பட்ஜெட் 2018: வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்சமாக உயர்த்த வாய்ப்பு..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நடுத்தரக் குடும்ப மக்கள் 2018-2019 நிதி ஆண்டில் பயன் பெறும் படி பாஜக தலைமையிலான மோடி அரசு 2019-ம் ஆண்டின் பொதுத் தேர்தல் வருவதனை முன்னிட்டு வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி துறையின் மூத்த அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்ட விவரங்களின் படி தற்போது 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்சமாக அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்த இருப்பதாகத் தெரிவித்தனர்.

வரிச் சுமை

வரிச் சுமை நியாயமற்றது அல்ல, அதே நேரத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகப் போதுமான நிதியைத் திரட்ட வேண்டும் என்பதை உறுதி செய்யும் படி சரியான கலவையைச் சேர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

பணவீக்கம்

பணவீக்கம் போன்றவற்றால் ஏற்கனவே நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது என்பது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியை அளிக்கும்.

நுகர்வோர் செலவினங்கள் உயரும்

வரிச் சுமையினைக் குறைப்பதன் மூலமாக நுகர்வோரினை அதிகச் செலவு செய்வதனை ஊக்குவிக்கும் என்றும் இதனால் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை துறை அதிக வளர்ச்சி அடையும் என்றும் இதனால் இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

வரி வசூல்

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்த வரி வசூல் அளவு 7.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை விடவும் 12 சதவீதம் அதிகமாகும். அதே நேரம் முன்கூடியே செலுத்தப்பட வேண்டிய அட்வான்ஸ் வரியும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு 2017-2018 நிதி ஆண்டில் 9.80 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி இலக்கை வைத்துள்ள நிலையில் முதல் 3 காலாண்டிலும் சேர்த்து சென்ற நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 18.2 சதவீதம் உயர்ந்து 6.56 லட்சம் கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.

 

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு மறைமுக வரியில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை நேரடி வரியானது ஓர் அளவிற்கு ஈடு செய்துள்ளது.

சென்ற பட்ஜெட்

சென்ற பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அரசு வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றம் ஏதும் செய்யாமல் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதமாக இருந்த வரியினை 5 சதவீதமாக மட்டும் குறைத்தது.

எதிர்பார்ப்பு

அதே நேரம் நேரடி வரி வருவாயானது உயர்ந்து வருவதால் கண்டிப்பாக இந்த ஆண்டுப் பட்ஜெட்டில் மத்திய அரசு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் விலக்கு வரம்பை 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக உயர்த்துமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2018: Arun Jaitley may hike income tax exemption limit from Rs 2.5L to Rs 3L

Budget 2018: Arun Jaitley may hike income tax exemption limit from Rs 2.5L to Rs 3L
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns