இந்த ராசிக்காரர்கள் எப்போதுமே டாப்புதான்.. ஆனா ஒன்னு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்கள் தொழிலின் போக்கு எப்படி இருக்கும், நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்குமா என்றும் பல்வேறு சிந்தனைகள் உங்களுக்குள் எழலாம்.

  கவலைப்படாதீர்கள், உங்கள் அனைவரது ராசிக்கும் தொழில் சார்ந்த பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் தொகுத்துள்ளோம். எப்படி உங்கள் ஜாதகத்தைப் பார்த்து உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் இதர பல விஷயங்களை கணிக்க இயலுமோ, அதே போல் உங்கள் தொழிலின் போக்கு எப்படி இருக்கும் என்பதையும் கணிக்கலாம். இவ்வருடத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் இன்னாரது தொழிலின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

  மேஷம்

  மேஷ ராசிக்காரர்களே! இந்த 2018 ஆம் வருடம் உங்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களையும், வாய்ப்புகளையும் கொண்டு வரப்போகிறது. உங்கள் தொழிலில் பரபரப்பாக இயங்கி, போதுமான அளவு வருவாயை ஈட்டுவீர்கள். என்றாலும், மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம், புது தொழில் தொடங்குவதற்கு உகந்ததல்ல; எனவே புது முயற்சிகள் தொடங்குவதை இக்காலகட்டத்தின் போது தவிர்க்கப் பாருங்கள். மொத்தத்தில், 2018 -க்கான உங்கள் ராசிபலன் சிறப்பாகவே இருக்கும்.

  ரிஷபம்

  ரிஷப ராசிக்காரர்களே! உங்கள் தொழில் சார்ந்த வாய்ப்புகள் நன்றாகவே இருக்கும். எனினும், மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், பணிமாற்றம் எதுவும் மேற்கொள்வதைத் தவிர்த்து, உங்கள் வேலையை ஒருமுகமாகச் செய்யுங்கள். மே மாதத்திற்கு மேல் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு அவரது பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். 2018 -க்கான உங்கள் ராசிபலன் வெளிநாட்டுப் பயணம் இருக்கலாம் என்று கூறுவதால், உங்கள் நிதி நிலைமையில் ஏற்றம் உண்டாகும். முதலீடுகள் மற்றும் நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துதல் போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, இந்த வருடம் உங்களுக்கு ஏறுமுகமாகவே இருக்கும்.

  மிதுனம்

  மிதுன ராசி நண்பர்களே! இவ்வருடம் பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வருடத்தில் சிறப்பான பலன்களை அடைவதற்கான ஆற்றலையும், உத்வேகத்தையும் அருளி அனைத்து கிரகங்களும் உங்களை ஆசீர்வதிப்பர். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உகந்தவாறு அயல்நாட்டு உடன்பாடுகளை கைக்கொள்வீர்கள். என்றாலும், மே முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தின் போது செவ்வாய் உச்சத்தில் இருக்கும், அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தொழில்முறையில் பார்த்தால், உங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் உங்கள் திறன் மேம்படும். சில கட்டமைப்பு வாய்ப்புகளின் மூலம் உங்களுக்கு புதிய தொடர்புகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் ஏதேனும் உங்கள் மனதில் இருக்குமானால், அது இவ்வருடத்தில் ஈடேறும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.

  கடகம்

  கடக ராசிக்காரர்களே! இவ்வருடம் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளும், சவால்களும் நிறைந்ததாக இருக்கும். நல்ல விஷயங்களிலேயே உங்கள் கவனம் இருக்கட்டும். திடீரென்று லாபமோ அல்லது சொத்தோ கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக உங்களுக்கான அட்டைகள் கட்டியம் கூறுகின்றன. நீண்ட கால நற்பயன்களை வழங்கவல்ல சொத்து உடன்பாடு அல்லது வணிக வாய்ப்புகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து கதவைத் தட்டும். ஆனால், மார்ச் முதல் ஜூலை வரை, குரு பகவான் இறங்குமுகமாக இருப்பதனால் உங்கள் அதிர்ஷ்டத்தை குலைக்கலாம். இச்சமயத்தில், தொழில் தொடர்பான விஷயங்களில் குழப்பமான மனநிலையில் இருப்பதோடு, உங்கள் பணி அல்லது தொழில்துறையை மாற்றலாமா என்று கூட யோசிப்பீர்கள்.

  சிம்மம்

  2018 ஆம் ஆண்டின் போது, உங்கள் தொழில் விருத்தியடைவதை கண்கூடாகக் காணலாம். நீங்கள் உறுதியாகவும், விடாமுயற்சியுடனும் முயன்றால், உங்கள் முயற்சிகள் யாவும் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அள்ளிக் கொடுக்கும். யாராவது ஒருவர் தலையிட்டு, உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் உதவி செய்வதோடு, நல்ல ஒப்பந்தங்களையும் பெற்றுத் தருவர். நீங்கள் இவ்வருடத்தின் போது மேற்கொள்ளும் ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் இனி வரும் வருடங்களிலும் நற்பலன்களை அளிப்பனவாக இருக்கும். சிம்ம ராசியினரான உங்களுக்கு 2018 ஆம் ஆண்டு பலன் முழுவதும் வெற்றிகளால் எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதே நேரத்தில், உங்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை எதையும் எதிர்பார்த்திருந்தால், அது கைக்கு வராமல் கண்ணாமூச்சி காட்டும்.

  கன்னி

  கன்னி ராசிக்காரர்களே! 2018 ஆண்டிற்கான ராசிபலன் உங்களுக்கு ஏற்படவிருக்கும் மாற்றங்களையும், அனுபவங்களையும் சுட்டிக்காட்டுகிறது. பல நாட்களாக நீங்கள் கிடப்பில் போட்ட விஷயங்கள் இப்போது உங்கள் முன் வரிசை கட்டும். தொழில்முறையில் பார்த்தால், இந்த வருடம் உங்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை வழங்கும் வருடமாக இருக்கும். என்றாலும், 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய தொழில் முயற்சி எதையும் தொடங்க வேண்டாம். மேலும், இரகசியமான தகவல்கள் எதையும் அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்துக் கொள்ளவும். கண்மூடித்தனமான நம்பிக்கை உங்களுக்கே கேடாய் முடியலாம். பணியில் இருப்பவராக இருந்தால், நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். ஆனால் சற்று காலதாமதம் ஏற்படலாம்.

  துலாம்

  துலாம் ராசிக்காரர்களே! 2018 ஆம் ஆண்டின் போது உங்கள் பணியில் கவனமாகவும், உங்கள் நண்பர்களுடன் குதூகலமாகவும் இருப்பீர்கள். என்றாலும், உங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். மார்ச் முதல் ஜூலை வரை, உங்கள் பணி தொடர்பான முக்கிய முடிவுகளை அவசர கதியில் எடுக்காதீர்கள். எதைப் பற்றி உறுதியளிக்கும் முன்பும் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். நற்பயன் என்று பார்த்தால், உங்கள் நிதி நிலைமையின் முன்னேற்றத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையின் பங்களிப்பு கணிசமாக இருக்கும். உங்கள் தந்தையின் ஆதரவும், அரசு அதிகாரிகளிடம் இருந்து நிவாரணங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை சிறப்படைந்து உங்களை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

  விருச்சிகம்

  விருச்சிக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்திற்கு முற்பட்ட காலகட்டம் உங்களுக்கு பல நன்மைகளைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இக்காலகட்டத்தின் போது உங்கள் தொழில் லாபம் ஏறுமுகமாக இருப்பதோடு, உங்கள் பழைய கடன்களை அடைப்பது அல்லது உங்கள் தொழில் விருத்திக்காக புதுக் கடன்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால், அக்டோபர் மாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உங்கள் சக அலுவலர்களுடன் சுமுகமான உறவு பாராட்டுவீர்கள். அக்டோபர் மாதத்தின் போது, குரு பகவான் விருச்சிக ராசிக்கு மாறுவதால், சில சிரமங்கள் ஏற்படலாம். மொத்தத்தில், மேற்கூறிய விஷயங்களை மனதில் இருத்தி, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தினால், விருச்சிக ராசிக்காரரான உங்களின் 2018 ராசிபலன் முழுவதும் நற்பயன்களால் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  தனுசு

  உங்கள் தொழிலைப் பொறுத்தவரை நிர்தாட்சண்யமான சவால்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். சில போராட்டங்கள் இருந்தாலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கும். மார்ச் முதல் ஜூலை வரையிலான காலத்தில், உங்கள் தொழில் மற்றும் சம்பாத்தியம் ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருங்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கும் இந்த ஆண்டு சாதகமாகவே இருக்கும். என்றாலும், அக்டோபருக்குப் பின் கவனமான போக்குடன் இருப்பது நல்லது. தனுசு ராசிக்காரர்களே! இவ்வருடத்தில் உங்கள் தொழில் முயற்சிகளில் பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டும்; ஆனால், அதற்கான பலனும் சிறப்பாகவே இருக்கும்.

  மகரம்

  மகர ராசிக்காரர்களே! வாய்ப்புகள் பல உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. புகழ் வெளிச்சம் உங்கள் மேல் படுவதற்கான சரியான சமயமும் இதுவே. இதுவரை வெளிவராத உங்கள் திறமைகள் பலவும் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அமைதியான முறையில், மனதை ஒருமுகப்படுத்தி உங்கள் இலக்கை நோக்கி நடைபோட்டால், வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்! மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டம் உங்கள் தொழில் மற்றும் பணி சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவைப்படும் காலம் ஆகும். இக்காலகட்டத்தின் போது, உங்கள் பணியை மாற்றத் தலைப்படாதீர்கள். உங்கள் தொழிலில் பங்குதாரராக இருப்பவருடனான எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களில் கவனமாக இருப்பது நல்லது. எனினும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தின் போது, சனி பகவானின் ஆசீர்வாதத்தில் அயல்நாட்டு ஒப்பந்தங்கள் வாய்க்கும்; எனவே நீங்கள் பொறுமை காப்பது நல்லது. இவ்வருடத்தின் போது உங்கள் தொழிலின் போக்கு மிகப் பிரகாசமாக இருக்கும்.

  கும்பம்

  கும்ப ராசிக்காரர்களே! இவ்வருடம் உங்கள் சம்பாத்தியம் மற்றும் வருமானத்திற்கான மூலாதாரங்களை ஏற்றம் காணச் செய்வதில் கவனமாக இருப்பீர்கள். பொறுமையாக இருங்கள், உங்களுக்கு பேரும், புகழும் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில், உங்கள் தொழிலில் ஏற்றம் உண்டாகும். பணியிடத்தில் ஏற்படும் சில குழப்பங்களால் சக ஊழியர்களுடனான உங்கள் நல்லுறவு தடைபடக் கூடும். மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தின் போது செலவினங்கள் அதிகரிக்கும். தொழில் செய்வோர், அயல்நாட்டு தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண சாமர்த்தியமாக காய் நகர்த்துங்கள்!

  மீனம்

  தொழில் முறையில் பார்த்தால், உங்கள் திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாததால், சில பிரச்னைகள் ஏற்படலாம். திடீர் பணியிடை மாற்றமும் உண்டாகலாம். அக்டோபர் மாதத்திற்குப் பின் நிலைமை சற்றே சீராகலாம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், சனிபகவான் இறங்குமுகமாக இருப்பதினால், ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதோடு, குறைவான நற்பயன்களையே எதிர்பார்க்கலாம். இவ்வருடக் கடைசியில், குரு பகவான் விருச்சிக ராசிக்குள் நுழையும் போது, தொழில் முறையில், பல்வேறு முன்னேற்றங்களையும் எதிர்பார்க்கலாம். அதற்குப் பின் நீங்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Career horoscope 2018

  Career horoscope 2018 - Tamil Goodreturns | மேஷம் தொடங்கி மீனம் வரை.. யார் அம்பானி.. யார் மல்லையா.. எந்த ராசிக்கு என்ன பலன்! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more