வங்கி சேவை குறித்து நீங்கள் அளிக்கும் புகாருக்கு எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய வங்கியின் வங்கிகள் குறை தீர்ப்பு ஆணையத்தில் வாடிக்கையாளர்கள் புகார் அளிப்பது 27.4 சதவீதம் அதிகரித்து 1.3 லட்சம் புகார்கள் வந்துள்ளதாகவும் அதிலும் புது டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தான் அதிகப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ வங்கியின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்தியா முழுவதும் ஆர்பிஐ வங்கியின் கீழ் 20 வங்கி குறை தீர்ப்பு ஆணையங்கள் உள்ளன. 2016-2017 நிதி ஆண்டில் மட்டும் 1,36,511 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 92 சதவீத புகார்கள் அந்த அண்டே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டண என்றும் தெரிவித்துள்ளனர். 2015-2016 நிதி ஆண்டில் வங்கிகள் குறித்த புகார்கள் 21 சதவீதம் அதிகரித்து வந்த-த நிலையில் 2016-2018 நிதி ஆண்டில் 27 சதவீதம் அதிகமாக வங்கிகள் குறைதீர்ப்பு ஆணையம் புகார்களைப் பெற்றுள்ளது.

என்ன புகர்கள் எல்லாம் பெறப்படும்?
 

என்ன புகர்கள் எல்லாம் பெறப்படும்?

வங்கிக் குறைதீர்ப்பாளர் வாடிக்கையாளர் குறைபாடுகள், சிறு மற்றும் பெரிய நாணயங்களைப் பெறுவதைக் கவனிக்காமல், அறிவிப்பு இன்றி வைப்புத் தொகையை மூட அல்லது கட்டாயப்படுத்தப்படுதல் அல்லது ஏ.டி.எம். / டெபிட் / கடன் அட்டை நடவடிக்கைகள்.

வங்கி குறை தீர்ப்பாளர் ஆணையம்

வங்கி குறை தீர்ப்பாளர் ஆணையம்

வங்கி குறை தீர்ப்பாளர் ஆணையத்தில் வாடிக்கையாளர் குறைபாடுகள், சிறு மற்றும் பெரிய நாணயங்களைப் பெறுவதில் பாகுபாடு, அனுமதியின்றி டெபாசிட் கணக்குகளை மூடுதல், ஏ.டி.எம். / டெபிட் / கடன் அட்டை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஏதேனும் தவறுகள் நடைபெறும் போது புகார் அளிக்க முடியும்.

கட்டணம்

கட்டணம்

2015-2016 நிதி ஆண்டில் சராசரியாக ஒரு புகாருக்கு 4,396 ரூபாய்க் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது, இதுவே 2016-2017 நிதி ஆண்டில் அதிகப் புகார்கள் பெறப்பட்டுள்ளதால் 3,780 ரூபாயாகக் குறைந்துள்ளது.

வங்கி குறை தீர்ப்பு ஆணையத்தினை நிர்வகிக்க 2016 நிதி ஆண்டில் 45.2 கோடி ரூபாய் செலவாகியுள்ளது, இதுவே 2017 நிதி ஆண்டில் 49.5 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான புகார்கள் பெற்றதால் தான் புகார் மீதான செலவு 3,780 ரூபாயாகக் குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

துவக்கம்
 

துவக்கம்

வங்கி குறை தீர்ப்பு ஆணையமானது 2006-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த ஆணியத்தினைச் செயல்படுத்த வருவாய் செலவு மற்றும் மூலதனச் செலவுகள் தேவை. வருவாய் செலவினங்களில் வாடகை, வரி, காப்பீடு, சட்டம் கட்டணங்கள், அஞ்சல் மற்றும் டெலிகாம் கட்டணங்கள், அச்சிடுதல் மற்றும் எழுதுபொருள் செலவுகள், விளம்பரம் செலவுகள், தேய்மானம் மற்றும் இதர இதர பொருட்கள் அடங்கும்.

மூலதனச் செலவின பொருட்களில் தளபாடங்கள், மின் நிறுவல், கணினிகள் / தொடர்புடைய உபகரணங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் ஆகியவை அடங்கும்.

கிழக்கு மண்டலம்

கிழக்கு மண்டலம்

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இருந்து அதிகப்படியாக 33 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 61.6 சதவீதம் கொல்கத்தாவில் இருந்து வந்தது ஆகும்.

வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம்

வடக்கு மாநிலங்கள் பொருத்து வரையில் 32.4 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளன, அதிலும் அகமதாபாத்தில் இருந்து 61.65 சதவீத புகார்கள் அதிகபட்சமாக வந்துள்ளன.

வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம்

வடக்கு மாநிலங்களில் இருந்து 30 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதிலும் அதிகபட்சமாக 44.5 சதவீதம் ஜெய்ப்பூரில் இருந்து பெறப்பட்டுள்ளது.

 கிழக்கு மண்டலம்

கிழக்கு மண்டலம்

கிழக்கு மாநிலங்களில் இருந்து 13.8 சதவீத புகார்கள் வந்துள்ளன, அதிலும் அதிகபட்சமாக 37.5 சதவீதம் பெங்களூருவில் இருந்து வந்துள்ளது.

 கிராமப்புறங்கள்

கிராமப்புறங்கள்

கிராமப்புறங்களில் இருந்து வங்கி குறை தீர்ப்பு ஆணையத்திற்குப் புகார்கள் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

ஏடிஎம் மற்றும் கார்டுகள் குறித்த புகார்கள்

ஏடிஎம் மற்றும் கார்டுகள் குறித்த புகார்கள்

ஏடிஎம்/கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் குறித்து 18.9 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் டெபிட் கார்டுகள் மீதான புகார்கள் 12.5 சதவீதம் ஆகும்.

பென்ஷன் குறித்த புகார்கள்

பென்ஷன் குறித்த புகார்கள்

பென்ஷன் பரிவர்த்தனை குறித்து 6.5 சதவீத புகார்கள் வந்த போதிலும் கடன் மற்றும் பிற புகார்கள் 5 சதவீதம் மாட்டுமே வந்துள்ளது.

புகார்கள் எப்படிப் பெறப்பட்டன?

புகார்கள் எப்படிப் பெறப்பட்டன?

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களில் 44 சதவீதம் மின்னஞ்சல் மூலமாகவும், 39 சதவீதம் தபால், பேக்ஸ், கொரியர்/ நேரடி புகார்களாகப் பெறப்பட்டுள்ளன.

ஆர்பிஐ

ஆர்பிஐ

புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது என்பது வங்கி சேவைகள் குறித்த விழிப்புனர்வு காட்டுவதாக ஆர்பிஐ நிர்வாகம் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know the cost of banking complaint?: RBI

Do you know the cost of banking complaint?: RBI
Story first published: Wednesday, December 20, 2017, 13:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X