மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை குடியரசு தின சலுகையினை அறிவித்ததை அடுத்துப் புதன்கிழமை பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் 5 சதவீதத்திற்கும் கூடுதலாகச் சரிந்துள்ளன.
குடியரசு தின ஆஃபராக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது டாரிப் கட்டணங்களை 25 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது.
ஏர்டெல்
காலை 10:38 மணி நிலவரத்தின் படி பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 5.56 சதவீதம் என 27.30 புள்ளிகள் சரிந்து 463.60 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
ஐடியா செல்லுலார்
ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் காலை 10:41 மணி நிலவரத்தின் படி 5.53 புள்ளிகள் என 5.50 புள்ளிகள் சரிந்து 93.90 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஏர்டெல் ரீசார்ஜ் பேக்
ஒரு வாரத்திற்கு முன்பு ஏர்டெல் நிறுவனத்தின் ரீசார்ஜ் பேக்குகள் ஜியோவிற்கு நிகராக 399 ரூபாய்க்கு 84 நாட்கள் வரை தினம் ஒரு ஜிபி தரவு மற்றும் இலவச குரல் அழைப்புகளை அறிவித்தது.
அது மட்டும் இல்லாமல் கூடுதலாக ஒரு சிறப்பு டாப் அப் ரீசார்ஜினை அறிவித்துக் கூஉதலாக 2.14 ஜிபி தரவை பயன்படுத்தலாம் என்று அறிவித்தது.
முகேஷ் அம்பானி
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினால் புத்தாண்டு சலுகை அறிவித்த சில நாட்களில் தற்போது 25 சதவீதம் சலுகளை வழங்கியுள்ளது.
போட்டி நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ எடுத்துள்ள இந்த முடிவால் புதன்கிழமை காலை முதல் போட்டி நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதத்திற்கும் கூடுதலாகச் சரிந்து காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மூன்றாம் காலாண்டில் முதன் முறையாக ஜியோ லாபத்தினைப் பதிவு செய்துள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் லாபம் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜியோவின் 399 ரூபாய் பேக் சலுகை
ஜியோவின் 399 ரூபாய் ரீசார்ஜ் பேக்கினை வாங்குபவர்களுக்கு 84 நாட்களுக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி தரவு என இலவச குரல் அழைப்புகளுடன் அளிக்கப்பட உள்ளது.
100% லாபம்
இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..!


Click it and Unblock the Notifications