பட்ஜெட் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாத 10 உண்மைகள்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-2019 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வர இருக்கும் 2018 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது அருண் ஜேட்லி வாசிக்க இருக்கும் 5வது மத்திய பட்ஜெட் ஆகும். நடப்பு அரசின் கடைசி முழுப் பட்ஜெட்டும் இது தான்.

எனவே இது வரை இந்திய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நடைபெற்ற சில சுவாரசியமான உங்களுக்குத் தெரியாத, கேள்விப்படாத உண்மைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

முதன் முறையாகப் பட்ஜெட் கூட்டத்தில் ஜிஎஸ்டி வார்த்தை எப்போது கூறப்பட்டது?
 

முதன் முறையாகப் பட்ஜெட் கூட்டத்தில் ஜிஎஸ்டி வார்த்தை எப்போது கூறப்பட்டது?

2006-ம் ஆண்டுப் பிப்ரவரி 28ம் தேதி முன்னால் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் கூடத்தில் தான் முதன் முறையாக இந்திய பாராளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி என்ற வார்த்தை ஒழித்தது. நாடு முழுவதும் ஒரே வரி ஆட்சி முறையினைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனையினைச் சிதம்பரம் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் வழங்கினார்.

 உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

1990 களின் பட்ஜெட் வரையிலான 30 ஆண்டுப் பட்ஜெட் கூட்டங்களில் உள்கட்டமைப்பு என்ற வாரத்தினையே பயன்படுத்தியது கிடையாது. 1990-ல் தான் முதன் முறையாகப் பட்ஜெட் கூட்டத்தில் உள்கட்டமைப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

 பெண்கள்

பெண்கள்

பாலினம் பாகுபாடு குறித்து அன்மை பட்ஜெட் கூட்டங்களில் விவாதிக்கப்படும் நிலையில் 1980கள் வரை பட்ஜெட் கூட்டங்களில் பெண்கள் என்ற வாதையினையே பயன்படுத்தியது கிடையாது.

கருப்புப் பட்ஜெட்

கருப்புப் பட்ஜெட்

இந்திய வரலாற்றில் 1973-1974 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தான் கருப்புப் பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டின் பற்றாக்குறை 550 கோடி ரூபாய் ஆகும்.

பிரதமர்கள் வாசித்த மத்திய பட்ஜெட்கள்
 

பிரதமர்கள் வாசித்த மத்திய பட்ஜெட்கள்

1958-1959 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்கலால் நேரு வாசித்தார். அவருக்குப் பிறகு இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி உள்ளிட்டவர்கள் பிரதமராக இருக்கும் போதே பட்ஜெட்டினை வாசித்துள்ளனர்.

 கிப்ட் டாக்ஸ்

கிப்ட் டாக்ஸ்

கிப்ட் டாக்ஸ் எனப்படும் ஆடம்பர பரிசு பொருட்கள் மீதான வரியினை 1958-1959 நிதி ஆண்டுப் பட்ஜெட்டின் போது நேரு பட்ஜெட் தாக்கல் செய்த போது அறிமுகம் செய்து வைத்தார். பரிசு அளிக்க ஒரு ஆண்டு முழுவதும் ஒருவர் எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்று கணக்கிடப்பட்டு வரி செலுத்த வேண்டும் என்பதே கிப்ட் டாக்ஸ் ஆகும்

டிஜிட்டல்

டிஜிட்டல்

பட்ஜெட் கூட்டத்தில் முதன் முறையாக டிஜிட்டல் என்ற வார்த்தை ஒரே முறை 1982-1983 நிதி ஆண்டில் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு 2016-2017 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 7 முறை டிஜிட்டல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 பிறந்த நாள் பட்ஜெட்

பிறந்த நாள் பட்ஜெட்

மொராஜ் தேசாய் மட்டும் தான் இரண்டு முறை பட்ஜெட்டினை தனது பிறந்த நாளான பிப்ரவரி 29 தேதி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1964 மற்றும் 1968 என இந்த இரண்டு முறையும் லீப் ஆண்டு என்பதால் இவருக்கு மட்டும் இந்தச் சிறப்புக் கிடைத்துள்ளது.

ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியர்

2012-ம் ஆண்டி நிதி அமைச்சராகப் பிரனாப் முக்கர்ஜி இருந்த போது "I must be cruel to be kind," என்ற 16வது நூற்றாண்டில் வில்லியம் 16 ஆம் நூற்றாண்டின் நீண்டகால நாடக நாடக வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்டை மேற்கோள் காட்டினார். நீண்டகாலத்தில் பொருளாதாரத்தின் நன்மைக்காகத் தேவையான கடுமையான கொள்கை முடிவுகளைப் பற்றி முகர்ஜி பேசினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Budget facts you did not know until now

10 Budget facts you did not know until now
Story first published: Friday, January 19, 2018, 11:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X