அனில் அபம்பானியின் ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தின் மின்சாரப் பிரிவை அதானி டிரான்ச்மிஷன் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்ததை அடுத்து ரிலையன்ஸ் பங்குகள் 8.12 சதவீதமும், அதானி டிரான்மிஷன் நிறுவனப் பங்குகள் 9.96 சதவீதமும் உயர்வைச் சந்தித்தன.
அதே நேரம் கடனில் சிக்கி வரும் ஆர்காம் நிறுவனத்தின் பங்குகளை முகேஷ் அம்பானி வங்க முடிவு செய்ததால் ஆர்காம் பங்குகளின் விலை 4.05 சதவீதம் உயர்வைச் சந்தித்தது, அதே நேரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்குகள் இன்று 0.62 சதவீதம் சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

100 சதவீத பங்குகள்
அனில் திருபாய் அம்பானி குழுமம் மும்பையில் உள்ள மின்சார வணிகத்தின் 100 சதவீத பங்குகள் அதாவது மின்சார உற்பத்தி, விநியோகம் என மொத்தமாக அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு அளிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

மதிப்பு
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 13,251 கோடி ரூபாய் என்றும் அதில் 12,101 கோடி ரூபாய் மின்சார நிறுவனத்திற்காகவும், 1,150 கோடி ரூபாய் ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்காகவும் எனக் கூறப்படுகிறது.

கடன் அடைப்பு
ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் தங்களது பிற சொத்துக்களையும் விற்று 3,000 கோடி ரூபாய் கடனை செலுத்தி கடன் இல்லா நிறுவனமாகச் செயல்பட முடிவு செய்துள்ளது.

ஆர்காம்
சென்ற 3 நாட்களில் ஆர்காம் நிறுவன பங்குகள் 65 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முடிவு செய்து இருப்பதாகும்.

ஆர்காம் நிறுவன கடன்
ஆர்காம் நிறுவனம் மொத்தமாக 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதில் 25,000 கோஇ ரூபாயினை இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், 20,000 கோடி ரூபாயினை வெளிநாட்டு வங்கி மற்றும் கடன் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது. இந்தக் கடனை செலுத்து அனில் அம்பானி பல விதமாக முயற்சி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.