ஜகா வாங்கிய மத்திய அரசு.. மக்களின் கதறலுக்குப் பதில் கிடைத்தது..! #FRDIbill #FRDI

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக்கடனால் திவாலாகம் வங்கிகளைக் காப்பாற்றும் முயற்சியாகப் பல முக்கிய மாற்றங்கள் அடங்கிய FRDI மசோதா மத்திய அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FRDI மசோதா

ஆகஸ்ட் 10, 2017இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதா 2017 குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தின் துணை கமிட்டி முன்னணிலையில் உள்ளது. இந்த அமைப்பு FRDI மசோதா குறித்து அனைத்துப் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளது.

கடுமையான எதிர்ப்பு

இந்த மசோதாவால் திவாலாகும் வங்கியைக் காப்பாற்றும் முயற்சியில், மக்களின் வைப்பு நிதியை அரசு பயன்படுத்தும் என்ற கருத்து நிலவியது.

இதனால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த மசோதா குறித்து நிதியமைச்சகமும், பிரதமரும் பல விளக்கம் அளித்த பின்பும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை.

 

ஒத்திவைப்பு

இந்நிலையில் தற்போது நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதா 2017-ஐ மக்களவையின் துணை கமிட்டி பரிசீலனை செய்வதை ஒத்திவைத்துள்ளது.

இக்கமிட்டி இந்த மசோதா குறித்து முழுமையான ஆய்வு விளக்கத்தைப் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

 

ஐபிசி சட்டம்

வங்கி திவால், நிறுவனங்களின் அதிகளவிலான கடன் ஆகிய முக்கியப் பிரச்சனைகளைக் களையும் நொடித்து மற்றும் திவால் சட்டம் 2017ம்(Insolvency and Bankruptcy Code, 2016) FRDI மசோதா போன்றது தான். இது நிதித்துறையை அதீத கடன் தள்ளுபடி, கடன் நெருக்கடியைக் காக்கும் ஒரு சட்ட விதிமுறைகள்.

புதிய அமைப்புகள்

1960களில் இந்தியாவில் இரண்டு வங்கி திவாலான பின்பு மத்திய அரசு மக்களின் பணத்தைக் காக்கும் பணியைச் செய்ய DICGC அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பைக் களைத்துத் தீர்மானம் கார்ப்பரேஷன் (Resolution Corporation) மற்றும் வைப்பு மீதான காப்புறுதிக்கு கார்பரேஷன் இன்சூரன்ஸ் பண்ட் என்ற புதிய 2 அமைப்புளை உருவாக்குவது குறித்து இறுதி முடிவுகளையும் பட்ஜெடுக்குப் பின் எடுக்கப்படும்.

 

காலந்தாழ்த்தும் முறை..

FRDI மசோதா குறித்த இறுதிக்கட்ட முடிவுகளைத் தயாராக உள்ளது, நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று கருத்து நிலவிய நிலையில் மக்களின் எதிர்ப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே திட்டத்தைச் சில நாட்களுக்குப் பின் மக்களின் வைப்பு நிதிக்குப் பாதிப்பு ஏதுமில்லாமல் அமலாக்கச் செய்தால் பிரச்சனையில்லை, இல்லையெனில் மீண்டும் எதிர்ப்புக் கடுமையாகும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மக்களைப் பாதிக்காத எந்தத் திட்டத்திற்கு எப்போது மக்கள் எதிர்ப்பதில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FRDI bill deferred, joint committee to give report in Budget Session

FRDI bill deferred, joint committee to give report in Budget Session - Tamil Goodreturns | ஜகா வாங்கிய மத்திய அரசு.. மக்களின் கதறலுக்கு பதில் கிடைத்தது..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns