உங்களை சார்ந்து யாரும் இல்லை என்றாலும் கூட உங்களுக்கு காப்பீடு தேவை என்று தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உங்களைச் சார்ந்திருப்பவர் என்பவர் மற்றொரு நபருடைய நிதி ரீயான ஆதரவை பெறுபவராவார். இது உங்களுடைய பதின்வயது குழந்தை, உங்கள் வயது முதிர்ந்த பெற்றோர் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைவராக இருக்கலாம். இன்சூரன்ஸ் என்பது நீங்கள் இல்லாத சமயத்திலும் உங்களைச் சார்ந்தோர் எந்த விதத்திலும் நிதி ரீதியான சிக்கல்களுக்கு ஆளாகாமல் காக்கும் சிறந்த ஒரு வழியாகும்.

ஆனால் உங்களைச் சார்ந்து யாரும் இல்லை என்றால்? அப்போதும் உங்களுக்குக் காப்பீடு தேவையா?

ஆமாம் என்பதே இதற்குப் பதில். ஏனென்றால் இன்சூரன்ஸ் பணத்தைச் சேமிக்கவும் உங்கள் சட்டைப் பையிலிருந்து சொந்தப் பணத்தை எடுத்துச் செலவழிப்பதையும் குறைக்கிறது.

உங்களைச் சார்ந்திருப்பவர்கள் யாரும் இல்லையென்றாலும் கூட நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதற்கான 4 காரணங்களை இங்கே அலசுவோம் வாருங்கள்.

மாற்றத்திற்குத் தயாராவது

தற்சமயம் நீங்கள் திருமணமாகாத தனிநபராக இருக்கலாம், ஆனால் வருங்காலத்தில் நீங்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடிவெடுக்கலாம். உங்கள் பெற்றோர் ஓய்வு பெறும் போது என்ன நடக்கும்?

உங்கள் வாழ்க்கைத் தரம் மாறும் போது நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தால் முனைமத் தொகை ஒரு கட்டத்தில் அதிகரித்துப் பாலிசி நீங்கள் பெற முடியாத ஒன்றாகி விடும். குறிப்பாக உங்களைத் தவிர வேறு யாருடைய வருமான ஆதாரத்தையும் பெற முடியாத போது இப்படி நிகழும் சாத்தியங்கள் அதிகம். அதனால் தான் கூடுமான வரை இளம் வயதிலேயே இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்துக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

 

தீவிரமான நோய்கள் உங்களுக்கு உணர்வு ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்

கேன்சர், இதய நோய் போன்ற தீவிர நோய்களுக்கு நீங்கள் உட்படும் போது ஏற்படும் நிதி சார்ந்த சிரமங்கள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமானவை. கேன்சர் சிகிச்சைக்குச் சராசரியாக ரூ. 10 இலட்சம் வரையும், சிறுநீரக நோய்க்கு சிறுநீரை பிரித்துத் தூய்மைப்படுத்தும் டையாலிசஸ் சிகிச்சைக்கு ஒரு மாதத்திற்கு 18 முதல் 20,000 வரையும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குச் சுமார் ரூ. 20 இலட்சம் வரையிலும் செலவாகிறது. அத்தகைய செலவுகள் உங்கள் சட்டைப்பையைச் சுட்டெரித்து ஓட்டைப் போட்டுவிடும். அத்தகையைச் சந்தர்ப்பங்களில் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தினரைப் போன்ற யாரேனும் ஒருவர் பின்னாளிருந்து உங்களை விழுந்து விடாமல் தாங்கிப் பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. தீவிர நோய்களுக்கு எதிரான மிகச் சரியான இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க இங்கே உங்களுக்குச் சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் வரிப் பயன்களைப் பெறலாம்

ஆயுள், மருத்துவ மற்றும் தீவிர நோய் சிகிச்சை போன்ற பெரும்பாலான வகைக் காப்பீட்டுத் திட்டங்களில் பிரிவு 80(சி), 80 (டி) மற்றும் 10 (10) டி வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சேமிப்பை வழங்குகிறது. இந்த வசதிகள் நீங்கள் முனைமமாகச் செலுத்தும் தொகையை முதிர்வு காலத்தில் லாபமாகப் பெற அனுமதிக்கிறது. இவை முன்கூட்டி வரையறுக்கப்பட்ட வரம்பு வரை உங்கள் வருமான வரியிலிருந்தும் கழிக்கப்படும். அத்துடன், இது வரி கழிவுகளைப் பெற வருமான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமாகும்.

உங்கள் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு தேவை

ஒரு கார், ஒரு வீடு, ஒரு வெளிநாட்டுப் பயணம்- என இவை ஒவ்வொன்றும்- தினசரி அடிப்படையில் சேதம் மற்றும் அழிவுகளின் அபாயங்களுக்கு ஆளாகின்றன. எனவே நீங்கள் உங்களுக்கென்று சொந்தமாக ஒரு இன்சூரன்சை எடுத்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது, அப்படிச் செய்யவில்லை என்றால், இந்த ஒவ்வொன்றையும் சரி செய்ய ஆகும் செலவை நீங்களே ஒட்டுமொத்தமாக ஏற்க வேண்டி வரும். அத்தகைய சூழல் உங்கள் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தடம் புரளச் செய்துவிடும். எனவே, வீட்டு இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸட மற்றும் பயண இன்சூரன்ஸ் போன்ற இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பற்றிய சில வழிகாட்டுதல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

இன்சூரன்ஸ்

எனவே, நாம் மேலே பார்த்ததைப் போல இன்சூரன்ஸ் என்பது ஒரு கணிசமான தொகையை முனைமமாகச் செலுத்தி பதிலுக்கு நீங்கள் செலுத்தியதை விட அதிகமான தொகையைக் குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் திரும்பப் பெறுவதாகும். இதன் மூலம் நீங்கள் நிதி ரீதியான பின்விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு உங்கள் விலையுயர்ந்த சொத்துக்களுக்கும் சேதம் மற்றும் அழிவுகள் ஏற்படாமல் காக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reasons you need to know about insurance even if you don’t have dependents

Reasons you need to know about insurance even if you don’t have dependents
Story first published: Sunday, December 24, 2017, 14:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns