பட்ஜெட் 2018: இந்த 12 துறைகளும் அருண் ஜேட்லியிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றன..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி இன்னும் 15 நாட்களில் மத்திய அரசு 2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதிகப்படியான சலுகைகள் கிராமப்புறங்கள், நடுத்தர மக்களுக்கு வரி விலக்கு போன்றவற்றை அறிவிக்கும் என்றும் அனைவரும் எதிர்பார்த்து வருகிறோம்.

மத்திய அரசு முதன் முறையாகச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கீழ் பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ள நிலையில் வங்கி, வங்கி இல்லா சேவை நிதித் துறை, எப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு என 12 முக்கியத் துறைகள் என்னவெல்லாம் எதிர்பார்க்கின்றன என்று இந்தக் கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

வங்கிகள்

சிறு மற்றும் குறு நிறுவனங்களைத் துவங்கி வேலை வாய்ப்புகளை அதிகரிக்க எம்எம்எம்ஈ திட்டங்களின் கீழ் பட்ஜெட்டில் அதிகப்படியான கடன்களை வங்கிகள் மூலமாக அளிக்க வாய்ப்புகள் உள்ளது. குறைந்த விலை வீட்டுக் கடன் போன்றவற்றுக்கும் நிதி அதிகளவில் வங்கிகள் மூலம் ஒதுக்கப்படலாம்.

தற்போது 5 வருடம் வரை டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் வரி விலக்கு என்பதை 3 வருடமாகக் குறைக்க வாய்ப்புகள் உள்ளது. யூபிஐ மோன்ற சேவைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கப் புதிய திட்டங்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

 

வங்கி சேவைகள் இல்லாத நிதி நிறுவனங்கள்

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கட்டுமான நிறுவங்களுக்கு இடம் அளிக்க மத்திய அரசு உதவும் என்று எதிர்பர்க்கபப்டுகிறது. அது மட்டும் இல்லாமல் சென்ற நிதி ஆண்டினை போலவே இந்த ஆண்டு 2300 கோடி வரை பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திகு நிதி அளிக்க வாய்ப்பு உள்ளது.

தங்கம் இறக்குமதியினைக் குறைக்க அதிகப்படியான இறக்குமதி வரி விதிக்க வாய்ப்புகள் உள்ளது. அப்படி நேர்ந்தால் நகை கடைக்காரர்களுக்குப் பாதிப்பு இருக்கும். இன்பிராஸ்டர்க்சர் பாண்டுகள் மீண்டும் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

 

எப்எம்சிஜி

கிராமங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டங்களுக்குப் பட்ஜெட்டில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டால் நல்ல காரணியாக இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அடுத்த 5 வருடத்தில் கிராமப்புர வருவாயினை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறி இருந்தது. அதனை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

வரி

நேரடி வரி வருவாய் வரும்பை உயர்த்துதல், கார்ப்ரேட் வருமான வரியினைக் குறைத்தல் போன்றவை முக்கியாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிகிரெட் மீதான செஸ் உள்ளைட்ட வரிகள் அதிகரிப்பு போன்றவையும் 2018 பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

 

எண்ணெய் மற்றும் எரிவாயு

எல்பிஜி மற்றும் மண்ணெணை மீதான மானியம் குறைப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டு வரும் பணவீக்கம் குறித்த முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா அதிகளவில் எரிவாயு பயன்படுத்தும் நிலைக்குத் தன்னை மாற்றிக்கொள்வதற்கான முயற்சிகள் எடுத்தல். வேகமாக வளர வேண்டிய துறைகள் மீதான செஸ் வரியைக் குறைத்தல். நிறுவனங்களுக்கான எண்ணெய் விலையில் கலால் வரியைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர்

சாலை, ரயில்வே, வீடு மற்றும் நகர்ப்புற மேன்பாடுகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது ரயில்வே துறைக்கு 10 முதக் 12 சதவீதம் வரை கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.

முக்கியத் திட்டங்களான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, மின்சாரம், ஸ்மார்ட் நகரங்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

 

டெலிகாம்

சுங்க வரி விலக்கு, ஸ்பெக்டர்ம் வாங்கும் போது சேவை வரி விலக்கு போன்றவற்றை டெலிகாம் துறை எதிர்பார்க்கிறது. இலவச பிராட்பேண்டு சேவைக்காகப் பாரத்நெட் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு.

ரியஸ் எஸ்டேட்

முதல் முறை வீடு வாங்குபவர்களுக்குக் கூடுதல் வரி நன்மை, அனைத்து ஒப்புதல்களுக்கும் ஒற்றைச் சாளர அனுமதி.

ஜிஎஸ்டியின் அளவை அதிகரிக்கும் போது ஜிஎஸ்டி விகிதத்தினைக் குறைத்தல்.

 

மெட்டல்

உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்துவதற்காக உற்சாகப்படுத்துதல், மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்கப்படுத்துதல்.

அனைவருக்கும் வீடு மற்றும் சாலை திட்டங்களுக்கு அதிகம் செலவு செய்தல்.

 

பவர் துறை

அனைவரின் வீட்டிற்கும் மின்சாரம், மின்சார வாகன உற்பத்தி போன்ற திட்டங்களுக்குக் கூடுதல் நிதி அளித்து ஊக்குவிக்க வேண்டும்.

பார்மா

மருத்துவமனைகள் கட்டுமானம் மற்றும் வசதிகளை அதிகரித்தல், முதல் 10 வருடம் மருத்துவமனை சேவைகளுக்கு வரி விலக்கு அளிப்பது போன்றவற்றை அளிக்க வேண்டும் எதிர்பார்ப்புகள் உள்ளது.

ஏர்வேஸ்

ஏர் இந்தியா தனியார் மயம் ஆக்கும் திட்டம், விமானத்திற்காக எரிபொருள் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வருவது, விமான உற்பத்திக்கான திட்டங்கள் மற்றும் சிறிய விமான நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்தி விமானப் போக்குவரத்தினை ஊக்குவித்தல் போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம்

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு, ஸ்மார்ட் நகரங்கள் மூலமாக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை அதிகரித்தல் போன்றவற்றுக்கு இந்தப் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை முதலீடுகள் மூலமாக அதிக வருவாயினை மக்கள் ஈட்டி வரும் நிலையில் டிவிடண்ட் முழம் வரும் லாபத்தின் மீது வரி விதிக்கலாமா என்று அரசு விவாதித்து வருவதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Budget 2018: Here's what these 12 sectors are expecting from FM Arun Jaitley?

Budget 2018: Here's what these 12 sectors are expecting from FM Arun Jaitley?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns