டெல்லியில் முக்கிய கூட்டம்.. அருண் ஜேட்லியிடம் ‘ஓபிஎஸ்’ என்ன கேட்டார்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் 2018-2019 இன்னும் 13 நாட்களில் வர இருக்கும் நிலையில் நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்துள்ளார்.

பட்ஜெட் குறித்து மாநில அமைச்சர்களுடன் விவாதித்த விவரங்கள் அனைத்தும் வெளியாக நிலையில் தமிழகம் சார்பாகக் கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் மற்றும் சில அமைச்சர்கள் வைத்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் என்னென்ன என்பது மட்டும் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் என்ன கேட்டார்

ரூ. 7,446 கோடி செலவில் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு திட்டம், தேசிய நெடுஞ்சாலைகளிலும், கோயம்பேடு-பூந்தமல்லி-வலாஜாஜபேட் சாலையின் ஆறு வழித்தடங்களிலும் வரும் பட்ஜெட்டில் சாலைப் பாதுகாப்புப் பணிக்காக 3,800 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று அருண் ஜேட்லியிடம் தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மற்றும் பீகார் மாநில முதல்வர்கள், டெல்லி, குஜராத், மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு துணை துணை முதல்வர் மற்றும் 14 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மந்திரிகள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றும் தங்களது மாநில திட்டங்களுக்கான கோரிக்கையினை வைத்துள்ளனர்.

அருண் ஜேட்லி

மாநில அரசுகள் வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் அவர்கள் அளித்துள்ள ஆலோசனைகள் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறினார்.

பட்ஜெட் 2018-2019

இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட் என்று அழைக்கப்படும் 2018-2019 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வர இருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Arun Jaitley's pre Budget meet with state finance ministers. What OPS Asked for Tamil Nadu

Arun Jaitley's pre Budget meet with state finance ministers. What OPS Asked for Tamil Nadu
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns