இக்பால் முதல் திருவள்ளுவர் வரை.. பட்ஜெட் அறிக்கையில் வாசிக்கப்பட்ட கவிதைகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 2018 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளார். அதே நேரம் நிதி அமைச்சர்கள் கவிதைகள் வாசித்த பிறகே தங்களது பட்ஜெட் உறையினைத் துவங்குகின்றனர்.

இது தவிர, நிதி அமைச்சர்கள் தங்களது உரையில் சுவாரஸ்யமான பேச்சுகளால் கவர முயல்வது மட்டுமல்லாமல், தங்களது கவிதை மூலம் எதிர் கட்சியினரையும் நோண்ட முயல்கின்றனர்.

உருது கவிஞர் அல்லாமா இக்பால் முதல் தமிழ் கவிஞரும் தத்துவ ஞானியுமான திருவள்ளுவர் வரை கவிஞர்களால் கூறப்பட்ட கவிதைகளிலிருந்து தற்போது, பட்ஜெட் உரைகளின் போது கூறப்படும் கவிதைகள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.

சமீபத்திய ப்ஜெட் உரையில் இருந்து ஒருசில கவிதை தொகுப்புகளின் அர்த்தங்களை மட்டும் இங்கே மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி: பட்ஜெட் 2017-2018

புதிய உலகம், புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய ஆசைகள், சில பழையதாக இருக்கும், சில புதியதாக இருக்கும், ஆனால் வர இருக்கும் வெளிச்சத்துடன் இருள் கண்டிப்பாகப் போராட வேண்டி வரும் அல்லது கருப்புப் பணம் தனது நிறத்தினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பட்ஜெட் 2017-2018-ன் போது உறுது கவிதை ஒன்றை வாசித்துத் தனது பட்ஜெட் உறையினை அருண் ஜேட்லி துவக்கினார்.

நிதி அமைச்சர்: அருண் ஜெட்லி; பட்ஜெட் : 2016-17; கவிஞர் : அறியப்படவில்லை

பெரிதும் களைப்புற்ற கப்பலோட்டி மற்றும் அதிகம் பயன்படுத்திய துடுப்பையும் எங்கள் கைகளில் அளித்த போது ஒவ்வொரு இடத்திலும் புயல்கள் மற்றும் நீரோட்டங்களை எதிர் கொண்டோம். ஆனாலும் நாங்கள் இத்தகைய நிலைமையை அனுபவித்தும், இந்தச் சூழலில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பதைக் காண்பித்தோம்.

நிதி அமைச்சர்: டாக்டர் மன்மோகன் சிங்; பட்ஜெட் : 1992-93; கவிஞர் : முசாபர் ரஸ்மி

இதுவும் கூட வரலாற்றில் நடந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகக் காலத் தவறுகள் ஏற்படுத்திய தருணங்களால் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டது.

நிதி அமைச்சர்: ஜஷ்வந்த் சிங்; பட்ஜெட் : 2004-05; கவிஞர் : அறியப்படவில்லை

ஏழை எளிய மக்களின் வயிற்றுக்குள் உள்ள உணவைப் போல் இல்லத்தரசிகளின் கைப்பையில் பணம் உள்ளது.

நிதி அமைச்சர்: அருண் ஜெட்லி; பட்ஜெட் : 2015-16; கவிஞர் : அறியப்படவில்லை

தோட்டத்தில் நாங்கள் ஒரு சில மலர்களைப் பூத்துக் குலுங்கச் செய்துவிட்டோம், இன்னும் அதிகமாக மலர்களைப் பூக்க வைக்க எண்ணினோம். ஆனால் தோட்டத்தில் ஒரு சில பழைய முட்களே உள்ளன.

நிதி அமைச்சர்: ப. சிதம்பரம்; பட்ஜெட் : 2013-14; கவிஞர் : திருவள்ளுவர்

தெளிவான சிந்தனையோடு சரியான பாதையை நோக்கிச் செல்வது, உறுதிப்பாடு உடையவர்களாக இருப்பது, மனதால் ஆழ்ந்து உறங்காமல் இருப்பது ஆகிய போதனைகள் எந்தச் செயலையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த மனிதனுக்குத் தேவை.

நிதி அமைச்சர்: யஷ்வந்த் சின்ஹா; பட்ஜெட் : 2001-02; கவிஞர் : அறியப்படவில்லை

சில நேரங்களில் நீங்கள் புயல் தாக்குதல்களோடு போராட வேண்டியதாக இருக்கும். எத்தனை காலமானாலும் அந்த நிலையில் தொடர்ந்து போராடி கரையைச் சேரும் வரை உங்களது போராட்டம் தொடர வேண்டியதாக இருக்கும்.

நிதி அமைச்சர்: டாக்டர் மன்மோகன் சிங்; பட்ஜெட் : 1991-92; கவிஞர் : அல்லாமா இக்பால்

கிரீஸ், எகிப்து மற்றும் ரோம் போன்ற நாடுகளில் பழைய நாகரிகங்கள் பூமியில் இருந்து மறைந்துவிட்டது. எங்கள் நாகரிகம் இன்னும் உயிருடன் இருப்பதற்குச் சில காரணங்கள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Finance Minsters Poem reading in budget

Indian Finance Minsters Poem reading in budget
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns