ஓலா, உபர் கட்டணங்களை நிர்ணயம் செய்யும் கர்நாடகா அரசு.. குறைந்தபட்சம் எவ்வளவு?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பெங்களூரு: கர்நாடகா அரசு புதன்கிழமை ஓலா, உபர் உட்பட அனைத்து டாக்ஸி சேவைகளின் கட்டணங்களையும் மாற்றி அமைத்துள்ளது.

புதிய கட்டண அறிவிப்பினை அடுத்து இனி டாக்ஸி போன்ற கேபுகளில் பயணம் செய்வது என்பது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும் என்று மக்கள் கூறிவருகின்றனர். எனவே புதிய கட்டணம் எவ்வளவு போன்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

4 வகை

கர்நாடக போக்குவரத்து துறையானது குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு, அதிகபட்ச கட்டணம் எவ்வளவு என்று 4 வகையாக வாகனங்களின் விலையினை வைத்துப் பிரித்து வகுத்துள்ளது.

சிறிய வாகனங்கள் - டி வகுப்பு

புதிய கட்டண அமைப்பின் படி 5 லட்சத்திற்கு உட்பட்ட கார்களில் குறைந்தபட்சமாக முதல் 4 கிலோ மீட்டருக்கு 44 ரூபாய் கட்டணம் ஆகும். கூடுதலாகச் செல்லும் 1 கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் முதல் 24 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

சி வகுப்பு

ஐந்து லட்சம் பத்து லட்சம் மதிப்பிலான வாகனங்கள் வரை அடிப்படை கட்டணமாக 52 ரூபாய் வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.

பி வகுப்பு

10 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட கார்களில் குறைந்தபட்ச கட்டணம் 68 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் முதல் அதிகபட்சமாக 34 ரூபாய் வசூலித்துக்கொள்ளலாம்.

ஏ வகுப்பு

ஆடம்பர கார்களில் அதாவது 16 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலை கொண்ட கார்களில் பயணம் செய்யக் குறைந்தபட்சம் 80 ரூபாய் கட்டணம் என்றும் பின்னர்ச் செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 20 முதல் 45 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka government fixes new fare structure for cab aggregators including Ola, Uber

Karnataka government fixes new fare structure for cab aggregators including Ola, Uber
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns