மனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை அதிரடி

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பெங்களூரு: கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக முடி செலுத்துவது, அழகு நிலையங்களில் வெட்டப்படும் மனித முடி செய்வதில் இருந்து மட்டும் கார்நாடகாவில் இருந்து ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

வடக்கு கர்நாடகாவை சேர்ந்த ஏற்றுமதி மற்றும் மனித முடி வணிகரின் வீட்டை வருமான வரித் துறை நடத்திய சோதனையின் மூலம் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோதனை

வருமான வரித் துறை நடத்திய சோதனையில் வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட விவரங்கள் மட்டும் இல்லாமல் 5 கோடி மதிப்பிலான நகை, ரொக்க பணம் போன்றவையும் கணக்கில் வராமல் பிடிபட்டதாகத் தெரிவித்துள்ளன.

விடுதி மாணவிகள்

அது மட்டும் இல்லாமல் விடுதிகளில் தங்கிப் படிக்கும் பல மாணவிகள் பணத்திற்காகத் தங்கலது நீண்ட கூதல்களை இவரிடம் விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணிக்கை முடிகள்

மேலும் இவரது வீட்டில் சோதனை நடத்திய போது கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட முடிகளும் மூட்டை மூட்டையாகச் சிக்கியுள்ளன என்று வருமான வரித் துறையினை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்றுமதி

கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக முடி செலுத்துவது, அழகு நிலையங்களில் வெட்டப்படும் மனித முடி போன்றவற்றை இவர் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார்.

சிக்கிய சொத்துக்களின் விவரம்

சோதனையின் போது 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிற்கான விவரங்கள் மட்டும் இல்லாமல் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம், 2.5 கோடி மதிப்பிலான நகைகள், 140 கிலோ வெள்ளி பொருட்கள் இவரது வீட்டில் இருந்தது பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை

பல வருடங்களாக இவர் வரி ஏய்ப்பு போன்ற மோசடிகளைச் செய்து சொத்துக்களைக் குவித்தது தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இரண்டாம் ரக முடி விற்பனை மற்றும் விரயம் ஆன முடி விற்பனைகள் குறித்த தகவல்கள் ஏதும் இவரிடம் இல்லை என்றும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் யார் அந்த நபர் என்ற விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. கழிவுகளில் முடி தான் அதிக விலை போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை

சில வாரங்களுக்கு முன்பே இதே வருமான வரித் துறை குழு கர்நாடகா மருத்துவர்களின் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களை ஆய்வு செய்து 100 கோடி ரூபாய் வரை கணக்கில் காட்டப்படாத விவரங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Dept unearths Rs 65 crore black money in human hairs export from Karnataka

Income Tax Dept unearths Rs 65 crore black money in human hairs export from Karnataka
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns