இந்தியா முழுவதும் கடலைமிட்டாய் விற்கும் தமிழன்.. ரூ.1,450 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவதை நாம் தினமும் பார்த்துக்கொண்டு வருகிறோம், அதனைப் பெற்றோர்களும் ஊக்கப்படுத்தியும், ஆதரித்தும் வருகின்றனர். இத்தகைய காட்சி தற்போதும் மிகவும் இயல்பான ஒன்று.

ஆனால் இதுவே 30 வருடத்திற்கு முன்பு ஒரு இளைஞன் சொந்தமாகத் தொழில் துவங்க வேண்டும் என்று பேசினால் நம்மைச் சுற்றி இருப்பவர்களே சிரிப்பார்கள், சொந்த தொழில் என்பது அப்போதைய காலகட்டத்தில் வெறும் கனவாக மட்டுமே இருந்தது.

இத்தகைய காலக்கட்டத்தில் தான் 22வயது இளைஞன் ஒருவன், வெறும் 15,000 ரூபாய் பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் 1,450 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளான்.

குடும்பம் மற்றும் பிரிவு..

தந்தை இறந்து 2 வருடத்தில், தாயையும், உடன் பிறந்த 5 பேர், தன் ஊரை விட்டு வெறும் 15,000 ரூபாய் மற்றும் ஏகப்பட்ட கனவுகளுடன் வெளியேறினார் ரங்கநாதன்.

தனது மூத்த சகோதரர்கள் குடும்பத் தொழிலை செய்து வரும் நிலையில், உடன் இருந்து வர்த்தகத்தை வளர்க்க ஒத்துழைக்காமல் மனதை இருக்கமாக வைத்து முக்கியமான முடிவை எடுத்தார் கதையின் நாயகன் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன்.

 

15,000 ரூபாய்

குடும்பத் தொழிலை விட்டு வெளியேறிய ரங்கநாதன், தன் குடும்பத் தங்கியிருந்த வீட்டிற்கு 250 மீட்டர் தொலைவில் ஒரு வீட்டைட வாடகைக்கு எடுத்தார், இது வெறும் ஒற்றை அறை கொண்ட ஒரு வீடு, இதற்குமாதம் வாடகை 250 ரூபாய்.

தன்னிடம் இருந்த 15,000 ரூபாயில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ், மடிக்கும் வகையிலான ஒரு கட்டில், மற்றும் சுற்ற ஏதுவாக ஒரு சைக்கிள் ஆகியவற்றை வாங்கினார்.

ஆரம்பத்திலேயே ரங்கநாதன் போராட்டகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார். மேலும் ரங்கநாதன் அவர்களின் உடனடி முடிவுகள் வர்த்தக வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவியுள்ளது.

 

கோழி பண்ணை

ஆரம்பத்தில் ரங்கநாதன் கோழிப்பண்ணை வைக்கவே திட்டமிட்டார், ஆனால் தனக்குத் தெரிந்தது குடும்பத் தொழிலான ஷாம்பு தயாரிப்பதே என்பதால், பிற தொழில்களில் இறங்கவதற்கு தயங்கினார்.

முதல் படி..

இந்நிலையில் ஷாம்பு தொழில்லேயே இறங்கிவிடுவோம் எனத் தீர்மானமாக முடிவு செய்த ரங்கநாதன், தனது சொந்த ஊரான கடலூரில் இருந்து புதுச்சேரியில் தொழிற்சாலை அமைக்க வந்தார்.

புதுச்சேரி, கடலூரை விடவும் சற்று பெரிய ஊராக இருந்த காரணத்தாலும், வர்த்தகம் எளிமையாகச் செய்யக் கூடிய சூழல் நிலவியதால் ஒரு வார காலத்திலேயே ஷாம்பு தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றார் ரங்கநாதன். அப்போதைய காலத்தில் தமிழ்நாட்டில் (கடலூர்) உரிமம் பெறவே வாரம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

 

முதல் தொழிற்சாலை

ஷாம்பு தயாரிப்புக்கான உரிமம் பெற்ற உடன் உற்பத்திக்கான பணிகளை விரைவாகத் துவங்கினார்.

உரிமம் பெற்ற கையோடு, புதுச்சேரி அருகில் கன்னி கோவில் என்னும் இடத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் ஒரு இடத்தில் 3,500 ரூபாய் முதலீட்டில் இயந்திரங்களை வாங்கி 4 ஊழியர்களைப் பணியில் அமர்த்தித் தயாரிப்பை துவங்கினார் ரங்கநாதன்.

அறிமுகம்..

தொழிற்சாலையும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு 75 பைசாவில் 7ml சேஷே விடிவில் தனது சிக் ஷாம்புவை சந்தையில் அறிமுகம் செய்தார் ரங்கநாதன். இவை அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி 1 மாதத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பெயர் காரணம்..

தனது தந்தை பெயரான சின்னி கிருஷ்ணன் என்பதின் முதல் எழுத்துக்களை எடுத்து சிக் எனப் பெயர் வைத்தார் ரங்கநாதன். தற்போது சிக் ஷாம்பு பல வடிவங்களில், பல விதமான வருடத்திற்கு 300 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை இந்தச் சிக் பிராண்டு பெறுகிறது.

குடும்பத் தொழிலுக்குப் போட்டி..

80களில் மிகவும் பிரபலமாக இருந்த வெல்வெட் ஷாம்புவை ரங்கநாதனின் குடும்பம் தயாரித்து வந்ததாலும் அதனை வர்த்தகம் செய்வது காட்ரிஜ் நிறுவனம் தான்.

சிக் ஷாம்புவின் அறிமுகம் வெல்வெட் ஷாம்பு நேரடியாகப் போட்டியாக இருக்கும் என்று யோசித்த நிலையிலும் மன உறுதியுடன் களத்தில் இறங்கினார். முதலில் சிக் ஷாம்புவின் விலையை 90 பைசாவாக நிர்ணயம் செய்த ரங்கநாதன் விநியோகஸ்தர்களின் அறிவுரைக்கு இணைகள் 75 பைசாவிற்குக் குறைத்தார்.

வெல்வெட் ஷாம்பு உடன் போட்டி போட்டது மட்டும் அல்லாமல் விலையும் ஒரே விலையை வைத்து போட்டி சுடேற்றினார்.

 

முதல் வருட வர்த்தகம்

வீட்டில் இருந்து வெளியேறி வெறும் 26 நாட்களில் அறிமுகம் செய்யப்பட்ட சிக் ஷாம்புவின் முதல் வருட வர்த்தகம் 6 லட்சம் ரூபாய்.

 

 

4 வருடத்தில் திருமணம்

1983ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய ரங்கநாதன் 26நாட்களில் வர்த்தகச் சந்தையில் வர்த்தகத்தைத் துவங்கினார், இதன் பின் 4 வருடத்தில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் பேத்தியான ஆர்.தேன்மொழியைத் திருமணம் செய்தார்.

இந்தக் காலத்தில் சிக் ஷாம்பு ஒரு மாதத்திற்கே 3.5 லட்சம் வரையிலான வர்த்தகத்தைச் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

அதிரடி ஆஃபர்

தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும், மக்கள் மத்தியில் அதிகளவில் பரப்பவும் ரங்கநாதன் ஒரு சலுகையை அறிவித்தார். 5 காலி சிக் ஷாம்பு பாக்கெட்டுக்கு ஒரு பாக்கெட் இலவசம் என அறிவித்தார், இந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய ஆஃபர்.

இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றிபெற்று தமிழ்நாடு முழுவதும் சிக் ஷாம்புப் பிரபலம் அடைந்தது.

 

மாஸ்டர்ஸ்ட்ரோக்

இந்த ஆஃப்ர் வெல்வெட் ஷாம்பபவிற்குக் கடுமையான பாதிப்பை கொடுத்து இதுமட்டும் அல்லாமல் சந்தையில் சிக் ஷாம்புவிற்குத் தேவை அதிகரித்து. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டில் புதிய ஆதிக்கத்தைப் பெற்றது.

இந்த ஆஃபர் கிட்டதட்ட 10 மாதம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

 

பிராண்டு அம்பாசிட்டர்

1989ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.

இதன் பின் அக்காலகட்டத்தில் கோலிவுட் புகழ் அமலாவை தனது பிராண்டு அம்பாசிட்டராக அறிவித்து, டிவீ, பத்திரிக்கை, செய்தித்தாள் எனப் பெரிய அளவில் விளம்பரம் செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தார் ரங்கநாதன். விளம்பரம் செய்த பின்பு 1990களில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் வருடத்திற்கு 12 கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

மீரா அறிமுகம்

1990ஆம் ஆண்டுச் சிக் இந்தியா நிறுவனம் பியூட்டி காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆக உருமாறியது. 1991-1992இல் பல்வேகு நறுமணம் கொண்ட மீரா ஹெர்பல் ஹேர்வாஷ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தென் இந்தியாவின் ஷாம்பு வர்த்தகத்தில் ரங்கநாதன் தனி இடத்தைப் பிடித்தார்.

அடுத்தடுத்த அறிமுகம்

இதன் வெற்றிக்குப் பின்பு 1993இல் நைல் ஹெர்பல் ஷாம்பு, 1997இல் ஸ்பின்ஸ் பர்பியூம், 1998இல் இண்டிகா ஹேர் டை மற்றும் பேரவெர் பேர்னெஸ் கிரீம் ஆகியவை அறிமுகம் செய்தார்.

கவின்கேர் பிறந்தது...

1998ஆம் ஆண்டில் அனைத்து வர்த்தகத்தையும் ஒரு கூட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியாகக் கவின்கேர் நிறுவனம் துவங்கப்பட்டது.

இதிலும் தனது தந்தை பெயரான சின்னி கிருஷ்ணன் பெயரை அடிப்படையாகக் கொண்டே கவின்கேர் உருவாகியுள்ளது. கவின் என்றால் தமிழில் அழகு என்று பொருள்.

 

சலூன்

ஒவ்வொரு முறையும் ரங்கநாதன் முடி வெட்ட சலூனுக்குச் சென்றால் கடைக்காரர்களிடம் மற்றொரு கிளையைத் துவங்க கூடாதா என்று கேட்பார், ஆனால் கடைக்காரர்களைப் பல காரணங்களைக் கூறு திறக்க முடியாது என்று கூறிவந்தனர்.

இதுவே இத்துறையில் இருக்கும் வாய்ப்பு என்பதை உணர்ந்த ரங்கநாதன் தொடர் சலூன் பிராண்டுகளான லைம்லைட் மற்றும் கிரீன் டிரென்ட்ஸ் ஆகியவற்றைத் துவங்கினார்.

 

200 கோடி ரூபாய்

சலூன் துவங்கப்பட்ட பின் 2001ஆம் ஆண்டுக் காலத்தில் கவின்கேர் நிறுவனத்தின் வருவாய் வருடத்திற்கு 200 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது.

சின்னி சிக்கி...

5 வருடத்திற்குப் பின் ரங்கநாதன் கடலை மிட்டாய் தயாரிப்பில் இறங்கி சின்னி சிக்கி என்ற பிராண்டை அறிமுகம் செய்தார், இன்றைய நிலையில் இந்தியாவின் பெரு நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையில் சின்னி சிக்கி கிடைக்கிறது.

ஒரு வருடத்திற்கு 8 கோடி ரூபாய் வரையில் சின்னி சிக்கி விற்பனை ஆகிறது குறிப்பிடத்தக்கது.

 

டெய்ரி வர்த்தகம்

2008ஆம் ஆண்டுக் காஞ்சிபுரத்தில் முடங்கிய ஒரு பால் பண்ணையை வாங்கி, பால் பொருட்களைத் தயாரித்துக் கவின்ஸ் பிராண்டை உருவாக்கி, இன்று தென் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்னாஸ் மற்றும் குளிர்பானம்

2009ஆம் ஆண்டிஸ் மும்மையில் இருந்த கார்டன் நம்கீன்ஸ் என்னும் ஸ்னாக்ஸ் நிறுவனத்தை வாங்கினார். அதேபோல் ரூச்சி ஊறுகாய் மற்றும் மா ப்ரூட் டிரிக் நிறுவனத்தைக் கைபற்றிக் கவின்கேர் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தார் ரங்கநாதன்.

இதுமட்டும் அல்லாமல் சமீபத்தில் இந்நிறுவனம் சிகே பேக்கரி என்ற பிராண்டின் கீழ் கேக் மற்றும் இதர பேக்கிங் உணவுகளை வர்த்தகம் செய்யத் துவங்கியுள்ளது.

 

100 சதவீத உரிமை

பொதுவாக இத்தகைய பெரிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 முதலீட்டாளர்கள் அல்லது பாட்னர்களை வைத்திருப்பார்கள், ஆனால் கவின்கேர் பொருத்த வரையில் 100 சதவீத பங்கும், உரிமையும் ரங்கநாதன் அவர்களிடமே உள்ளது.

வெளிநாட்டு வர்த்தகம்

தற்போது கவின்கேர் நிறுவனம் தமிழ்நாடு, இந்தியாவில் மட்டும் வர்த்தகம் செய்யாமல் இலங்கை, பங்களாதேஷ், நேப்பால், மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வர்த்தகம் செய்து வருகிறது.

மேலும் வெளிநாட்டு வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ளக் கவின்கேர் பங்களாதேஷ் பிரைவேட் லிமிடெட், கவின்கேர் லங்கா பிரைவேட் லிமிடெட் என்ற இரு நிறுவனங்களை வைத்துள்ளது.

 

4000 ஊழியர்கள்

இந்நிறுவனத்தில் தற்போது 4000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர், இதில் 2,000 பேர் கவின்கேர் நிறுவனத்தின் கீழ் இருக்கும் சலூன் பிராண்டுகளான லைம்லையிட் மற்றும் கிரீன் டிரென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ் வழி கல்வி

கடலூரில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த ரங்கநாதன் மீனவ சமுகத்தைச் சார்ந்து இருந்தாலும், தொழில் வேறு. தந்தையின் மரணத்திற்குப் பின் அனுபவம் எதுவும் இல்லாமல் வந்த ரங்கநாதன் தமிழ் வழி கல்வியைப் பயின்றார்.

வர்த்தகத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த ரங்கநாதன், தமிழ் நாளிதழ்களைப் படிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டு ஆங்கிலப் பத்திரிக்கைகளை வாசிக்கத் துவங்கினார், இதனுடன் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரை எப்போது புரட்டிக்கொண்டு இருந்தார்.

 

3.5 ஏக்கரில் வீடு

தென்னை தோப்பு, மாங்காய் தோப்பு மத்தியிலேயே ஆரம்ப வாழ்க்கையைத் துவங்கி ரங்கநாதன், தற்போது சென்னையில் இருந்தாலும் அவரின் வீட்டு இன்னும் பசுமைக்கு மத்தியிலேயே உள்ளது.

சென்னை ஈச்சம்பாக்கத்தில் கடற்கரையில் ரங்கநாதனின் வீடு சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இவரது வீட்டுத் தற்போது மயில், வான் கோழி, கிளி எனப் பல்வேறு வகையான பறவைகளுக்கு மதியில் வசித்து வருகிறார் ரங்கநாதன்.

 

வாரிசுகள்

ரங்கநாதன் மற்றும் தேன்மொழி அவர்களுக்கு அமுதா, மனு மற்றும் தாரணி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் மனு மற்றும் நடிகர் விக்ரம் மகளுக்கும் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்தது.

 

34 வருடப் பயணம்

34 வருடத்திற்கு முன்பு குடும்பத் தொழிலை விட்டுவிட்டு வெளியேறியதற்கு ன்றைய வெற்றியைப் பார்க்கும்போது வருத்தமாக இல்லை எனச் சி.கே.ரங்கநாதன் கருதுகிறார்.

சிக் ஷாம்புவில் துவங்கி தற்போது கவின்கேர் நிறுனம் பிர்சனல் கேர், டெய்ரி, ஸ்னாக்ஸ், குளிர்பானம் மற்றும் சலூன் எனப் பல்வேறு துறையில் வர்த்தகம் செய்து 1,450 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வர்த்தகச் சாம்ராஜியம் உருவாகியுள்ளார் ரங்கநாதன்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CK Ranganathan built 1450 crore empire in tamilnadu just with 15,000 rupees

CK Ranganathan built 1450 crore empire in tamilnadu just with 15,000 rupees- Tamil Goodreturns | வெறும் 15,000 ரூபாயை 1,450 கோடி ரூபாயாக மாற்றிய ரங்கநாதன்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns