1947 முதல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மத்திய பட்ஜெட்கள் எவை..? ஒரு பார்வை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018 - 2019 ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருகின்ற பிப்ரவரி 1 தேதி முன்வைக்க இருக்கும் இந்தத் தருணத்தில், 1947 முதல் 2017-ம் ஆண்டு வரை கடந்த காலப் பட்ஜெட்கள் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களைச் செய்துள்ளது தெரியுமா?

இந்தியாவின் முதல் பட்ஜெட்ல் இருந்து 2017-ம் ஆண்டு வரை மக்களுக்குப் பட்ஜெட் என்னவெல்லாம் கொண்டு வந்தன என நாம் இங்கே பார்க்கலாம்.

நிதி அமைச்சர் : ஆர். கே. சண்முகம் செட்டி
 

நிதி அமைச்சர் : ஆர். கே. சண்முகம் செட்டி

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947 ல் வழங்கினார். இந்தப் பட்ஜெட்டில் வேளாண்மை மீது முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அடுத்தப் பத்தாண்டு காலக் கட்டத்தில் தொழில்துறையின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வனத்துறை, மீன்வளம் மற்றும் ஜவுளித் துறைகள் என எல்லாப் பகுதிகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.

நிதி அமைச்சர் : சி.டி. தேஷ்முக்

நிதி அமைச்சர் : சி.டி. தேஷ்முக்

இந்தப் பட்ஜெட்டில் 'உணவை மேலும் அதிகரிக்கும்' திட்டம் முன்மொழியப்பட்டது. நேருவின் ஆலோசனைப்படி நீர் பாசனத்தின் மூலம் வேளாண்மையில் அதிக லாபத்தை ஈட்ட உறுதி செய்யப்பட்டது.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு வேளாண்மையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. 'உணவை மேலும் அதிகரிக்கும்' திட்டமானது பொருளாதார வளர்ச்சியில் குறுகிய கால அடிப்படையில் தேவைகளைப் பூர்த்திச் செய்ய உதவியது.

நிதி அமைச்சர் : மொரார்ஜி தேசாய்

நிதி அமைச்சர் : மொரார்ஜி தேசாய்

இந்த ஆண்டில் 14 வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டது. வங்கிகள், முதன்மை துறைகளுக்கு 40 % கடன் வழங்குவதை அவசியமாக்கப்பட்டது.

விவசாயம், சிறு தொழில் நிறுவனம், சில்லறை வர்த்தகம், சிறிய அளவிலான வியாபாரங்கள் ஆகியவை முதன்மை துறைகளாகக் கருதப்பட்டது. சமுகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் நோக்கமாக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது.

பொது நிதி, சேமிப்பு, வரி விதிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் மீது கவனம் வைத்து 1960 ல் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது.

இருப்பு நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் நோக்கமாகக் கருதப்பட்டது.

 நிதி அமைச்சர் : இந்திரா காந்தி
 

நிதி அமைச்சர் : இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சரால் இவ்வாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 'பலகீனமான பிரிவு நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பொருளாதார வலிமைக்கு மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்' என இந்திரா காந்தி கூறினார்.

இந்தப் பட்ஜெடில் 'வறுமை ஒழிப்புத் திட்டங்கள்' முன்மொழியப்பட்டது. சிறப்புத் திட்டங்கள் மற்றும் தன் விருப்பப்படி இடமாற்றம் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சமூக நலச் செலவினங்கள் மற்றும் வளர்ச்சி சாத்தியங்களை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசானது அதிகச் செலவு இல்லாத பொருளாதாரப் பாதையை அமைத்தது.

நிதி அமைச்சர் : வி. பி. சிங்

நிதி அமைச்சர் : வி. பி. சிங்

நீண்ட கால அடிப்படையில் வரி சீர்திருத்த திட்டம் தொடங்கப்பட்டது. கலால் (வரி) கொள்கையானது மிகப் பெரும் சீரமைப்பைக் கண்டது. நிதி கொள்கையானது வரித் தளத்தை விரிவாக்க வடிவமைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட மதிப்புக் கூட்டு வரி (அல்லது) MODVAT அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் தங்களின் உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்கள் மீதான கலால் வரியை உடனடியாகவும் முழுமையாகவும் செலுத்துவதற்கு MODVAT அனுமதிக்கிறது.

நிதி அமைச்சர் : மன்மோகன் சிங்

நிதி அமைச்சர் : மன்மோகன் சிங்

இந்தக் காலக் கட்டத்தில் கொண்டு வந்த பட்ஜெட் விளையாட்டு விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார உத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. இந் பட்ஜெட்டில் புதிய நாணய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வமான ஆட்சி முறையும் ஒழிக்கப்பட்டது.

புதிய ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையானது, பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்தது. உயர் முதன்மை தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டு எல்லையானது 51 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதங்கள் எளிதில் மாற்றப்படத்தக்க வகையில் இயற்றப்பட்டது.

வணிக வங்கிகளில் தொகுப்பு வட்டி விகிதங்கள் அடிப்படையில் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

தனியார் துறைகள் லாபம் ஈட்டி கொடுப்பவர்களாக உருவானார்கள். இதனால், தனியார் துறையின் வளர்ச்சி நோக்கம் மற்றும் வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

1992 ம் ஆண்டுப் பட்ஜெட், உலகமே இந்தியாவைத் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மாற்றி அமைத்தது.

நிதி அமைச்சர் : ப. சிதம்பரம்

நிதி அமைச்சர் : ப. சிதம்பரம்

இந்தப் பட்ஜெடில் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த சாலை வரை படத்தை வழங்கினார். நேரடி மற்றும் மறைமுக வரியானது இந்தியாவில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

தனி நபரின் அதிகபட்ச வரி விகிதம் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. நிறுவனங்களின் வருமான வரி விகிதம் 40 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. உச்ச சுங்க வரியானது 50 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆதாயப் பங்கு வரி ரத்துச் செய்யப்பட்டது.

வருமான வரித் திட்டம் என்ற தன்னார்வ வெளிப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு, கருப்புப் பணத்தை மீட்பதே இந்தப் பட்ஜெட்டின் இலக்காகக் கருதப்பட்டது.

வரி தாக்கல் என்பது, தொலைப்பேசி, நான்கு சக்கர வாகனம், அசையா சொத்து மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றின் மீதான உரிமையில் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த வரவு - செலவு திட்டமே 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் : யக்ஷ்வந்த் சின்ஹா

நிதி அமைச்சர் : யக்ஷ்வந்த் சின்ஹா

இந்தப் பட்ஜெட்டில் 5 முக்கியத் திட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்தி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

வருமான வரிச் சட்டம் 88 வது பிரிவின் படி ஆண்டின் வருமானம் 1.5 லட்சம் முதல் 5 லட்சங்களுக்குள் இருப்போருக்கு வரிச் சலுகை 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ஆயுள் காப்பீட்டுப் பிரிமீயத்தில் 5 சதவீதம் சேவை வரியாக நிறைவேற்றப்பட்டது.

தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏற்றுமதி லாபத்தில் 100 சதவீதம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு, 100 சதவீதம் EOUs மீட்கப்பட்டது.

குடியிருப்பு கட்டுமானங்களுக்காக ஊக்கத் தொகைகள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் தான் மதிப்புக் கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது. 'வாட்' இப்போது 'ஜிஎஸ்டி' அறிமுகத்திற்கு முதுகெலும்பாக உள்ளது.

9. 2005 : சமூகத் துறை உத்வேகம்

9. 2005 : சமூகத் துறை உத்வேகம்

தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டம் என்பது வேலை உத்திரவாத திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் செயற் பயிற்சி பெற்றிராத கிராமப்புற மக்களுக்கு 150 நாட்கள் பணி உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. அவ்வாறு நடக்காத பட்சத்தில் அரசாங்கம் அவர்களுக்கு ஊதியம் வழங்க நேரிடும்.

10. 2017 பட்ஜெட்

10. 2017 பட்ஜெட்

முதன் முறையாகப் பிப்ரவரி இறுதியில் நடத்தப்பட்டு வந்த பட்ஜெட் தாக்கலினை மோடி தலைமையிலான அரசு மாற்றிப் பிப்ரவரி 1 தேதியே தாக்கல் செய்தது. முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் தான் ஏப்ரல் மாதம் முதல் பொது நலதிட்டப்பணிகள் நடைபெறும் என்றும் ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாகப் பயனர்களைச் சென்றடையும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் 100 வருடம் தனியாக இருந்த ரயில்வே பட்ஜெட் நீக்கப்பட்டுப் பொதுப் பட்ஜெட்டின் போது வாசிக்கப்பட்டது.

 11. பட்ஜெட் 2018

11. பட்ஜெட் 2018

2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. இதனால் முதல் முறையாக ஜிஎஸ்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது 2018-ம் ஆண்டுப் பட்ஜெட்டின் முக்கியச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important Budgets in the history of India from 1947 to 2018

Important Budgets in the history of India from 1947 to 2018
Story first published: Thursday, January 18, 2018, 10:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X