தந்தையின் பிறந்த நாளன்று தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடனில் சிக்கி தவித்து வந்த அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்காக முகேஷ் அம்பானி வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று இரண்டு நிறுவனங்களும் வியாழக்கிழமை அறிவித்துள்ளன.

அதுவும் இந்த அறிவிப்பு தங்கலது தந்தை திருபாஉ அம்பானியின் 85-வது பிறந்த நாள் அன்று வெளியாகி இருப்பது ஒரு அடையாளமாக மாறியுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் அர்காம் நிறுவனத்தின் ஸ்பெக்டர்ம், டவர், ஃபைபர் ஆப்டிக் மற்றும் பிற டெலிகாம் கட்டுமான சொத்துக்களை ரிலையன்ஸ் ஜியோ வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

2002-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையில் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் 2005-ம் ஆண்டுச் சொத்துப் பிரச்சனை வந்த போது எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்கள் முகேஷ் அம்பானிக்கும், டெலிகாம் மற்றும் பவர் நிறுவன சொத்துக்கள் அனில் அம்பானிக்கும் அளிக்கப்பட்டது.

முக்கிய நிகழ்வு

முக்கிய நிகழ்வு

தற்போது 2017-ம் ஆண்டு ஆர்காம் நிறுவன சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வங்க முடிவு செய்துள்ளது நிறுவனத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக உள்ளது.

அனில் அம்பானி அறிவிப்பு

அனில் அம்பானி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை அன்று அனில் அம்பானி தனது டெலிகாம் நிறுவன சொத்துக்களை வாங்க 15 நிறுவனங்களிடம் இருந்து கேட்டு வருவதாகத் தெரிவித்து இருந்தார். இந்த விற்பனையின் மூலம் மட்டும் அனில் அம்பானிக்கு 390 பில்லியன் ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 கடன்

கடன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூன்று மாதத்தில் தனது 45,000 கோடி ரூபாய் கடனை மொத்தமாக அடைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்ததில் இருந்து பங்குகளின் விலை 250 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்துள்ளது.

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

வியாழக்கிழமை ரிலையன்ஸ் ஜியோ ஆர்காம் சொத்துக்களை வாங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து இன்று காலை 11:8 மணி நிலவரத்தின் படி 19.93 சதவீத உயர்வுடன் ஆர்காம் பங்கின் விலை 97.13 ரூபாயாக உள்ளது. நேற்று இதுவே 30.96 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் துறையில் வேகமாக வலர்ந்து வரும் ரிலையஸ் ஜியோ நிறுவனம் 15 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. ஆர்காம் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்தினால் ஜியோவிற்கு 43,000 கூடுதல் டவர்கள் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் சேவையும் கிடைத்துள்ளது.

மதிப்பு

மதிப்பு

இரண்டு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என்று அறிவிக்காத நிலையில் பிடிஐ தரப்பு 24,000 முதல் 25,000 கோடி வரை இருக்கும் என்று கணித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

On Father's birthday, Mukesh Ambani Bails Out Anil Ambani through Buys Wireless Assets

On Father's birthday, Mukesh Ambani Bails Out Anil Ambani through Buys Wireless Assets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X