தமிழ்நாட்டு எம்எல்ஏக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. சம்பளத்தில் அதிரடி உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை உயர்த்துவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. பேருந்து ஓட்டுனர்கள் ஊதிய உயர்வுக்காகப் போராட்டம் செய்து வந்தது இன்று மாலையுடன் ஊதிய உயர்வை ஏற்றும் தற்காலிகமாகப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வாப்பஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை பேருந்து ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காத நிலையில் எப்படி எம்எல்ஏக்களுக்கு மட்டும் உதிய உயர்வு அளிக்கப்படுகின்றது என்று விவாதப் பொருளானது.

இப்படிப்பட்ட வேலையில் தமிழக எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு அளிக்க உள்ளனர், கொடுப்பனவுகள் எவ்வளவு, பிற மாநில எம்எல்ஏக்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மாத சம்பளம்

மாத சம்பளம்

தமிழக எம்எல்ஏக்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது 55,000 ரூபாயாக உள்ள சம்பளமானது 1.05 லட்சம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. ஆனால் இதன் மீதான விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்

அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்

சென்ற வருடம் ஜூலை 1 முதல் முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கொறடாக்கு சென்ற ஆண்டு முதல் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளூர் வளர்ச்சி நிதி

உள்ளூர் வளர்ச்சி நிதி

ஊதிய உயர்வு மட்டும் இல்லாமல் எம்எல்ஏக்களின் தொகுதி வளர்ச்சி பணிக்காக அளிக்கப்படு நிதியும் 2 கோடியில் இருந்து 2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

ஓய்வூதியம்

எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தினை 12,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.

ஈடுசெய்யும் கொடுப்பனவு

ஈடுசெய்யும் கொடுப்பனவு

எம்எல்ஏக்கள் தங்கள்:அது செலவுகளை ஈடு செய்ய வழங்கப்படும் காம்பென்செட்ரி அலவென்ஸ் 7,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொகுதி நல பணிகளுக்கான கொடுப்பனவு

தொகுதி நல பணிகளுக்கான கொடுப்பனவு

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியினை ஆய்வு செய்ய அளிக்கப்படும் தொகுதி நல பணிகளுக்கான கொடுப்பனவை 10,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

கன்சாலிடேட் அலவென்ஸ்

கன்சாலிடேட் அலவென்ஸ்

வரி வருவாயில் விலக்கு அளிக்கப்படும் கன்சாலிடேட் அலவென்ஸ் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

வாகன கொடுப்பனவு

வாகன கொடுப்பனவு

வாகனத்திற்கான அலவென்ஸ் தொகையினை 20,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.

போஸ்டல் அலவென்ஸ்

போஸ்டல் அலவென்ஸ்

தபால்கள் அனுப்புவதற்கான கொடுப்பனவில் எந்த மாற்றம் இல்லை என்பதால் எப்போது போல 2,500 ரூபாய் தொடர்ந்து அளிக்கப்படும்.

பிற மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிற மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மாநிலம்எம்எல்ஏ சம்பளம்
தெலுங்கானா எம்.எல்.ஏ சம்பளம் Rs.2,50,000
டெல்லி எம்.எல்.ஏ சம்பளம் Rs.2,10,000
உத்திரப்பிரதேசம் Rs.1,87,000
மகாராஷ்டிரா எம்.எல்.ஏ சம்பளம் Rs.1,50,000
ஆந்திரா எம்.எல்.ஏ சம்பளம் Rs.1,30,000
ஹிமாச்சல பிரதேசம் Rs.1,25,000
ஹரியானா எம்.எல்.ஏ சம்பளம் Rs.1,15,000
ஜார்கண்ட் Rs.1,11,000
மத்தியப் பிரதேசம் Rs.1,10,000
சட்டீஸ்கர் Rs.1,10,000
பஞ்சாப் எம்.எல்.ஏ சம்பளம் Rs.1,00,000
கோவா எம்.எல்.ஏ சம்பளம் Rs.1,00,000
பீகார் எம்.எல்.ஏ சம்பளம் Rs.1,00,000
மேற்கு வங்க எம்.எல்.ஏ சம்பளம் Rs.96,000
கர்நாடகா எம்.எல்.ஏ சம்பளம் Rs.60,000
சிக்கிம் Rs.52,000
குஜராத் எம்.எல்.ஏ சம்பளம் Rs.47,000
கேரள எம்.எல்.ஏ சம்பளம் Rs.42,000
ராஜஸ்தான் எம்.எல்.ஏ சம்பளம் Rs.40,000
உத்தரகண்ட் Rs.35,000
ஒடிசா Rs.30,000
மேகாலயா Rs.28,000
அருணாச்சல பிரதேசம் Rs.25,000
அசாம் Rs.20,000
மணிப்பூர் Rs.18,500
நாகாலாந்து Rs.18,000
திரிபுரா Rs.17,500

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know how much the salaries of the Tamil Nadu MLAs be raised?

Do you know how much the salaries of the Tamil Nadu MLAs be raised?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X