ஜூலியை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட திலீப் சுகு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பாப்புளர் அப்பளம், அனில் அப்பளம் பொன்ற பெயர்களை இவ்வளவு நாட்களாகக் கேட்டுவந்த நாம் சில நாட்களாக ஜூலி நடித்து அன்மையில் வெளிவந்த அருணா அப்பளம் விளம்பரத்தினைப் பார்த்து இருப்போம்.

அருணா அப்பளத்தின் விளம்பரத்தினைத் தொலைக்காட்சிகளில் செலவு செய்து ஒளிபரப்புவதை விட நமது நெட்டிசன்ஸ் இணையதளத்தில் அதிகம் விளம்பர செய்கிறார்கள். இந்த விளம்பரம் இந்த அளவிற்குப் பெரிய பெயர் பெற்று இருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்துக்கூடப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

அருணா அப்பளம்

திலீப் சுகு தலைமையிலான அருணா அப்பளம் நிறுவனம் சென்னை நங்கநல்லூரில் இருந்து இயங்கி வருகிறது. இவர் ஜூலியை வைத்துப் போட்ட மாஸ்ட்டர் பிளானில் ஒரே இரவில் தனது நிறுவனத்தினைப் பிரபலம் ஆக்கியுள்ளார்.

முதல் விளம்பரம்

அருணா அப்பளம் விளம்பரத்திற்கு முன்பே வெள்ளை காகா என்ற விளம்பர நிறுவனத்தின் கீழ் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு ஜவுளி கடை விளம்பரத்திலும் ஜூலி நடித்துள்ளார்.

அப்பளம் விளம்பரம்

ஒரு காலத்தில் பாப்புளர் அப்பளம், அனில் அப்பளம் போன்ற பிராண்டுகளைக் கேட்டு வந்த நமக்கு வீட்டில் டிவி பார்க்கும் போது வரும் ஜூலிவின் விளம்பரம் மட்டும் இல்லாமல் இணையதளங்களில் நெட்டிசன்ஸ் ஒரு பக்கம் ஜூலை கிண்டல் செய்து வந்தாலும் அருணா அப்பளம் நிறுவனத்திற்கு இது மிகப் பெரிய வெற்றி எனக் கூறலாம். சில நாட்களாகப் பட்டி தொட்டி எல்லாம் ஜூலியின் இந்த அருணா அப்பளம் விளம்பரம் தான் டிரெண்டாக உள்ளது.

கவர்ச்சி

பொதுவாக விளம்பரம் என்றால் கவர்ச்சி, சர்ச்சை போன்ற விஷயங்கள் என்றால் தான் மிகவும் பிரபலம் ஆகும். இந்த முறை என்னவென்றால் பிக்பாஸ் புகழ் சர்ச்சைக்குப் பேர் போன ஜூலியால் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் பிரபலம் ஆகியுள்ளது.

சம்பளம்

மேலும் இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஜூலி 10லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல தொலைக்காட்சியின் குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் உள்ளார். சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டவுட்டு

ஆச்சர்யம் என்னவென்றால் கிராமத்தில் தான் பிறந்தவர் என்றாலும் சமைக்கத் தெரியாது என்று இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறி வந்தார். இப்போது என்னடா என்றால் சமையல் செய்த பிறகு அப்பளம் சுடுவதாக நடித்துள்ளார். சரி, நடிப்பு தானே..! அருணா அப்பள நிறுவனத்தின் முழுமையான பிராண்டு அம்பாசிடராக ஜூலி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

வீடியோ

ஒரே விளம்பரத்தில் பிரபலமாகிய அருணா அப்பளம் விளம்பரம் விடியோ!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Aruna appalam Dilip Sugu's Master Plan Using Julie

Aruna appalam Dilip Sugu's Master Plan Using Julie
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns