காலாண்டு வருவாயை விட அதிகமான பணத்தை அபராதம் மூலம் வசூலித்துள்ள எஸ்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிருவகிக்கவில்லை என்றால் அபராதம் வித்து வருகிறது.

 

2017-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் எஸ்பிஐ வங்கி 1,771 கோடி ரூபாயினை வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்று அபராதமாக வசூலித்துள்ளது.

ஒப்பீடு

ஒப்பீடு

ஜூலை முதல் செப்டம்பர் மாதத்தில் எஸ்பிஐ வங்கி பெற்று காலாண்டு நிகர வருவாயான 1,581.55 கோடி ரூபாயினை விட அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை அதிகம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு முடிவுகளுடன் ஒப்பிடும் போது நிகர வருவாயாகப் பெற்ற 3,586 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பாதியாகும்.

அபராதம் எப்போது முதல் விதிக்கப்படுகிறது?

அபராதம் எப்போது முதல் விதிக்கப்படுகிறது?

எஸ்பிஐ வங்கி 2016-2017 நிதி ஆண்டு வரை வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்பதற்காக அபராதம் ஏதும் வசூலிக்கவில்லை. ஆனால் 2017-2018 நிதி ஆண்டில் எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான அபராத தொகையினை 5 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்தது.

சேமிப்புக் கணக்குகள் விவரம்
 

சேமிப்புக் கணக்குகள் விவரம்

எஸ்பிஐ வங்கியில் 42 கோடிக்கும் அதிகமான சேமிப்புக் கணக்குகள் உள்ளன, அதில் 13 கணக்குகள் அடிப்படை சேமிப்புக் கணக்குகள் மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகள் ஆகும். இவை இரண்டுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

எஸ்பிஐ வங்கி வசூலிக்கும் அபராதம்

எஸ்பிஐ வங்கி வசூலிக்கும் அபராதம்

எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ மற்றும் புற நகர் பகுதிகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

இதுவே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

மற்றோரு மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஏப்ரல் முதல் நவம்பர் இடைப்பட்ட காலகட்டத்தில் 97.37 கோடி ரூபாயினைக் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்று கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது

வங்கித் துறைகள்

வங்கித் துறைகள்

பொதுத் துறை வங்கிகள் மட்டும் இல்லாமல் தனியார் வங்கி நிறுவனங்களும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்குகளில் நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம்/கட்டணங்கள் வசூலிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI collects Rs 1,771 crore as charges from below minimum balance accounts

SBI collects Rs 1,771 crore as charges from below minimum balance accounts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X