"இனி இந்தியாவில் வருமான வரி கிடையாது” 2019 தேர்தலுக்கு Modi யின் அடுத்த ஆயுதம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Modi தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலே பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவித்தது. மேக் இன் இந்தியா, சுவச் பாரத், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஜன் தன் திட்டம், பேடி பசாவ் பேடி படாவ், ஸ்மார்ட் நகரங்கள், உஜ்வல் திட்டம், மானியத்தை வங்கிக் கணக்கில் கொடுக்கும் திட்டம் இப்படி பல ஜிகுனாக்களைக் காட்டினாலும் செயலில் என்னவோ சுமார் தான்.

 

நல்ல வேளை இன்னும் ஆர்எஸ்எஸ்-ன் முக்கியமான ராம் மந்திர் போன்ற கோர திட்டங்கள் பேச்சுவார்த்தையோடு முடங்கிப்போனது. ஆனால் ஒரு திட்டம் மட்டும் இன்னமும் சூடு குறையாமல் இருக்கிறது. ஆம், மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே பிஜேபி கட்சியைச் சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் தனிநபர்கள், மாத சம்பளக்காரர்கள் செலுத்தும் வருமான வரி முறையை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தை முன்வைத்தனர்.

2019 - 20 நிதிஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது இத்திட்டம் மீண்டும் அரசு அதிகாரிகள், மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மோடியும் ஒரு வேகத்தில் அறிவித்து விடுவாரோ என மூத்த அதிகாரிகளும் பயந்து வருகிறார்களாம்.

 முக்கியத் தலைவர்கள்

முக்கியத் தலைவர்கள்

தனிநபருக்கான வருமான வரியை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என பிஜேபி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி முதல் ஆர்த்கிரான்தி-யின் அனில் போகில்  வரையில் பலரும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதை அதிபுத்திசாலியான மோடியும் ஆலோசித்து வருகிறார்..?

நிலையான வரி

நிலையான வரி

மேலும் முன்னணி பொருளாதார வல்லுனரான சுர்ஜித் பல்லா, தற்போது இருக்கும் பல கட்ட வருமான வரி விதிப்பை முழுமையாக நீக்கிவிட்டு ஒற்றை வரி விதிப்பைக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

 அனில் போகில்
 

அனில் போகில்

பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் மாதத்தில் அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை ஆர்த்கிரான்தி-யின் அனில் போகில் பரிந்துரையின் படியே செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் மோடி அரசு ஆர்த்கிரான்தி அமைப்பின் பரிந்துரையான தனிநபர் மீதான வருமான வரி நீக்கம் என்பதையும் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவே சொல்கிறார்கள், அதிகார வட்டத்தினர்கள்.

நேரடி வரி விதிப்பு

நேரடி வரி விதிப்பு

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய அமைத்த மோடி அரசு, தற்போது 58 வருடப் பழமையான வருமான வரிச் சட்டத்தை இன்றைய நடைமுறைக்கு மாற்றும் பணியில் இறங்கியுள்ளது. 5 மாத தொடர் ஆய்வுகளுக்குப் பின் அடுத்தச் சில வாரங்களில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

தனிநபர் வருமான வரி நீக்கம் அல்லது ஒற்றை வரி விதிப்பு முறை ஆகியவற்றுக்குக் குறித்து முடிவுகள் 5 மாத ஆய்வுகளின் முடிவுகளை வைத்தே முடிவு செய்யப்பட உள்ளது. ஆய்வுகளின் முடிவ்களும் அரசுக்கு கிடைத்துவிட்டதாம். இப்போது முடிவுக்காகத் தான் கட்சியினர்களும் அர்த்கிராந்தி குழுவினரும் காத்திருக்கிறார்களாம்.

ஆனால் 2019-20 நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட முடியாது என எதிர்கட்சிக்காரர்களும் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதோடு இது ஒரு இடைக்கால பட்ஜெட் எனப்தையும் அழுத்திச் சொல்கிறார்கள். 

விவாதங்கள்

விவாதங்கள்

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது மிகவும் கடினமாக உள்ளது. இந்நிலையில் நாட்டின் மொத்த ஜிடிபியில் 2 சதவீத தொகை தனிநபர் வருமான வரி மூலம் கிடைக்கிறது.

இது இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு 2 சதவீத தனிநபர் வருமான வரி என்பது மிகவும் குறைவு.

 

நியாயமானவர்கள்

நியாயமானவர்கள்

இந்தியாவில் வருமான வரிச் செலுத்துவோர்களில் அதிகமானோர் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருமான வரியைச் செலுத்தி வருகின்றனர் அல்லது வருமான வரி சம்பளத்திலேயே கழித்து வழித்து எடுக்கப்படுகிறது. ஆனால் யாரும் சந்தோஷமாக வரி செலுத்தவில்லை என்பது உண்மை தானே..?

வருமானம் இழப்பு

வருமானம் இழப்பு

இனி வருவது எல்லாம் பாஜகவினரின் கண் மூடித்தனமான கருத்துக்கள். படித்துச் சிரியுங்கள்.

தனிநபர் வருமான வரியை இழப்பதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய் இழப்பு ஏற்படும், ஆனாலும் மக்களின் கையில் பணம் புழக்கம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து நாட்டின் தேவையும் வளர்ச்சியும் அதிகரிக்கும் எனப் பலர் விவாதம் செய்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் சேமிப்பின் அளவும் அதிகரிக்குமாம்.

 

 அரசு கவனிப்பு

அரசு கவனிப்பு

தனிநபருக்கான வருமான வரி நீக்கப்பட்டால் அரசின் வரி வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி, கருப்புப் பணத்தைக் கண்டறிதல் ஆகியவற்றில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இப்படி உருவாகும் வேலைவாய்ப்புகளுக்குச் சம்பளம் குறைவாக இருந்தாலும், நிறுவனங்கள் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தும் முயற்சியில் இறக்கும்.

வங்கிகள்

வங்கிகள்

வரி இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் தங்களது பணத்தை வங்கியிலேயே வைக்கும் காரணத்தினால் வங்கிகளின் நிலை மற்றும் வருமானம் மேலும் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் வைப்பு மற்றும் கடன் அளிப்பு அளவுகளும் அதிமாக இருக்கும்.

2019 பொதுத் தேர்தல்

2019 பொதுத் தேர்தல்

மோடியின் 3 ஆண்டு ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது என மக்கள் கூறியது, குஜராத் தேர்தலில் குறைந்தபட்ச வித்தியாச அளவில் அவர் வெற்றிபெற்றது மூலம் பிஜேபி மற்றும் மோடியின் நிலையில் தெளவிவானது.

இத்தகைய சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டுப் பிஜேபி பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளது.

 

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இந்நிலையில் தனிநபருக்கான வருமான வரியை முழுமையாக நீக்கம் பற்றிய அறிவிப்பு மோடி அரசால் அறிவிக்கப்பட்டால், வரும் பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் தங்களுக்குத் தான் என கொண்டாடி வருகிறார்களாம். 

ஒற்றை அறிவிப்பு

ஒற்றை அறிவிப்பு

இந்த ஒற்றை அறிவிப்பின் வாயிலாக மோடி அரசு சந்திக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, உற்பத்தித் துறையில் இருக்கும் தொய்வு, சேவைத் துறையில் உள்ள மந்த நிலை, மக்களின் மன நிலையில் என அனைத்தையும் மீட்டு எடுக்க முடியும்.என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

எந்த பயனுமில்லை..!

எந்த பயனுமில்லை..!

<strong>மோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..!</strong>மோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..!

 

 

#KingfisherCalendar2018

#KingfisherCalendar2018

<strong>இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..! </strong>இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..! 

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No income tax: Stunning idea before Budget, what is modi decision?

No income tax: Stunning idea before Budget, what is modi decision? |என்னது இனி வருமான வரியே இல்லையா..!! மோடி அரசின் புதிய ஐடியா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X