வாழ்க்கை துவங்கியதோ பழ கடையில், வருமானமோ ரூ.300 கோடி.. யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர்: 1950-ம் ஆண்டு தந்தை இறந்த காரணத்தால், குடும்ப சூழ்நிலையை சமாளிக்க 9 மற்றும் 11 வயது அண்ணன் தம்பி இருவரும், பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, சப்பாட்டிற்காகவும் பிழைப்பிற்காகவும் உள்ளூரில் இருக்கும் ஒரு பழ கடையில் வேலைக்கு சேர்ந்தனர்.

 

இன்று துவங்கிய இவர்களின் பயணம் இன்று 300 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு உயர்ந்து மொத்த தமிழ்நாட்டையும் கலக்கி வருகிறார் இவர்.

பஸ் ஸ்டாண்டு

பஸ் ஸ்டாண்டு

பேருந்து நிலையத்தில் உள்ள அந்தப் பழக்கடையில் பழரசம் செய்வது மற்றும் பேருந்து நிலையத்தில் அன்றாடம் பழங்களை விற்பது தான் இவர்களது அன்றாடப் பணியாக இருந்துள்ளது.

ஆனால் இன்று அண்ணன் தம்பிகளான சின்னசாமி மற்றும் நடராஜன் இருவரும் மிகப் பெரிய வர்த்தகச் சாம்ராஜியத்தினை உருவாக்கி ஆண்டுக்கு 100 கோடி அளவில் வணிகம் செய்து வருகிறனர். இதற்காக அவர்கள் போட்ட உழைப்பும் கனவும் மிகப் பெரியது.

சேமிப்பு

சேமிப்பு

தாங்கள் பணிபுரிந்து வந்த கடையில் அளிக்கும் தின கூலியில் ஒரு சில பைசாவினை தங்களது கனவான என்ன வணிகம் செய்யப்போகிறோ என்று தெரியாமலே சேமித்து வந்துள்ளனர்.

ஸ்பின்னிங் மில் வேலை
 

ஸ்பின்னிங் மில் வேலை

இப்படியே 5 வருடம் நாட்கள் செல்ல ஸ்பின்னிங் மில்லில் வேலைக் கிடைக்கிறது. அந்த வேலைக்குச் சேர்ந்த இருவரும் தொடர்ந்து பல ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்து தங்கலது கனவை நோக்கி பயணம் செய்துள்ளார்கள்.

முதல் கடை

முதல் கடை

சிறுவர்களாக இருந்த இருவருக்கு 18 மற்றும் 20 வயது ஆன போது கோயம்புத்தூரில் சொந்தமாக ஒரு பழ கடையினைத் துவங்கியுள்ளனர். ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்துக்கொண்டே இந்தக் கடையினையினையும் நிர்வகித்து வந்துள்ளார்கள்.

 பழமுதிர் நிலையம் பெயர்

பழமுதிர் நிலையம் பெயர்

பின்னர் இந்தக் கடைக்கு 1965-ம் ஆண்டுப் பழமுதிர் நிலையம் என்று பெயர் சூட்டியதாகக் கேபிஎன் ஃபார்ம் பிரெஷ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான செந்தில் நடராஜன் நம்மிடம் கூறினார். செந்தில் நடராஜன் வேறு யாரும் இல்லை நடராஜனின் மகன் ஆவார்.

தற்போது இவர்களுக்குக் கோயம்புத்தூரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாகவும் ஆண்டுக்கு 300 கோடிக்கும் அதிகமாக வருவாயும் பெற்று வருகின்றனர்.

குடும்பம்

குடும்பம்

இதுவே 1983-ம் ஆண்டுப் பழமுதிர் நிலையத்திற்குக் கோயம்புத்தூரில் 4 கடைகளுடன் நடராஜன் தனது இரண்டு தம்பிகளுடன் அவர்களது மனைவி, பிள்ளைகள் என அனைவரும் சேர்ந்து நடத்தி வந்துள்ளார்.

பிரிவு

பிரிவு

ஆனால் பங்காளிகள் என்றால் பணம் என்றால் பிரச்சனை வர தானே செய்யும். கடைசித் தம்பி அதிக லாபம் சம்பாதிக்க, மூன்றாவது தம்பி இரண்டாம் இடத்தினைப் பிடிக்க, நடராஜன் 3ம் இடத்தினையும் அவரது அண்ணன் சின்னசாமி 4 இடத்தினையும் பிடித்தனர். அப்போது தம்பிகள் வேறு வழியில்லாமல் கடைகளைப் பிரித்துக்கொண்டனர்.

 கோவைப் பழமுதிர் நிலையம்

கோவைப் பழமுதிர் நிலையம்

தற்போது வரை நடராஜனின் தம்பிகள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் 9-க்கும் மேற்பட்ட பழமுதிர் நிலயங்களை நிர்வகித்து வருகின்றனர். ஆனால் நடராஜன் கோவை பழமுதிர் நிலையம் என்ற பெயரில் வேகமாக வளர ஆரம்பித்தார். தனது இரண்டாம் கோவை பழமுதிர் நிலையத்தினை 1998-ம் ஆண்டுத் திருப்பூரில் துவங்கினார்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைத் தினமும் கோவைப் பழமுதிர் நிலையம் பெற்று வந்த போதிலும் தினமும் 5000 ரூபாய் நட்டம் என்ன தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்று நடராஜனை யோசிக்க வைத்தது.

ஆனால் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஓர் அளவிற்குத் திருப்பூர் கடையில் வருவாய் வர துவங்கியது, அப்போது நடராஜன் சென்னை செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு ஒரு முடிவை எடுத்து இறங்கினால் அதில் லாபம் பார்க்காமல் விடக் கூடாது என்பதில் விடா முயற்சியாகச் செயல்பட்டு வந்த நிலையில் 2006-ம் ஆண்டு இவரது மகன் செந்தில் பழமுதிர் நிலையத்தில் இணைகிறார். அப்போது கோவை பழமுதிர் நிலையத்திற்குச் சென்னை, கோயம்புத்துர், திருப்பூர் என 8 கடைகளாக வளர்ச்சி அடைந்து ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வருவார் கிடைக்கத் துவங்கியது.

கூட்டுஸ்தாபனம்

கூட்டுஸ்தாபனம்

பல கிளைகள் கூட்டுஸ்தாபனாக முதலீடு செய்யத் துவங்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 10 வருடத்தில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட கோவை பழமுதிர் நிலையங்களை இவர்கள் துவங்கியுள்ளனர். தற்போது கோவை பழமுதிர் நிலையம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி, கொச்சின் ஆகிய இடங்களிலும் தங்களது கடைகளை அதிகளவில் திறந்துள்ளன.

பிற பொருட்கள் விற்பனை

பிற பொருட்கள் விற்பனை

பழம் மற்றும் காய் கறிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் பல பொருட்கள், இனிப்பு வகைகள், ரொட்டி மற்றும் மளிகை சாமணங்கள் போன்றவை சேர்த்து விற்க முடிவு செய்யப்பட்டுத் தற்போது பழமுதிர் நிலையத்தின் 30 சதவீத வருவாய் பழம் மற்றும் காய்கள் இல்லாத பிரிவில் இருந்து வருவதாகவும் அதனை மேலும் அதிகரிக்க முடிவு செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அதே நேரம் தங்களது முக்கிய வணிகமான காய் மற்றும் பழம் விற்பனையை நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை என்று செந்தில் தெரிவித்துள்ளார். எனவே தனது தந்தையிடம் தான் அதிகக் கிளைகள் துவங்கக் கோரிக்கை வைத்ததாகவும் இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் தங்களது தாயும் ஊக்குவித்ததாகவும் செந்தில் கூறினார்

கேபிஎன் ஃபார்ம் பிரெஷ்

கேபிஎன் ஃபார்ம் பிரெஷ்

2012-ம் ஆண்டுக் கேபிஎன் ஃபார்ம் பிரெஷ் தனியார் நிறுவனம் என்றும் பதிவு செய்து 60 சதவீத பங்குகளை நிறுவனத்தின் பெயரில் மீதம் 40 சதவீதத்தினைக் கிளிகளில் பார்ட்னர்களாக உள்ளவர்களுக்கு அளித்துள்ளனர்.

 பிரான்ச்சிஸ்

பிரான்ச்சிஸ்

கேபிஎன் ஃபார்ம் பிரெஷ் நிறுவனம் தற்போது பிரான்ச்சிஸ் அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும் 3 பிரன்ச்சிஸ் அளிக்கப்பட்டால் ஒன்று இவர்களது சொந்த கடையாக அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பிராஞ்சிஸ் கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் தற்போது சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 சேமிப்பு கிடங்கு

சேமிப்பு கிடங்கு

கோயம்புத்தூரில் ஒரு சேமிப்பு கிடங்கு, சென்னை நெர்குன்றத்தில் 20,000 சதுர அடியிலும், வாநகரத்தில் 50,000 சதர சிடியுலும் ஒரு சேமிப்புக் கிடங்குகள் கேபிஎன் ஃபார்ம் பிரெஷ் நிறுவனத்திற்கு உள்ளது.

 கொள்முதல்

கொள்முதல்

இவர்களுக்குப் பழங்கள், காய் கறிகள் போன்றவற்றை இந்தியாவில் பல்வேறு சந்தையில் இருந்து இறக்குமதி செய்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வது மொத்தம் 10 சதவீதம் அளவில் மட்டுமே இவர்களுக்குப் போதுமானதாக உள்ளது.

நாக்பூர் மற்றும் கங்காநகரில் இருந்து ஆரஞ்ச், ஆந்திராவில் இருந்து மாம்பழம் மற்றும் கர்நாடகாவில் இருந்து காய்கறிகளை அதிகளவில் இவர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இறக்குமதி

இறக்குமதி

2008-ம் ஆண்டு முதல் வாஷிங்டன், நியூ யார்க், சீனா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், கிவி போன்ற பழ வகைகளை இறக்குமதி செய்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது உள்நாட்டு விவசாயிகளைப் பாதிக்காத படி அதிகப்படியான இறக்குமதி வரி, சுங்க வரி போன்றவற்றைச் செலுத்துவதால் கூடுதல் செலவாகிறது என்றும் கூறுகின்றனர்.

 எதனால் இறக்குமதி

எதனால் இறக்குமதி

பல பழ வகைகள் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இறக்குமதி செய்யும் போது அனைத்து பழ வகைகளும் எப்போதும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது விற்பனை அதிகரிக்கிறது என்கின்றனர்.

இயற்கை பழம் மற்றும் காய்கறிகள்

இயற்கை பழம் மற்றும் காய்கறிகள்

அன்மை காலமாக இந்திய மக்கள் இயற்கையாக விளைந்த காய்கள் மற்றும் பழங்களை மட்டுமே விரும்பி வாங்கும் நிலை மாறி வருவதால் அதற்குத் தாயார் ஆகி வருவதாகவும் தற்போது 8 கடைகளில் ஆர்கானிக் எனப்படும் இயற்கை காய்கறிகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இணையதளம்

இணையதளம்

இயற்கை உணவுகள் விற்பனை விரைவில் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தற்போது இணையதளமும் மூலமாகப் பழங்கள், காய் கறிகள் மற்றும் மளிகை சாமணங்களை விற்கும் பணிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள்

வாகனங்கள்

இணையதளம் மற்றும் போன் மூலம் ஆர்டர்கள் பெற்று வீட்டிற்கே பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்கு மட்டும் 20-க்கும் மேற்பட்ட டாடா ஏஸ் வாகனங்கள், 30-க்கும் மேற்பட்ட டெல்வரி ஆட்கள் சென்னையில் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

சலுகைகள்

சலுகைகள்

போட்டிக்காக அதிக வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக நாங்கள் சலுகைகளை வழங்கி நட்டம் அடைய விரும்பவில்லை என்பதிலும் கேபிஎன் ஃபார்ம் பிரெஷ் நிறுவனம் கவனமாக உள்ளது.

மென்பொருள் நிறுவனம்

மென்பொருள் நிறுவனம்

கோயம்புத்தூர் பிஸ்ஜி கல்லூரியில் படித்த செந்தில் நடராஜன் ஹைதராபாத்தில் மைக்ரோசாட் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கோயம்புத்தூரில் சிறிய மென்பொருள் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கடன் மற்றும் லாபம்

கடன் மற்றும் லாபம்

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எப்போதும் கடன் வாங்கும் எண்ணம் அப்பாவிற்குக் கிடையாது, எங்களைப் பொருத்த வரை 2 சதவீதம் விற்றுமுதல் லாபம் வந்தால் போதும் என்று செயல்பட்டு வருவதாகவும் செந்தில் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kovai Pazhamudir Nilayam Natarajan and Senthil's Success story

Kovai Pazhamudir Nilayam Natarajan and Senthil's Success story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X