பன்னாட்டு நிறுவனங்களில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படிப்பில் கவனம் செலுத்துவது மிகப் பெரிய பலம். இளைஞர்கள் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் பேசும் போது குறியுள்ளார்.

 

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் வந்த பலர் உலகின் முக்கிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை ஏற்றுள்ளனர், இதற்கு முக்கியக் காரணங்கள் இவர்களால் அந்த நிறுவனங்களுக்குக் கிடைத்த வளர்ச்சியாகும்.

தற்போது 2017-ம் ஆண்டு முடிவடைந்து 2018 துவங்கி உள்ள நிலையில் தமிழ் குட்ர்டிட்டர்ன்ஸ் இணையதளம் உலகளவில் பிரபலமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளவர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தொகுத்து வழங்குகிறது.

சஞ்சய் ஜா: குளோபல் ஃபவுண்ட்ரிஸ்

சஞ்சய் ஜா: குளோபல் ஃபவுண்ட்ரிஸ்

அமெரிக்காவின் காலிபோரினியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செமிகண்டக்ட்டர் உற்பத்தி செய்யும் குளோபல் ஃபவுண்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சஞ்சய் ஜா உள்ளார். இந்த நிறுவனத்தில் இவர் சேரும் முன்பு மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். குவால் காம் நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ளார். இவரது அறிவுரையின் பெயரில் அன்மையில் குளோபல் ஃபவுண்ட்ரிஸ் ஆட்டோமோட்டிவ் சிப் வணிகத்தில் இறங்கியுள்ளது.

 அஜய் பங்கா: மாஸ்டர்கார்டு

அஜய் பங்கா: மாஸ்டர்கார்டு

அஜய் பங்கா எனப்படும் அஜய் சிங் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் இந்திய அமெரிக்க வணிக நிர்வாகியாக உள்ளார். தற்போது மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். அமெரிக்க இந்திய பிஸ்னஸ் கவுன்சிலின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் உலகளவில் 6 வது மிகச் செல்வாக்குடைய வணிக நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

 ராகேஷ் கபூர்: ரெக்கிட் பென்கிசர்
 

ராகேஷ் கபூர்: ரெக்கிட் பென்கிசர்

இந்திய பிஸ்னஸ் மென் ஆன ராகேஷ் கபூர் ரெக்கிட் பென்கிசர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்த நிறுவனம் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உணவு நிறுவனம் ஆகும். தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு ஏற்கும் முன்பு அதே நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி மற்றும் பொது நிர்வாக அதிகாரி போன்ற பணிகளில் செயல்பட்டு வந்துள்ளார். கபூர் நுகர்வோர் சுகாதாரச் சந்தையை முன்னெடுப்பதற்காக வணிக நுட்பங்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சாந்தனு நாராயண்: அடோப் சிஸ்டம்ஸ்

சாந்தனு நாராயண்: அடோப் சிஸ்டம்ஸ்

இந்திய - அமெரிக்கப் பிஸ்னஸ் அதிகாரியான சாந்தனு நாராயண் அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியக பொறுப்பு ஏற்கும் முன்பு தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதிவுகளை வகித்து வந்தார்.

ஃபைசர் மற்றும் அமெரிக்க-இந்தியா வணிகக் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளார், மேலும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பரோன் பத்திரிகையால் உலகின் மிகச் சிறந்த சிஈஓ களில் ஒருவர் என்ற நிலையை எட்டிப்பிடிதார்.

இந்திரா நூயி: பெப்சிகோ

இந்திரா நூயி: பெப்சிகோ

இந்திய - அமெரிக்க வணிக அதிகாரியான இந்திரா நூயி பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். உலகின் 100 சக்தி வந்த பெண்கள் பட்டியலில் இவரும் ஒருவர். நுகர்வோருக்கு ஆரோக்கியமான மற்றும் அதிகச் சத்துள்ள பொருட்களை வழங்குவதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

சுந்தர் பிச்சை: கூகுள்

சுந்தர் பிச்சை: கூகுள்

இந்தியர், தமிழர், உலகின் மிகப் பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரால் கூகுள் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியது மட்டும் இல்லாமல் சீனாவில் நீண்ட காலமாகத் தடை செய்யப்பட்டுள்ள கூகுள் சேவையினை மீண்டும் துவங்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சத்திய நாதெல்லா: மைக்ரோசாப்ட்

சத்திய நாதெல்லா: மைக்ரோசாப்ட்

உலகின் மிக முக்கியமான கணினி இயங்கு தள நிறுவனமான மைக்ரோசப்டின் தலைமை செயல் அதிகாரியாகச் சத்திய நாதெல்லா உள்ளார். தலைமை செயல் அதிகாரி பதவிக்கு இவர் வரும் முன்பு மைக்ரோசாப்ட் கிளவுட் தயாரிப்பின் மூத்த தலைவராக இருந்தார். தற்போது செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

தினேஷ் பாலிவால்: ஹர்மன் இன்டர்நெட் இண்டஸ்ட்ரீஸ்

தினேஷ் பாலிவால்: ஹர்மன் இன்டர்நெட் இண்டஸ்ட்ரீஸ்

வாகனங்களுக்கான ஆடியோ சாதனங்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான ஹர்மன் இன்டர்நெட் இண்டஸ்ட்ரீஸ்-ல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இதற்கு முன்பு ஏபிபி இந்தியா லிமிடெட் தேசிய வெளிநாட்டு வர்த்தகக் கவுன்சில் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

சென்ற ஆணு ஹார்மன் நிறுவனத்தினைச் சாம்சங் நிறுவனம் வாங்கியது உலகின் மிகப் பெரிய ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. ஹர்மன் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாக, பாலிவால் இந்த ஒப்பந்தத்தின் முன்னணியில் இருந்தார்.

ராஜீவ் சூரி: நோக்கியா

ராஜீவ் சூரி: நோக்கியா

நோக்கியா நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சூரி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஐக்கிய நாடுகளின் பிராட்பேண்ட் ஆணையராகவும் உள்ளார்.

 பிரான்சிஸ்கோ டி சூசா: காக்னிசண்ட்

பிரான்சிஸ்கோ டி சூசா: காக்னிசண்ட்

இந்திய வம்சாவளியான பிரான்சிஸ்கோ டி சூசா கென்யாவில் பிறந்தவர் ஆவார். தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவர் சமீபத்தில் 2017-ம் ஆண்டின் சிறந்த பார்ச்சூன் தொழிலதிபர் என்று பெயரை பெற்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From Sundar Pichai to Satya Nadella, top 10 CEOs with Indian roots

From Sundar Pichai to Satya Nadella, top 10 CEOs with Indian roots
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X