மோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்க அழைக்கும் மத்திய அரசின் புல்லெட் ரயில் திட்டத்தினால் இந்திய நிறுவனங்களுக்குப் பெரிதாக எந்தப் பயனும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

 

இந்தியாவில் புல்லெட் ரயில் துவங்க ஜப்பான் அரசுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில் 17 பில்லியன் டாலர் மதிப்பிலான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் ஜபானீஸ் ஸ்டீள் மற்றும் இஞ்சினியர்ங் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடன் அளிக்கும் ஜப்பான்

கடன் அளிக்கும் ஜப்பான்

இந்தியாவின் புல்லெட் ரயில் திட்டத்திற்கான நிதியினைக் குறைந்த வட்டியில் ஜப்பான் அரசு அளிக்கிறது. அதே நேரம் மூலப்பொருள்களைப் பெறுவதற்கான ஆர்டரும் 70 சதவீதம் வரை ஜப்பான் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் அலுவலக வட்டாரத்துடன் இது குறித்து விசாரித்த போது நமக்குத் தகவல்களை அளிக்கவும் மறுத்துவிட்டனர்.

 

ஜப்பானியன் போக்குவரத்து அமைச்சகம்

ஜப்பானியன் போக்குவரத்து அமைச்சகம்

ஜப்பானியன் போக்குவரத்து அமைச்சகத்திடம் இது குறித்துக் கேட்டதற்கு இரண்டு நாட்டு அரசுகளும் மூலப்பொருள் கொள்முதல் குறித்து விவாதித்து வருவதாகவும் ஜூலை மாதத்திற்குள் இதற்காக முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெர்வித்தனர்.

 ஒப்பந்தம்
 

ஒப்பந்தம்

2017-ம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்திய அரசு இடையில் புல்லட் ரயில் குறித்து இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் மேக் இன் இந்தியா கீழ் தயார்ப்பது மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஜப்பான் அளிப்பது என்பது ஆகும்.

தேர்தல்

தேர்தல்

2019-ம் ஆண்டு வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன் மோடி அரசு அதிகப்படியான வேலை வாய்ப்பினை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்றும் சிக்கலில் உள்ளது. அதே நேரம் புல்லெட் ரயில் திட்டமானது தேவையில்லாத செலவு, இதற்காகப் பணத்தினை வீணாக்காமல் பிற நல்ல திட்டங்களுக்கு முதலீடு செய்யலாம் என்றும் விமர்கர்கர்கள் கூறி வருகின்றனர்.

 வேலைக் கலாச்சாரம்

வேலைக் கலாச்சாரம்

ஜப்பான் மற்றும் இந்தியா இடையில் வேலைக் கலாச்சாரம் என்பது வெவ்வேறு விதமாக உள்ளது, இது குறித்து ஜப்பான் நிறுவனங்களுடன் தேசிய அதி வேக ரயில் கார்ப்ரேஷன் விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் தங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா, ஒரு வேலை முடியவில்லை என்றால் புல்லெட் ரயில் பணிகள் தாமதம் அடையும் என்று ஜப்பானிய ரயில் போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகின்றன.

உலக வங்கி

உலக வங்கி

சர்வதேச அளவில் எளிமையாகத் தொழில் துவங்கக் கூடிய 190 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 190 வது இடத்தினையே உலக வங்கி அளித்துள்ளது. இதில் இருந்து புதிதாக ஒரு நிறுவனத்தினை இந்தியாவில் துவங்கி பணிகளை வேகமாக முடிப்பதில் உள்ள சிரமங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஜப்பானிய போக்குவரத்து அமைச்சகத்தின் இரயில்வே பீரோவில் உள்ள சர்வதேச பொறியியல் விவகாரங்களுக்கான இயக்குநரான டோமோயூகி நாகனோ இந்திய நிறுவனங்களுக்கு வேகமாகப் போகக் கூடிய புல்லெட் ரயில் தொழில்நுட்பத்தில் அனுபவம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜப்பானியர்களுக்கு வேலை கலாச்சாரத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முடிந்த வரையில் சுமுகமான முடிவுகளை எடுப்போம் என்றும் அவர் தெரித்துள்ளார்.

 

இந்திய அதிகாரிகள்

இந்திய அதிகாரிகள்

இது வரை இந்திய அதிகாரிகள் இது ஒரு மிகப் பெரிய திட்டம், இந்திய நிறுவனங்களால் அதிகளவில் இந்தத் திட்டத்தில் பங்களிக்க முடியாது என்றே கூறுகின்றனர்.

ஜப்பான் அரசு

ஜப்பான் அரசு

இந்திய புல்லெட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் அரசு 50 வருடம் வரை கடன் அளித்து உதவுவதால் மிகப் பெரிய பயனை அடைய இருக்கிறது என்று இந்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிதி ஆயோக்

நிதி ஆயோக்

நிதி ஆயோக் எனப்படும் கொள்கை கமிஷனும் புல்லெட் ரயில் திட்டத்தில் இந்திய நிறுவனங்களின் பங்கு என்பது மிகக் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.

ஜிடிபி / வேலை வாய்ப்பு

ஜிடிபி / வேலை வாய்ப்பு

2022-ம் ஆண்டுக்குள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 2 டிரில்லியன் டாலர் அளவில் இந்தியாவின் உற்பத்தியை அதிகரித்துச் செய்து 25 சதவீத பொருளாதார வளர்ச்சியினைப் பெற்று 100 மில்லியன் இந்தியர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு இடையில் மோடி அரசின் 5 வருட ஆட்சிக் காலம் முடிய உள்ள நிலையில் இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 2016-2017-ல் 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

புல்லட் ரயில் அடிக்கல்

புல்லட் ரயில் அடிக்கல்

2017-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இந்தியாவில் புல்லெட் ரயில் திட்டத்திற்கான அடித்தளக் கல் நட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து துவக்கி வைத்தார்.

பயன்பெறும் ஜப்பான் நிறுவனங்கள்

பயன்பெறும் ஜப்பான் நிறுவனங்கள்

ஜப்பானின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளரான நிப்பான் ஸ்டீல், சுமிடோமோ மெட்டல் கார்ப், ஜே.பீ. ஹோல்டிங்ஸ் இன்க், கவாசாகி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தோஷிபா கார்ப் மற்றும் ஹிட்டாச்சி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகப்படியான ஒப்பந்தங்களைப் பெற வாயுப்புகள் உள்ளது.

நிப்பான் ஸ்டீல்

நிப்பான் ஸ்டீல்

நிப்பான் ஸ்டீல் நிறுவனம் இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில் ஜேஎப்ஈ, ஹிட்டாச்சி, தோஷிபா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய புல்லெட் ரயில் திட்டத்தில் தங்களுக்கு விருப்பம் உள்ளதாகவும் ஆனால் முழுமையான இன்னும் திட்டமிடவில்லை என்றும், இந்திய நிறுவனங்கள் உடன் இணைந்து செயல்படுவோமா என்றும் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

ரயில் பெட்டி ஆர்டர்

ரயில் பெட்டி ஆர்டர்

புல்லெட் ரயில் பெட்டிகளுக்கான ஆர்டர்கள் கவாசாகி கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் இந்தியாவின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புல்லெட் ரயில்

புல்லெட் ரயில்

புல்லெட் ரயில் தொழில்னுபட்த்தினை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முன்பு அதிகப் புல்லெட் ரயில் திட்டங்களை இந்தியா அமைக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு எதிர்பார்க்கிறது. அதே நேரம் மத்திய அரசு மும்பை - அகமதாபத் தவிரப் பிற புதிய திட்டங்களுக்கு இறுதி வடிவம் அளிக்க இன்னும் முன் வரவில்லை.

மத்திய அரசு பேச்சுவார்த்தை

மத்திய அரசு பேச்சுவார்த்தை

மத்திய அரசு சென்ற வருடம் நிப்பான் ஸ்டீல் மற்றும் இந்தியாவின் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்துடனும் இணைந்து புல்லெட் ரயில் திட்டத்தில் செயல்படுவதற்கான் முயற்சிகளை எடுத்தது. ஆனால் ஜப்பான் நிறுவனம் தரத்தில் குறைபாடு ஏற்படுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளது என்று கூறுகின்றனர்.

சேயில்

சேயில்

20 வருடங்களுக்கு மேலாக இந்திய ரயில்களுக்கு ஸ்டீல் சப்ளை செய்து வரும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் ஸ்டீல் ஆணைத்தின் மீது ஜப்பான் நிறுவனம் தரம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.

 இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

தற்போது உள்ள சூழலில் இந்திய நிறுவனங்கள் மூலப்பொருள்களான செமெண்ட், மனித வளம் போன்றவை மட்டுமே அளிக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவின் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான போட்டியில் உள்ளனர் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் இந்த நிறுவனங்கள் இது குறித்துப் பதில் அளிக்கவும் மறுக்கின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Blow to Make in India, No use for Indian companies in Modi's bullet train project

Blow to Make in India, No use for Indian companies in Modi's bullet train project
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X