பட்ஜெட்டும், சூட்கேஸ்சும்.. சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் யூனியன் பட்ஜெட் பல சுவாரஸ்யமான பாரம்பரிய கதைகளைக் கொண்ட ஒரு நிகழ்வு ஆகும். பட்ஜெட் என்றவுடன், வரி விலக்கு, வரி விதிப்பு போன்ற எல்லாவற்றையும் தாண்டி நமக்கு ஞாபகத்திற்கு வருவது நிதி அமைச்சர் கையில் வைத்திருக்கும் பெட்டி.

இந்தப் பெட்டியை பற்றிய சுவாரஸ்யமான கதைகள் நிறைய உண்டு. நிதி அமைச்சர் தன்னுடைய சொற்பொழிவைத் தொடங்குவதற்கு இந்தப் பெட்டியுடன் தான் பாராளுமன்றத்திற்கு வருவார். வந்து பத்திரிக்கையாளர்களுக்குப் பெட்டியுடன் போட்டோ எடுத்துக்கொண்டு தான் நாடாளுமன்றத்திற்குள் செல்வார்.

18ம் நூற்றாண்டு

இந்தப் பெட்டியுடைய வரலாறு, 18ம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது. இதன் தொடக்கம் யுகே வில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆங்கிலேயரின் பாரம்பரியம் இந்தியாவையும் தழுவி கொண்டது.

வரலாறு

முதல் பட்ஜெட் பெட்டி 1860 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அதிபர், வில்லியம் எவார்ட் கிளேட்ஸ்டோன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது, ஒரு மர பெட்டியில் கருப்பு சாடின் துணியால் கட்டப்பட்டு , சிவப்பு நிற லெதர் கொண்டு மூடப்பட்டு இருந்தது.

லெதர் பை

இதற்கு முன்னர், பொதுவாக அதிபர்கள், தங்களுடைய நிதி கொள்கைகளை ஒரு லெதர் பையில் கொண்டு வந்து மக்கள் முன்னிலையில் அறிவிப்பார். கிளாட்ஸ்டோன் அவர்கள் தான் நிதி கொள்கைகளை வைக்க இந்த மாதிரி ஒரு பெட்டியை அறிமுகப்படுத்தியவர். பொதுவாகச் சபையில் அவருடைய உரையாடல் மிக நீளமாக இருக்கும். அந்த நேரம் அவரது ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க இந்தப் பெட்டி அவசியமானதாக இருந்தது.

கிளாட்ஸ்டோன் பாக்ஸ்

கிளாட்ஸ்டோன் பயன்படுத்திய பெட்டியின் பெயர் கிளாட்ஸ்டோன் பாக்ஸ் என்றே அழைக்கப்பட்டது. இதன் பின் இந்த நாகரீகம் உலகம் முழுவதும் பரவியது. இது தான் அந்தப் பெட்டி.

பிரெஞ்சு மொழி

பட்ஜெட் என்ற ஆங்கில வார்த்தை பௌஜெட் "Bougette" என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் "சிறிய பை" என்பதாகும். யுகே வில் இதனைப் பட்ஜெட் பாக்ஸ் என்று அழைப்பர். இந்தியாவில் இதனைப் பிரீப் கேஸ் அல்லது பெட்டி என்று கூறுவார்.

பிரீப் கேஸ் என்ற பெட்டி

யுகே வில் பாரம்பரியமாக ஒரு சிவப்பு பெட்டியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பெட்டியை ஒரு அதிபர் அடுத்த அதிபரிடம் ஒப்படைப்பார். அதுவரை பயன்படுத்தப்பட்ட பெட்டி மிகவும் பழையதாக ஆனதால், 2011ம் ஆண்டு ஜார்ஜ் ஆஸ்போர்ன் அவர்கள் ஒரு புதிய பெட்டியை அறிமுகப் படுத்தினார்.

மேலே உள்ளது, ஜார்ஜ் ஆஸ்போர்ன் அவர்கள் கையில் புதிய பட்ஜெட் பாக்ஸ் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஆகும் ..

 

இந்தியா

இந்திய நிதி அமைச்சர்கள், சிவப்பு, கருப்பு, பழுப்பு போன்ற பல நிறங்களில் பட்ஜெட் பெட்டியை வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்தியாவில், ஒரு நிதி அமைச்சர் அடுத்த நிதி அமைச்சருக்கு இந்தப் பெட்டியை வழங்குவது போன்ற ஒரு பாரம்பரியம் இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட நிறமும் இதற்காகச் சிபாரிசு செய்யப் படவில்லை.

இந்திய நிதி அமைச்சர்கள் பயன்படுத்திய பெட்டிகள்

முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சிங் அவர்கள் பயன்படுத்திய பெட்டியில் பக்கிள் மற்றும் வார்கள் உண்டு. , முன்னால் நிதி அமைச்சர் மன்மோகன் சிங்க் அவர்கள் பயன்படுத்திய பெட்டி,கிளாட்ஸ்டோன் பெட்டியை போல் தோற்றமளிக்கும். இது கருப்பு நிறத்தை உடையது.

ப.சிதம்பரம்

முன்னாள் நிதி அமைச்சர் திரு.சிதம்பரம் அவர்கள் பயன்படுத்திய பெட்டி, லெதர் பெட்டியாகும். இது ஆங்கிலேயர்கள் வைத்திருப்பதைப் போன்று இருக்கும். தற்போதைய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள், பழுப்பு நிறத்தில் ஆன பெட்டியை வைத்திருப்பார். இந்தப் பெட்டியை இவர் 2015ம் ஆண்டு முதல் வைத்திருக்கிறார்.

5 பட்ஜெட்கள்

இந்தியாவை வலிமைப்படுத்திய 5 பட்ஜெட்கள்.. அருண் ஜேட்லி இதை செய்வாரா..?

சுவாரஸ்யமான விஷயங்கள்..!

மத்திய பட்ஜெட்டைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Story Behind the Union Budget Briefcase

The Story Behind the Union Budget Briefcase
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns