ஆதார் தகவல் திருட்டு.. 5,000 ஊழியர்களுக்கு உரிமை பறிப்பு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

500 ரூபாய்க்கு ஆதார் தளத்தில் இருக்கும் மக்களின் பெயர், விலாசம், கைரேகை, கண் கருவிழி தகவல்கள், ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள், சிலிண்ட்ர் மானிய தகவல்கள், பான் எண், வருமான வரி கணக்கு எனச் சகலமும் விற்பனை செய்யப்பட்டு வருவதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்று கூறி இணையப் பாதுகாப்பு முழுமையாக இல்லாத தளத்தில் மக்களின் அனைத்துத் தகவல்களும் சேமிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியர்களின் தகவல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது மொபைல் போனுக்கும் ஆதார் இணைக்க வேண்டுமாம்.

5000 ஊழியர்கள்

தகவல் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட ஆதார் அமைப்பான UIDAI, ஆதார் தகவல்களைக் கையாள உரிமை கொண்ட சுமார் 5000 ஊழியர்களின் உரிமையை (Access) முழுமையாக ரத்து செய்துள்ளது.

இந்த 5000 ஊழியர்களில் பதவி பேதமின்றி உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர் வெளியிடப்படாது என்றும் UIDAI அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பயோமெட்ரிக்ஸ்

5000 ஊழியர்களின் உரிமையை ரத்துச் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல், இனி ஆதார் டேட்டாபேஸே பயன்படுத்த வேண்டும் என்றால் ஊழியரின் பயோமெட்ரிக் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே தகவல்களைக் கையாளும் வகையில் சிஸ்டம் மாற்றப்பட்டுள்ளது.

ரஜினி சொல்வதைப் போலப் பழைய சிஸ்டம் சரியில்லை.

 

500 ரூபாய்

500 ரூபாய்க் கொடுத்தால் ஆதார் தளத்தைக் கையாளும் administrator பரிவில் இருக்கும் ஊழியர்களின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டு விற்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

முந்தை வடிவமைப்பு

ஆதார் தளத்தைப் பயன்படுத்த மாநில அரசுகள் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு லிமிடெட் ஆக்சஸ் வழங்கப்பட்டு இருந்தது. இதன் வாயிலாக ஆக்சஸ் கொடுக்கப்பட்டவர் ஆதார் தகவலில் பெயர், பிறந்த தேதி, 12இலக்க எண், ஆகியவற்றை மாற்றவும் செய்யலாம்.

UIDAI அமைப்பிற்கு ஒரு நாளுக்கு 5,00,000 கோரிக்கைகள் தகவல் மாற்றத்திற்காக வருகிறது.

 

புதிய வடிவமைப்பு

தற்போது ஆதார் தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் எண் கொண்ட நபரும், ஆதார் தளத்தைக் கையாள உரிமை கொண்ட நபரின் கைரேகைகளைச் சரிபார்த்த பின்பே தகவல்களைக் கையாள முடியும்.

இதனால் அடுத்தச் சில நாட்களுக்குத் தகவல் மாற்றம் செய்ய வேண்டி நபர்களுக்குக் காலத் தாமதம் ஏற்படலாம், சில இடங்களில் செய்ய முடியாமலும் போகலாம். ஆனால் அடுத்த இணையத் திருட்டு நடக்காது என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

6 மாதம்

கடந்த 6 மாதத்தில் கிட்டத்தட்ட 1,00,000 மோசடியாளர்கள் ஆதார் தளத்தின் உரிமையைப் பயன்படுத்தித் தகவல்களைத் திருடியுள்ளதாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UIDAI remove access for 5,000 officials after data breach

UIDAI remove access for 5,000 officials after data breach
Story first published: Tuesday, January 9, 2018, 15:33 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns