9 புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒரு நகரம்.. எந்த ஊர் தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

மத்திய அரசு ஏற்கனவே 90 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதாக அறிவித்துள்ள நிலையில் இன்று புதிதாக 9 நகரங்களை ஸமார்ட் சிட்டி பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் 500 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை அளிக்க முடியும். எனவே புதிய பட்டியலில் எந்தெந்த நகரங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன, தமிழகத்தில் எந்த நகரம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பரேலி, உத்தரப் பிரதேசம்

மகாபாரதத்தில் திரவுபதி பிறந்த ஊராகக் கூறும் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பரோலி புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மொராதாபாத், உத்தரப் பிரதேசம்

பித்தலை நகரம் என்று அழைக்கப்படும் உத்திரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.

சஹரன்பூர், உத்திரப் பிரதேசம்

புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உத்திரப் பிரதேசத்தில் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள நகரம் சஹரன்பூர் ஆகும். இங்கு 500 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு செய்ய இருக்கிறது.

ஈரோடு, தமிழ் நாடு

காவிரி நதிக் கரை ஓரம் அமைந்துள்ள ஈரோடு கோயம்புத்தூர், திருப்பூருக்கு அடுத்தபடியாக ஜவுளி சந்தைக்குப் பேர் போன இடமாகக் கருதப்படுகிறது. இங்கு மத்திய அரசு 00 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு செய்ய இருக்கிறது.

பீகார் ஷரீஃப், பீகார்

நளந்தா மாவட்டத்தின் தலைநகரான பீகார் ஷரீஃப் ஸ்மார்ட் நகரச் செயல்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது.

சில்வாஸா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

இந்த ஸ்மார்ட் சீடி பட்டியலில் சில்வாஸா முதலிடம் பிடித்துள்ளது.

தியூ, டமன் மற்றும் தியூ

இந்தியாவில் பத்தாவது மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ள தியூ, டமன் மற்றும் தியூ கடலோர நகரம் ஆகும். இதுவும் ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் இடம் தற்போது பெற்றுள்ளது.

கவரத்தி, லட்சத்தீவு

லக்ஷ்வதீப்பின் தலைநகரமாகக் கவரத்தி "ஸ்மார்ட்" சாலைகள், நீர் ஓடைகள், சைக்கிள் பாதைகள், நடை பாதைகள் அமைக்க இருக்கின்றனர்.

இட்டாநகர், அருணாசல பிரதேசம்

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் அருணாசல பிரதேச தலைநகரம் இட்டநகர் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Smart Cities Mission 9 new names of the list; From Tamilnadu Erode named

Smart Cities Mission 9 new names of the list; From Tamilnadu Erode named
Story first published: Saturday, January 20, 2018, 17:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns