இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் இன்போசில்-இல் பல்வேறு குழப்பங்களுக்குமத்தியில், இந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) சலில் பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவில் இருந்து விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்திற்கு வந்த பின்னர், இந்நிறுவனத்தின் மிகப்பெரியநம்பிக்கையாக விளங்கியவர், இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி வைத்துத் தொடர்குற்றச்சாட்டுகள் மூலம் பதிவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சலில் பாரிக் இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாகப் பணியைத் துவங்கியுள்ளார். இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

புதிய ஊழியன்
Ernst & Young நிறுவனத்தின் பார்ட்னராக இருந்து சலில் பாரிக், 2000ஆம் ஆண்டுக் கேப்ஜெமினி இதன் ஐடி சேவையைமுழுமையாகக் கைப்பற்றிய பின்பு சலில் கேப்ஜெமினி நிறுவனத்தின் புதிய ஊழியனாகப் பணியாற்ற துவங்கினார்.
இதன் பின் பல்வேறு முயற்சிகள் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது இந்தியாவில் கேப்ஜெமினி டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறது.

தற்போதையப் பதவி
சுமார் 17 வருடமாகக் கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சலில் பாரிக், தற்போது கேப்ஜெமினி நிர்வாகக்குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.

கல்வி
சலில் பாரிக் ஐஐடி பாம்பே கல்லூரியில் ஏரோநாட்டிகள் இன்ஜினியரிங், கார்ன்வெல் பல்கலைகழகத்தில்மெக்கானிக்கள் இன்ஜினியரிங் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான நந்தன் நீலகேனியும் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயின்ஸ்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது அதிகாரி
இன்போசில் நிறுவனம் சந்தையில் 36 வருடமாக இயங்கி வரும் நிலையில் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நிறுவியவர்களேதலைமை நிர்வாக இயக்குனராகப் பணியாற்றி வந்தனர்.
வளர்ந்து வரும் புதிய டெக்னாஜி உலகில் இன்போசிஸ் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக நிறுவனர் குழுவைவிட்டுவிட்டு முதல் முறையாக வெளியில் இருந்து விஷால் சிக்காவை நியமித்தார்கள்.
தற்போது 2வது அதிகாரியாகச் சலில் பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

திறன்..
கேப்ஜெமினி நிறுவனத்தில் இருந்தபோது சலில் பாரிக் ஊழியர்கள் எண்ணிக்கையும், விற்பனையையும் பலமடங்குஉயர்த்தினார். அதிலும் குறிப்பாக நிதியியல் மற்றும் களவுட் கம்பியூட்டிங் பரிவில் அமெரிக்க வாடிக்கையாளர்களை அதிகளவில் சேர்த்தார்.

புதிய சீஇஓ
அடுத்த 5 வருடத்திற்குச் சலில் பாரிக் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.