2018-ம் ஆண்டு நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பத்து நாட்களில் 2017 முடிந்து 2018 துவங்க உள்ளது. 2017 ஆண்டு உங்கள் நிதிகளைச் சரியாக நிர்வகித்து இருக்கலாம், சில நேரங்களின் மறதியில் தாமதமாகச் செலுத்தி அபராதங்களும் செலுத்தி இருக்கலாம்.

எனவே எந்தவொரு தவறும் செய்யாமல் உங்கள் முதலீடுகள், வருமான வரி என அனைத்தையும் 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை எப்படி நிர்வகிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

ஜனவரி

2018-ம் ஆண்டு உங்கள் இலக்கிற்கு ஏற்றவாறு எதில் எல்லாம் முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

உங்கள் முதலீடுகளின் போர்ட்போலியோவை மறு ஆய்வு செய்யுங்கள். 2018 நீங்கள் வைத்து உள்ள இலக்குத் தற்போது வருகிறது என்றால் அதற்கு நீங்கள் தாயாராகிவிட்டீர்களா என்பதைச் சரிபாருங்கள். இன்சூரன்ஸ், சொத்து வரி போன்றவற்றை எப்போது செலுத்த வேண்டும் என்று விழிப்பூட்டல்களை வையுங்கள். கிரெடிட் கார்டு மற்றும் உங்களது பயன்பாட்டுப் பில்களைச் சரியான நேரத்தில் அபராதம் இல்லாமல் செலுத்துங்கள்.

வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால் அதன் விவரங்களை உங்கள் மனித வள அதிகாரியிடம் அளித்து அதிக விரி பிடித்தம் செய்வதைத் தவிர்திடுங்கள்.

 

பிப்ரவரி

பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வரி மற்றும் முதலீடுகள் குறித்து வரும் அறிவிப்புகள் அவை உங்கள் வீட்டுப் பட்ஜெட்டினை எப்படிப் பாதிக்கும் என்பதற்கு ஏற்றவாறு திட்டமிடுங்கள்.

மருத்து காப்பீடு கிளெய்ம், பயணக் கொடுப்பனவு போன்றவற்றை நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளீர்களா என்பதைத் தெரிந்துகொள்க. இவை இல்லை என்றால் நீங்கள் அதிக வரி செலுத்த நேரிடும்.

 

மார்ச்

2017-2018 நிதி ஆண்டின் முன்கூட்டிய வரியை செலுத்துவதற்கான கடைசித் தேதி 2018 மார்ச் 18 ஆகும். 2018 மார்ச் 31-க்குள் வங்கி கணக்கு, பான் கார்டு போன்றவற்றில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 2018 மார்ச் 31க்குள் முதலீட்டு விவரங்கள் சமர்ப்பித்து வருமான வரி தாக்கல் செய்யத் தயார் ஆகிவிடுக.

ஏப்ரல்

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஏப்ரல் 1 முதல் நல திட்டங்களுக்கு வந்துவிடும்.

பள்ளி குழந்தைகள் இருந்தால் அவர்களின் அடுத்த வருட கல்வி கட்டணத்தினைச் செலுத்த வேண்டி இருக்கும், எனவே அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஏப்ரல் 5-ம் தேதிக்குள் முதலீடு செய்து அதிக வட்டியை பெறலாம்.

உங்கள் கோடைக்கால விடுமுறையினை முன்கூட்டியே திட்டமிட்டு செலவுகளை மிச்சப்படுத்துக.

ஏப்ரல் 18-ம் தேதி அக்‌ஷய திருதியின் போது தங்கத்தில் முதலீடு செய்க. தங்க வாங்கும் போது உங்கள் முதலீட்டுப் போர்ட்போலியோவில் 10 முதல் 15 சதவீதத்திற்கும் உள்ளே இருக்க வேண்டும் என்பதில் நினைவில் கொள்க.

 

மே

பல நிறுவனங்களில் ஏப்ரல் மாதம் முதலே ஊதிய உயர்வு இருக்கும். அப்படிக் கூடுதலாக உங்களுக்கு வரும் ஊதிய உயர்வினை பயன்படுத்தி உங்கள் கடனை முதலில் அடைக்கவும்.

உங்கள் சம்பளம் உயர்ந்தால் வரி செலுத்துவதும் உயரும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு முதலீடு செய்து உங்கள் வரியினைக் குறைக்கத் திட்டமிடுங்கள்.

நீங்கள் வாங்கிய கடன் தொகைக்கு ஈஎம்ஐ அதிகமாகச் செலுத்தி வருகிறீர்களா என்று சரிபார்க்கவும். உங்கள் MCLR மீட்டமைவு தேதியை நினைவில் வைத்துக் கொள்ளவும், குறைந்தபட்ச வட்டி விகிதங்கள் ஏதேனும் இருப்பின் பயன் பெறவும்.

 

ஜூன்

2019-2020 நிதி ஆண்டிற்கான முன்கூட்டியே முதல் தவனை வரி செலுத்துவதற்கான கடைசித் தேதி ஜூன் 15 ஆகும்.

ஜூன் 15-ம் தேதிக்குப் பிறகு படிவம் 16 மற்றும் 16ஏ போன்றவற்றைப் பெற்று வருமான வரி தாக்கல் செய்யவும்.

 

ஜூலை 31

2018 ஜூலை 31-க்குள் 2018-2019-ம் ஆண்டிற்கான வருமான வரியினைத் தாக்கல் செய்ய வேண்டும். காலத் தாமதமாக வரி செலுத்தினால் வரி நண்மைகளைப் பெற முடியாது. நடப்பு நிதி ஆண்டு முதல் வருமான வரியினைத் தாமதமாகத் தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆகஸ்ட்

உங்கள் நிதி ஆலோசகருடன் இடைநிலை ஆய்வு செய்யுங்கள்.

செப்டம்பர்

செப்டம்பர் 15ம் தேதிக்குள் முன்கூட்டிய வரி செலுத்தாதன் இரண்டாம் தவணையினைச் செலுத்த வேண்டும். வரிச் சேமிப்புத் திட்டங்களில் இதுவரை முதலீடு செய்யாம் இருந்தால் உடனே துவங்குக. வருமான வரித் துறை உங்களது வரித் தாக்கலினை செயல்படுத்திவிட்டதா என்பதை டிராக் செய்து வாருங்கள். நீங்கள் கூடுதலாகச் செலுத்திய வரி வங்கி கணக்கிற்கு வந்துவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்க.

அக்டோபர்

தசரா போன்ற விழக்காலம் என்பதால் எப்படிச் செலவு செய்வது என்பதற்கான பட்ஜெட்டினை போட்டுவிடுங்கள்.

நவம்பர்

தீபாவளி நேரம் என்பதால் சரியாகப் பட்ஜெட் போட்டு விடுமுறை மற்றும் விழாவை சிறப்பியுங்கள்.

டிசம்பர்

அட்வான்ஸ் டாக்ஸ் கடைசி மூன்றாம் தவணையினை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வருடம் எப்படி எல்லாம் செலவு செய்துள்ளோம், முதலீடு செய்துள்ளோம் என்பதை மறு ஆய்வு செய்து பாருங்கள்.

டிசம்பர் 31 இரவு புது வருட கொண்டாட்டத்தினைக் கொண்டாடி மகிழுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Here is a 2018 list for money matters

Here is a 2018 list for money matters
Story first published: Wednesday, December 20, 2017, 18:02 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns