பெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

தமிழ்நாட்டில் பின்னலாடை தயாரிப்புக்குப் பெயர்போன திருப்பூர் நகரத்தில் இருந்து உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் Hugo Boss, நெக்ஸ்ட் மற்றும் மதர்கேர் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு ஆடைகளைத் தயாரித்துக் கொடுக்கும் முக்கிய வாடிக்கையாளராகத் திருப்பூர்-ஐ சேர்ந்த பெஸ்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் விளங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில் இளம் பெண் ஊழியர்களை நிறுவனத்திற்குள்ளேயே அடைத்து வைத்து மார்ட்ன் அடிமை முறையில் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் அளவிற்கு வேலைவாங்குவதாகச் சர்வதேச செய்தி நிறுவனமான கார்டியன் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஹூகோ பாஸ்

ஆடம்பர பேஷன் நிறுவனமான ஹூகோ பாஸ் வெளியிட்ட அறிக்கையில் மார்ட்ன் அடிமையாகத் தென் இந்தியாவில் சில கார்மென்ட் தொழிற்சாலைகளில் ஊழியர்களை நிர்பந்தம் செய்து வேலைவாங்கப்படுகிறது. மேலும் பெண் ஊழியர்களை நிறுவனத்திற்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு அதிகப்படியான பணி சுமை கொடுக்கப்படுகிறது என 2016ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தது.

இதைக் களையவும் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவும் ஹூகோ பாஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

 

கார்டியன்

இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கார்டியன் செய்தி நிறுவனம் தனது ஆய்வை மேற்கொண்டது.

இதில் ஹூகோ பாஸ் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து ஆடைகளை உற்பத்தி செய்து வரும் பெஸ்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தில் வெளியூரைச் சேர்ந்த பல பெண் ஊழியர்கள் நிறுவனத்திற்குள்ளேயே வைத்து அதிகப்படியான பணிச்சுமை அளிக்கப்படுவதாகக் கார்டியன் தெரிவித்துள்ளது.

 

743 நிறுவனங்கள்

பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டும் இத்தகைய வேலையைச் செய்வதில்லை, நெதர்லாந்து அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு இணைந்து 743 நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்களில், ஊழியர்களை வெளியே செல்ல முடியாதவாறு அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண் ஊழியர்கள்

பொதுவான பெரிய பின்னலாடை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு நிறுவனத்திலேயே தங்கி உணவுடன் வேலை பார்க்கும் வாய்ப்புக் கொண்டுக்கப்படுகிறது. இப்படிச் சேரும் ஊழியர்கள் கைதியைப்போல் நடத்துப்படுவதாகவும், வெளி உலகிற்குத் தொடர்புகள் இல்லாதவாறு குறைந்தபட்சம் 4 வருடம் நிறுவனங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதாகவும் கார்டியன் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள்

பொதுவாக ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் கூறுகிறது, அதனைச் சரியான முறையில் நாங்கள் செய்கிறோம் என்று பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கூறுவதாகவும் கார்டியன் தெரிவித்துள்ளது.

ஆதாரம்

கார்டியன் செய்த ஆய்வில் ஊழியர்கள் நிறுவனத்திற்குள்ளேயே அடைத்து வைத்து வேலைவாங்குப்படுவதற்கான ஆதாரங்கள் பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தைத் தவிர மேலும் 2 நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டுள்ளது.

பிராமார்க் நிறுவனத்திற்கான தயாரிப்பில் இருக்கும் சுலோச்சனா காட்டன் மில்ஸ், பிராமார்க் மற்றும் Debenhams நிறுவனங்களின் விநியோக சங்கியில் இருக்கும் ஸ்ரீ சன்முகவேல் மில்ஸ் ஆகிய நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

 

ஆய்வு

நெதர்லாந்து அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புத் தமிழ்நாட்டில் திருப்பூர், பல்லடம் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் சில பெண் ஊழியர்கள் தாங்க படும் கஷ்டங்களைத் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம் அளித்தவர்கள் அனைவரும் நிறுவனத்திலேயே தங்கி வேலைபார்க்கும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திரம்

நாங்கள் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது, வெளியே செல்ல வேண்டும் என்றாலும் வார்டன்களின் கண்காணிப்பில் தான் செல்ல வேண்டும். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போதெல்லாம் மறுப்புத் தெரிவிக்காமல் வேலை பார்க்க வேண்டும்.

நான் இங்கு வேலைபார்ப்பதற்கான முக்கியக் காரணம், நான் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை கொடுக்க என் குடும்பத்திற்குப் பணம் வேண்டும். என்று ஒரு பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

 

மொபைல் போன்

ஸ்ரீ சன்முகவேல் மில்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது பல்வேறு பெண்களிடம் செய்யப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம், நிறுவனத்தில் தங்கி வேலைபார்க்கும் இளம் பெண் ஊழியர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை, இல்லையெனில் அவர்களின் கால்களை நிர்வாகத்தால் கண்காணிக்கப்படுகிறது. என்று தெரிவித்துள்ளனர்.

இடைவேளை

ஸ்ரீ சன்முகவேல் மில்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஆண் ஊழியர் கூறுகையில், "இந்தப் பெண்களுடன் தான் நானும் வேலை செய்கிறேன், இவர்களுடன் பேச எங்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை, இடைவேளை விடும்போது கூடப் பேசக்கூடாது","சில சமயங்களில் செய்கையின் மூலம் பேசிக்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

உள்ளூர் அமைப்பு

இப்படி நிறுவனத்தில் தங்கி வேலைசெய்யும் ஊழியர்களின் நிலை, வாழ்க்கை முறை, பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளூர் அமைப்புகளுக்கும் நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை.

அப்படி முயற்சித்தாலும் நிர்வாகத்தால் பல்வேறு மிரட்டல்களை உள்ளூர் அமைப்புகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.

 

3 நிறுவனங்கள்

கார்டியன் இதுகுறித்துப் பெஸ்ட் கார்பரேஷன் நிறுவனத்திடம் பேசியபோது, இந்நிறுவனம் இப்பிரச்சனைகளை உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு ஊழியர்களுக்குத் தக்க உரிமைகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதர இரு நிறுவனங்களும் இதற்கு எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை என் கார்டியன் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Workers held captive in tirupur mills

Workers held captive in tirupur mills
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns