வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் பின்னடைவு.. இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலினை உலகப் பொருளாதாரப் போரம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகளில் சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை முந்தியுள்ளன.

உலகப் பொருளாதார ஃபோரமானது ஒரு சுதந்திரமான வணிக, அரசியல், கல்வி மற்றும் சமூகத்தின் பிற தலைவர்கள் உலகளாவிய, பிராந்திய மற்றும் தொழில்துறை செயல்திட்டங்களை வடிவமைக்கும் சர்வதேச அமைப்பாகும்.

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் பங்கேற்ற மாநாட்டில் உலகப் பொருளாதார ஃபோரமானது வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகளின் பட்டியலினை வெளியிட்டது. அதில் மேம்பட்ட பொருளாதாரம் படைத்த நாடாக நார்வே இடம்பிடித்து இருந்தது. லூதியானா மீண்டும் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

தங்களது நாடுகளின் பொருளாதாரத்தினை வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வழிநடத்த வாழ்க்கைத் தரநிலைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று உலகப் பொருளாதார ஃபோரம் கூறியுள்ளது.

இந்தியா

வளரும் பொருளாதாரம் படைத்த 79 நாடுகள் பட்டியலில் இந்தியா 60வது இடத்தினைப் பிடித்துள்ளது. அதே நேரம் சீனா 15 வது இடத்தினையும், பாகிஸ்தான் 52 இடத்தினையும் படித்திருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

டாப் 5 நாடுகள்

லிதுவேனியா, ஹங்கேரி, அஜர்பைஜான், லாட்வியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் வேகமாக வளரும் பொருளாதாரத்தினைப் படைத்துள்ளன.

முக்கிய நாடுகள்

சிறு ஐரோப்பிய நாடுகளில் பட்டியலில் முக்கிய இடங்களைப் பிடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 9வது இடத்திலும், ஜெர்மனி 12வது இடத்திலும், கனடா 17 வது இடத்திலும், பிரான்ஸ் 18வது இடத்திலும், அமெரிக்கா 23 வது இடத்திலும், ஜப்பான் 23வது இடத்திலும், இத்தாலி 27வது இடத்தினையும் பிடித்துள்ளது.

அண்டை நாடுகள்

சீனா மற்றும் பாகிஸ்தான் மட்டும் அல்லாமல் இலங்கை, வங்க தேசம் மற்றும் நேப்பால் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவை விட வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது எனக் கூறியுள்ளனர்.

விமர்சனம்

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தங்களது எதிர்கால மக்களைப் பாதுகாக்க பல வழிகளை எடுத்து வரும் அதே நேரம் இன்றை மற்றும் வருங்காலத் தலைமுறையானது வணிகர்கள், அரசியல் கட்சி என அனைவரையும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

5 வகை

வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகள் குறியீடானது 5 வகைகளாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. அவை அபிவிருத்தி வளர்ச்சி விகிதம்-குறைந்து, மெதுவாகக் குறைந்து, நிலையான, மெதுவாக மேம்படுதல் மற்றும் மேம்படுதல் என்பதாகும்.

100% லாபம்

பிப்.1 பட்ஜெட் தாக்கல்.. 100% லாபம் பெற இதல முதலீடு செய்யலாம்..!

அமெரிக்கா

முடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது? முழுமையான பார்வை..

பெட்ரோல், டீசல் விலை குறையும்..!

மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WEF rates India below Pak & China in inclusive development

WEF rates India below Pak & China in inclusive development
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns