இந்திய வர்த்தகச் சந்தைக்கு இந்த வருடம் பல முக்கியத் திருப்பங்களைச் சந்தித்ததை நாம் மறந்திருக்க முடியாது. பணமதிப்பிழப்பின் தாக்கம், தாக்கத்தில் இருந்து மீளாத முன்பே ஜிஎஸ்டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தாக்கத்தால் பணவீக்கத்தின் தடாலடி உயர்வு, வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் அளவிற்கு வராக்கடன், FRDI மசோதா எனப் பல முக்கிய நிகழ்வுகளை இந்த 2017ஆம் ஆண்டு இந்திய சந்தையைப் பார்த்தது.
இந்நிலையில் இந்த வருடம் தலைப்பு செய்திகளிலும், தொடர்ந்து செய்திகளிலும் இடம்பெற்ற முக்கிய வர்த்தகத் தலைவர்கள் யார் என்பதை இப்போது பார்க்கப்போகிறோம்.

அருண் ஜேட்லி
இந்தி வருடம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், அதில் செய்யப்பட்ட தொடர் மாற்றங்கள் என ஒவ்வொரு முக்கியமான அறிவிப்பிலும் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி இடம்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆதார் இணைப்பு குறித்த விளங்களையும் ஜேட்லி அறிவித்தார்.

பியூஷ் கோயல்
இந்திய ரயில்வே துறையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டதன் காரணமாகச் சுரேஷ் பிரபு வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், ரயில்வே துறை அமைச்சராகப் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார்.
அதன் பின் பியூஷ் கோயல் பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்புப் பணிகள் குறித்து விவரித்தும், அதனை அமலாக்கம் செய்ததன் மூலம் வர்த்தகத் துறை செய்திகளில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

விஷால் சிக்கா
இந்திய ஐடி துறையைப் புதிய வர்த்தகப் பாதையில் கொண்டு செல்வார் என அனைத்துத் தரப்பினராலும் நம்பப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா, நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகச் சீஇஓ பதவியை ராஜினாமா செய்தார்.

முகேஷ் அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய டெலிகாம் சேவையான ஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் செய்த மாற்றங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து வர்த்தகச் சந்தையில் கவனிக்கப்பட்டார்.
அதேபோல் ஆசிய சந்தையின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்தன் மூலம் சர்வதேச அளவிலான செய்திகளிலும் இடம்பெற்றார் முகேஷ் அம்பானி.

ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஆர்பிஐ மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறினாலும், தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தைக் குறித்தும், கருத்துக்களை முன்வைத்தும் வருகிறார்.
இதன் படி பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து அரசு எதிராகப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார், இதனால் மக்களால் அதிகளவில் கவனிக்கப்பட்டார்.
மேலும் ரகுராம் ராஜனின் ஐ டூ வாட் ஐ டூ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அனில் அம்பானி
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, வர்த்தகமும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அனில் அம்பானி இந்த வருடம் பல பின்னடைவுகளைச் சந்தித்தார்.
முதலில் ஏர்செல் உடனான கூட்டணி முறிந்தது, அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை விற்பதில் தடை ஏற்பட்டது. இதன் பின் வாங்கிய கடனுக்கான தவணையைச் சொலுத்தாத காரணத்தால் சீன வங்கி வங்கி ஆர்காம் மீது திவாலாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தது.

விஜய் மல்லையா
இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுச் சில நிமிடங்களில் ஜாமீன் பெற்ற வெளியே வந்தார். மேலும் இந்தியாவில் தனது பாதுகாப்பு இல்லை என்று இந்தியா வரவும் மறுத்தார் விஜய் மல்லையா.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தனது கைது உறுதியாகிய நிலையில் தற்போது விஜய் மல்லையா இந்திய ஜெயில் சுத்தமில்லை, பாம்புகள் வரும் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறார்.