ஆர்கே நகர் வேட்பாளர்கள் குறித்து நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பங்குகொள்ளப்போகும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயேட்சியாக நடிகர் விஷால் களமிறங்கியால் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் முழுக்கப் பரபரப்பாகவே இருந்தது.

பொதுவாத தேர்தலில் போட்டியிடுவோர், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மனு உறுதி செய்யப்பட்டுப் போட்டியிடும் 59 வேட்பாளர்களின் சொத்து விபரங்களின் அலசலின் விபரங்களை அறப்போர் இயக்கும் வெளியிட்டுள்ளது.

கோடீஸ்வர வேட்பாளர்கள்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களில் 7 பேர் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

சராசரி சொத்து..

59 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 82.81 லட்சம் ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பணக்கார வேட்பாளர்கள்

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகச் சொத்துக்களை வைத்துள்ள 3 பேர்களின் விபரம்

ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளராக இருக்கும் மதுசூதனன் 5.19 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார், 11.19 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் டிடிவி தினகரன் 2வது இடத்தில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக இருக்கும் கலைக்கோட்டுதயம் 16.03 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

 

அதிகக் கடன்

இதில் அதிகக் கடன்களைக் கொண்டுள்ள வேட்பாளராக டிடிவி தினகரன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

டிடிவி தினகரன் 5.55 கோடி ரூபாய் கடன் நிலுவையை வைத்துள்ளார், டி.சுரேஷ்பாபு 75.65 கோடி ரூபாய் கடன் நிலுவையை வைத்துள்ளார், கலைக்கோட்டுதயம் 65.22 கோடி ரூபாய் கடனை வைத்துள்ளார்.

 

பான் எண் அறிவிக்காத வேட்பாளர்கள்

இந்தத் தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களில் 9 பேர் பான் எண் விபரங்களை அளிக்கவில்லை.

10 லட்சத்திற்கும் அதிக வருமானம்

வருடத்திற்கு 10 லட்சம்த்திற்கும் அதிக வருமானம் பெறப்படுவதாக வருமான வரித் தாக்கலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் 3 பேர

இதில் டிடிவி தினகரன் மற்றும் குடும்பம் வருடத்திற்கு 63.46 லட்சம் ரூபாய் வருமானம் பெறுகிறார், கலைக்கோட்டுதயம் மற்றும் குடும்பம் வருடத்திற்கு 18.98 லட்சம் ரூபாய் பெறுகிறார், சுரேஷ் பாபு வருடத்திற்கு 10.12 லட்சம் ரூபாய் வருமானம் பெறுகிறார்.

 

ஆதாரம்

59 வேட்பாளர்களில் வருமானத்திற்கான ஆதாரத்தை அறிவிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை 36 இது கிட்டதட்ட மொத்த வேட்பாளர்களில் 61 சதவீதம்.

வருமான வரி விபரங்கள்

59 வேட்பாளர்களில் வருமான வரி விபரங்களை அறிவிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை 44, மொத்த எண்ணிக்கையில் 75 சதவீதம் பேர். இதில் சில வேட்பாளர்கள் வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்குப் பெற்றிருக்கலாம் என்று அறப்போர் இயக்கும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்வி விபரம்

28 வேட்பாளர்களின் (47%) கவ்வி தகுதி 5 - 12ஆம் வகுப்பு வரை மட்டுமே, 28 வேட்பாளர்கள் பட்டதாரி மற்றும் அதற்கு அதிகமான கல்வி தகுதியைக் காட்டியுள்ளனர்.

ரூ.300 கோடி

பஸ் ஸ்டாண்டு பழ கடையில் வாழ்க்கையை துவங்கி வருடத்திற்கு ரூ.300 கோடி சம்பாதிக்கும் நடராஜன்..!

FRDI மசோதா

ஜகா வாங்கிய மத்திய அரசு.. மக்களின் கதறலுக்குப் பதில் கிடைத்தது..! #FRDIbill #FRDI

மார்ச் 31 வரை

ஆதார் - மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Richest cadidates in RK nagar bypoll

Richest cadidates in RK nagar bypoll
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns