மல்லையாவுக்கு செக்.. 4,000 கோடி சொத்துக்களை விற்க அமலாக்கத் துறை முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமலாக்க துறை யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் விஜய் மல்லையாவுக்கு உள்ள பங்குகளை விற்று 4,000 கோடி ரூபாய் அல்லது இவர் வாங்கிய கடனில் பாதித் தொகையினைத் திரட்ட முடிவு செய்துள்ளனர்.

 

இந்தியாவின் மிகப் பெரிய பீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் விஜய் மல்லையாவுக்கு உள்ள 15.2 சதவீத பங்குகளை அமலாக்கத் துறை தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

 செபி உதவி

செபி உதவி

பண மோசடி சட்டத்தின் கீழ் செபி உதவியுடன் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் விஜய் மல்லையாவிற்கு இருந்த பங்குகளை அமலாக்கத் துறை பெற்றுள்ளது என்று நமக்கு வந்த தகவல்கள் கூறுகின்றன.

சொச்ச பங்குகள்

சொச்ச பங்குகள்

அதே நேரம் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் விஜய் மல்லையாவிற்கு 27 லட்சம் பங்குகள் உள்ளது. அதுவும் விரவில் அமலாக்கத் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கூறுகின்றனர். இது குறித்து மல்லையாவிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்ட போது பதில் அளிக்க ஏதும் அளிக்கவில்லை.

அமலாக்கத் துறை
 

அமலாக்கத் துறை

பண மோசடி சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ் அந்தப் பங்குகளை எல்லாம் விரைவில் அமலாக்கத் துறை விற்க இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட உத்தரவினை அடுத்து இந்தச் சொத்துக்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இன்றை நிலை

இன்றை நிலை

வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்தின் படி ஒரு பங்கின் விலை 1,091.80 ரூபாய் என்பதால் 4,366 கோடி ரூபாய் வரை மத்திய அரசால் பணத்தினைப் பெறப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட மல்லையா வாங்கியதில் பதி கடனை திரும்பப் பெற முடியும்.

முதன் முறை அல்ல

முதன் முறை அல்ல

பண மொசடி சட்டத்தின் கீழ் இது போன்று இந்தியாவில் நடப்பது முதன் முறை அல்ல. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூவின் முதலீடுகளும் இதே போன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 மல்லையாவின் பங்குகள்

மல்லையாவின் பங்குகள்

யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் மல்லையாவிற்கு 29.46 சதவீதம் பங்குகள் இருந்ததாகவும் அதன் மதிப்பு மட்டும் 7.79 கோடி என்றும் அதில் 45.17 சதவீத பங்குகளை அடகு வைத்துத் தான் மல்லையா கடன் பெற்றுள்ளார் என்பதால் 3.52 கோடி ருபாய் தற்போது கடன் அளித்த நிறுவனங்கள் வசமாகியுள்ளது.

பண மோசடி சட்டம்

பண மோசடி சட்டம்

பண மோசடி செய்து தலைமறைவாக இருக்கும் ஒருவர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடாது என்று செபி யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த அழுத்தத்தினை அடுத்து மல்லையா அந்தப் பதவியினை ராஜிநாமா செய்தார். இதனை அடுத்து இந்த நிறுவனத்தில் இருந்த பங்குகள் செபி வசம் சென்று தற்போது அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

ப்ரூவர் ஹைனேகன்

ப்ரூவர் ஹைனேகன்

யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் டச்சு ப்ரூவர் ஹைனேகனிற்கு 43 சதவீதம் பங்குகள் உள்ளது, மீதம் உள்ள பங்குகள் பொதுப் பங்குதாரர்கள் வசம் உள்ளது.

2016-ம் ஆண்டுக் கடன் வாங்கிய நிறுவனங்கள் வசம் இருந்த பங்குளை வாங்கித் தனது சொத்தை பெருக்கிக்கொண்டது. தற்போது அமலாக்கத் துறை வசம் உள்ள பங்குகளை ஹைனேகன் வாங்கினால் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் முக்கியப் பங்குதார் ஆக மாறி நிறுவனத்தினைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Enforcement Directorate to sell Rs 4000 cr Vijay Mallya shares in United Breweries

Enforcement Directorate to sell Rs 4000 cr Vijay Mallya shares in United Breweries
Story first published: Friday, January 19, 2018, 15:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X