினைப் படிக்கவும் விடவில்லை

மேலும் ஊழியர்களை ராஜினாமா கடிதத்தினைப் படிக்கக் கூட விடவில்லை என்றும் மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்களை ரஜினியின் சிவாஜி திரைப்பட பாணியில் குண்டர்கள் வைத்து மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

993 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

ஹைதராபாத் வெரிசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்த் என்ற ஊழியர் தன்னுடன் சேர்ந்து 993 ஊழியர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை சென்னை மற்றும் பெங்களூரு கிளைகளிலும் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

பெங்களூரு

வெரிசான் நிறுவனம் பெங்களூருவில் நவம்பர் 15 முதல் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், சென்னையில் இருந்து 500 ஊழியர்களை நீக்குவதாகவும், ஹைதராபாத்தில் இருந்து 200 ஊழியர்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏன் இந்தப் பணி நீக்கம்?

வெரிசான் நிறுவனம் ஏஓஎல் மற்றும் யாகூ நிறுவனத்துடன் முழுமையாக இணைவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு நடவடிக்கை தான் இந்த ஊழியர்கள் வெளியேற்றம் என்றும் கூறப்படுகிறது.

மறுப்பு தெரிவித்த வெரிசான்

மேலும் விரிசான் நிறுவனம் ஊழியர்களிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வங்கும் போது செக்யூரிட்டி மட்டும் தான் இருந்ததாகவும், ஊழியர்களைக் குண்டர்கள் யாரும் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது. நமக்கு என்ன சந்தேகம் என்றால் எச்ஆர் அறையில் செக்யூரிட்டிக்கு என்ன வேலை என்பது தான்.

இழப்பீடு

பணி நீக்கம் செய்துள்ள ஊழியர்களுக்கு 4 மாதம் சம்பளம் அளித்துள்ளதாகவும், மருத்துவக் காப்பீட்டை கூடுதலாக வழங்கியுள்ளதாகவும் விரிசான் நிறுவனம் கூறியுள்ளது. இந்த இழப்பீட்டை பெற்றுக் கொண்டு பல ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர் சங்கம்

ஐடி & ITES ஊழியர் சங்கம் ஒரு அறிக்கையில் "தமிழ்நாட்டின் பிராந்தியத்தை நிர்வகிக்கும் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானது" என்று கண்டித்துள்ளது.

விருஷ்கா

விருஷ்கா-வின் சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

200 Verizon Employees Escorted Out With bouncers and counsellors In Chennai

200 Verizon Employees Escorted Out With bouncers and counsellors In Chennai
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns