பிரதமர் அலுவலகத்தில் இப்புதிய பணியிடம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.. சொல்வது யார் தெரியுமா..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொழில்நுட்ப பார்வை கொண்ட திட்டமிடல் மிகவும் அவசியமாக உள்ளது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் ஐடி உத்திகள் மற்றும் கொள்கைகளை இணைக்கும் வகையில் தலைமை தகவல் அதிகாரி என்ற புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி மற்றும் முன்னணி முதலீட்டாளரான மோகன்தாஸ் பாய் பிடிஐ செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம்

இப்புதிய பணியிடம் மூலம் பல்வேறு துறை சார்ந்த தகவல் தொழில்நுட்ப உத்திகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதிலும், அதை நடைமுறைப்படுத்தி இணைப்பதில் இன்றியமையாததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மோகன்தாஸ் பாய்

மத்திய அரசும் தலைமை தகவல் அதிகாரி பணியிடத்தை உருவாக்குவதற்காக ஆலோசனை செய்து வரும் நிலையில் மோகன்தாஸ் பாய் அவர்களின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

பிக் டேட்டா

மேலும் இந்தியாவில் பிக் டேட்டா தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவும், அரசு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் தலைமை தகவல் ஆராய்ச்சியாளர் பதவியும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நிதி பரிமாற்றம்

இந்தியாவில் தற்போது நிதி பரிமாற்றங்கள் அனைத்தும் மின்னணுயமாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் ஆதார் தளத்துடன் அதனை இணைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை தகவல் அதிகாரி மற்றும் தலைமை தகவல் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் மிக முக்கியமாக உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தலைமை தகவல் அதிகாரி என்ற பணியிடம் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PMO should have Chief Information Officer post: Mohandas Pai

PMO should have Chief Information Officer post: Mohandas Pai
Story first published: Tuesday, December 19, 2017, 14:49 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns