மினிமம் பேலன்ஸ் - ஏடிஎம் கட்டணம் என எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் எவ்வளவு வசூலிக்கின்றன

சென்னை: குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கி கணக்கில் இல்லை என்றால் அபராதம் என்பது மட்டும் இல்லாமல் வங்கிகள் பல்வேறு கட்டணங்களை வசூலித்து வருகிறன. அவை சிறிய அளவாக இருப்பதால் நமது கண்களுக்குப் படுவதில்லை.

அன்மையில் எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கி கணக்கில் இல்லை என்று வசூலித்த அபராத தொகையானது ஒரு காலாண்டு வருவாயினை விட அதிகம் என்று செய்திகள் வெளியானதை அடுத்து அதனைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

எனவே எஸ்பிஐ வங்கி மட்டும் இல்லாமல் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் மினிமம் பேலன்ஸ் மட்டும் இல்லாமல் எதற்கெல்லாம் எவ்வளவு கட்டணத்தினை வசூலிக்கின்றன என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு

எஸ்பிஐ வங்கி கணக்கில் 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கிளைகள் உள்ள பகுதிகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச இருப்பு தொகையானது இருக்க வேண்டும். இல்லை என்றால் 20 முதல் 50 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

எஸ்பிஐ - ஏடிஎம்

எஸ்பிஐ - ஏடிஎம்

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது இலவச பரிவர்த்தனை அளவினை கடந்தால் 20 ரூபாய் வரை ஜிஎஸ்டி உடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே நிதி இல்லா பரிவர்த்தனை என்றால் 8 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் 125 ரூபாய் டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணமாகவும் வசூலிக்கிறது.

எஸ்பிஐ வங்கியில் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் எவ்வளவு?

எஸ்பிஐ வங்கியில் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் எவ்வளவு?

மாதத்திற்கு மூன்று முறை ரோக்க பணத்தினை எந்தக் கட்டணமும் இல்லாமல் டெபாசிட் செய்யாலாம். இதுவே கூடுதலாகச் செய்தால் 50 ரூபாய் உடன் ஜிஎஸ்டி சேர்த்துக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

எஸ்பிஐ வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணங்கள் எவ்வளவு?

எஸ்பிஐ வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணங்கள் எவ்வளவு?

ஒவ்வொரு காலாண்டிற்கும் 15 ரூபாய் உடன் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 எஸ்பிஐ என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

எஸ்பிஐ என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

என்ஈஎப்டி பரிவர்த்தனை செய்யும் போது 2.50 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். இதுவே ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

எஸ்பிஐ செக் புக்குகள்

எஸ்பிஐ செக் புக்குகள்

ஆண்டுக்கு 25 தாள்கள் கொண்ட செக் புக்குகள் இலவசம், அதற்கு அடுத்த 25 தாள் செக் புக்கிற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

எச்டிஎப்சி வங்கி சேமிப்புக் கணக்குகள்

எச்டிஎப்சி வங்கி சேமிப்புக் கணக்குகள்

எச்டிஎப்சி வங்கி சேமிப்புக் கணக்குகளில் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை வைக்க வேண்டும் இல்லை என்றால் 150 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

எச்டிஎப்சி டெபிட் கார்டுகள்

எச்டிஎப்சி டெபிட் கார்டுகள்

டெபிட் கார்டுகள் பயன்படுத்த ஆண்டுக் கட்டணம் 150 ரூபாய் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இலவச பரிவர்த்தனையினை மீறினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்.

எச்டிஎப்சி ரொக்க பணப் பரிவர்த்தனை

எச்டிஎப்சி ரொக்க பணப் பரிவர்த்தனை

மாதத்திற்கு 4 ரொக்க பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம், 5வது பரிவர்த்தனை முதல் 150 + ஜிஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

எச்டிஎப்சி என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

எச்டிஎப்சி என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

எச்டிஎப்சி வங்கியில் என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகள் கடந்த சில மாதங்களாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எச்டிஎப்சி செக் புக்குகள்

எச்டிஎப்சி செக் புக்குகள்

ஆண்டுக்கு 25 தாள்கள் கொண்ட செக் புக்குகள் இலவசம், அதற்கு அடுத்த 25 தாள் செக் புக்கிற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

எச்டிஎப்சி வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணங்கள் எவ்வளவு?

எச்டிஎப்சி வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணங்கள் எவ்வளவு?

ஒவ்வொரு காலாண்டிற்கும் 15 ரூபாய் உடன் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகள்

ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகள்

ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளில் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை வைக்க வேண்டும் இல்லை என்றால் 100+ கூடுதலாகத் தேவைப்படும் தொகையில் இருந்து 5 சதவீதம் அபராதம் ஆக வசூலிக்கப்படும்.

ஐசிஐசிஐ டெபிட் கார்டுகள்

ஐசிஐசிஐ டெபிட் கார்டுகள்

டெபிட் கார்டுகள் பயன்படுத்த ஆண்டுக் கட்டணம் 150 ரூபாய் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இலவச பரிவர்த்தனையினை மீறினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்.

ஐசிஐசிஐ ரொக்க பணப் பரிவர்த்தனை

ஐசிஐசிஐ ரொக்க பணப் பரிவர்த்தனை

மாதத்திற்கு 4 ரொக்க பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம், 5வது பரிவர்த்தனை முதல் 150 + ஜிஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

 ஐசிஐசிஐ என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

ஐசிஐசிஐ என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

என்ஈஎப்டி பரிவர்த்தனை செய்யும் போது 2 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். இதுவே ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

ஐசிஐசிஐ செக் புக்குகள்

ஐசிஐசிஐ செக் புக்குகள்

ஆண்டுக்கு 20 தாள்கள் கொண்ட செக் புக்குகள் இலவசம், அதற்கு அடுத்த 20 தாள் செக் புக்கிற்கு 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐசிஐசிஐ வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணங்கள் எவ்வளவு?

ஐசிஐசிஐ வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணங்கள் எவ்வளவு?

ஒவ்வொரு காலாண்டிற்கும் 15 ரூபாய் உடன் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சம் 5000 ரூபாய் வரை சேமிப்புக் கணக்குகளில் பணம் வைத்து இருக்க வேண்டும் இல்லை என்றால் குறைந்தபட்சம் 100 ரூபாய் அல்லது குறைந்தபட்ச தொகையில் 4 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

ஐடிபிஐ டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம்

ஐடிபிஐ டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம்

ஐடிபிஐ வங்கி ஏடிஎம் கார்டுகளில் இலவச பரிவர்த்தனையினை விட அதிகமான பரிவர்த்தனை செய்தால் 20 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே நிதி இல்லா பரிவர்த்தனை என்றால் 9 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பாங்க் ஆப் பரோடா சேமிப்பு கணக்கு

பாங்க் ஆப் பரோடா சேமிப்பு கணக்கு

பாங்க் ஆப் பரோடா கணக்கில் 1000 குறைந்தபட்ச இருப்பு தொகையானது இருக்க வேண்டும் இல்லை என்றால் காலாண்டிற்கு 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.

பாங்க் ஆப் பரோடா - ஏடிஎம்

பாங்க் ஆப் பரோடா - ஏடிஎம்

பாங்க் ஆப் பரோடா மூலம் பணம் எடுக்கும் போது இலவச பரிவர்த்தனை அளவினை கடந்தால் 20 ரூபாய் வரை ஜிஎஸ்டி உடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் 150 ரூபாய் டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணமாகவும் வசூலிக்கிறது.

பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் எவ்வளவு?

பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் எவ்வளவு?

மாதத்திற்கு 5 முறை ரோக்க பணத்தினை எந்தக் கட்டணமும் இல்லாமல் டெபாசிட் செய்யாலாம். இதுவே கூடுதலாகச் செய்தால் 50 ரூபாய் உடன் ஜிஎஸ்டி சேர்த்துக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பாங்க் ஆப் பரோடா என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

பாங்க் ஆப் பரோடா என்ஈஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்

என்ஈஎப்டி பரிவர்த்தனை செய்யும் போது இலவசம். இதுவே ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+